இனவலியை தொடர்ந்தும் காயப்படுத்தி காறித்துப்பும் பரசுராமன்

நீண்ட நெடிய 50000 ஆண்டு வரலாறு கொண்ட எமது இனத்தின் மொழியின் வலிமை எமக்கு உண்டு. இதை கனடாவில் வாழும் பரசுராமன் உணராமல் அல்லது உணர்வதற்கான அறிவு குன்றியவராக தமிழர்களின் நல்ல எண்ணங்களை செயற்பாடுகளை இழிவுபடுத்தி வருகிறார்.கனடாவில் கடந்த 30 ஆண்டுகளாக இனவலியை சுமப்பதாக நடித்த பலரின் முகங்கள் சட்டவரைபு 104 கிழித்துக் காட்டியிருக்கிறது.

அதில் முதன்மையான தமிழின் தாழ்வுமனத்தோடும் தமிழர்களின் இனவலியை காயப்படுத்தும் காழ்ப்புணர்வோடும் தமிழ்த்தேசியப்பரப்பில் தமிழ்த்தேசியம் பேசுபவர்களை யும் சிங்கள ஆயுத பாணியில் கொலைமிரட்டல் விடுத்தும் கனடா மண்ணில் கனடா வாழ் மக்களுக்கு அச்சுறுத்தலாக குரல் கொடுத்து வருபவர் பரசுராமன்.இவரிடம் மொழியறிவோ இனவறிவோ ஈழமண்ணின் வரலாற்று அறிவோ சைவத்தின் அறிவோ இன்றி உலகில் வாழும் 12 கோடி மக்களின் பெருமையை உரிமையை இந்துத்துவ என்ற கொள்கை கோட்பாடு அற்ற அடாவடித்தனம் நிறைந்த கூட்டத்தின் அடிமைகளாக மாற்ற துடிப்பவர் பரசுராமன்.இவர் தமிழரின் இறைமைக்கு கனடாவில் தமிழகத்தில் ஈழத்தில் அறிவாயுதம் ஏந்தும் அரசியலை காறித்துப்பி இழிவுபடுத்தி வருகிறார்.

குறிப்பாக சிங்கள பாணியில் கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவது கனடா சட்ட ஒழுங்குக்கு பாரிய குற்றமாகும். இவரால் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எவரையும் சிங்கள ஆயுத பாணியில் கொலை செய்யலாம் என்ற அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள்.இந்த தமிழின அழிப்பு கல்வி அறிவூட்டும் கிழமை சட்டவரைபு 104 க்கு  எதிராக தமிழின் வலியை தொடர்ந்து காயப்படுத்தியவர் பரசுராமன்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *