இனவெறியைக் கக்கி ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த  உலகநாடுகள்.

சிங்கள மக்கள் தமிழீழ மக்களின் உரிமைப்போரை பயங்கரவாதிகளின் போராக பொய்யுரைத்தவர்கள்.சிங்கள மக்கள் தமிழர்களைக் கொன்ற அரச தலைவர்களை வரலாற்று வழியில் பெரும்பான்மை வாக்குகள் மூலம்  அரசியல் அதிகாரத்தை வழங்கி தொடர்ந்தும் தமிழீழ மக்களை அழிப்பதற்கு   சிங்கள இனவெறியைக் காக்கினார்கள்.சிங்கள மக்களின் இனவெறி கொண்ட வாக்கை சிங்கள இனவெறியரச தலைவர்கள் உலகநாடுகளுக்குச் சொல்லி ஈழத்தமிழர்களை பயங்கரவாதிகள் என்ற முத்திரையைப் குத்தினார்கள்.சிங்கள மக்களோ சிங்கள அரசோ மனிதப்பண்புக்கு எதிரான இனவெறியை தமிழர்கள் மீது கக்கி உலகவரலாற்றில் மிகப்பெரிய இனவழிப்பைச் செய்தார்கள்.தமிழின அழிப்பில் உலகநாடுகளின் நூறு விழுக்காடு பங்களிப்போடு 170000 தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்.

தமிழீழ போர்ப்படைக்கட்டமைப்பு பொருளாதாரக்கட்டமைப்பு தமிழீழ அரச கட்டமைப்பு தமிழர்களின் பண்பாட்டுக்கட்டமைப்பு கடத்ற்தொழில் கட்டமைப்பு வேளாண்மைக் கட்டமைப்பு தற்சார்பு பொருளாதாரக்கட்டமைப்பு அனைத்தையும் அழித்தவர்கள் சிங்களவர்கள்.அதற்கு துணை நின்றவர்கள் ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய ஒன்றியம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்கிறோம் எனச் சொல்லி தமிழர்கள் மீது இனவெறியைக் கக்கிய உலகப்பொது அமைப்புகள்,தமிழர்களின் இனப்படுகொலையை உலகமக்களின் முன் கொண்டு சேர்க்க மறுத்து இனவெறியை தமிழர்கள் மீது கக்கி தமிழினப்படுகொலையை மூடிமறைத்த உலக ஊடகங்கள்.

மேலே சொல்லப்பட்ட அனைத்து உலக இனவெறியர்கள் இன்று யுக்ரேன் மீது ரசியா தொடுத்த போரை உலகமக்கள் முன் வெளிப்படையாக காட்டி வல்லாதிக்க ரசியாவுக்கு எதிராக எல்லா நாடுகளும் ஒன்று சேர்ந்து போர்க்கொடி தூக்குகிறார்கள்.உலகநாடுகள் தமது நலன்சார்ந்த வளச்சுரண்டலை முன்நிலைப்படுத்தியே தமிழீழ மக்களுக்களின் அழிவுக்கு துணை நின்றார்கள்.உக்ரேன் ரசியப் போரில் தமிழீழ கட்டமைப்பை அழித்த சிங்களநாடும் சிங்கள நாட்டிற்கு துணை நின்ற நாடுகளும் அழிந்தால் தான் கொல்லப்பட்ட 170000 ஈழத்தமிழர்களின் உயிர் சாந்தி பெறுவதோடு தமிழீழ மண் விடுதலை பெறுவதற்கான வாய்ப்பு எமக்கு கிடைக்கும்.மூன்றாம் உலகப்போர் தொடங்கி தமிழர்களை அழித்த நாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டு அழிவதை உலகத்தமிழர்கள் பார்க்கவேண்டும்.

ஈழத்தமிழர்களின் இறைமையைப் பாதுகாக்கக்கூடிய வலிமையும் ஆளுமையும் தமிழீழ குடியரசுக்கு மட்டுமே உண்டு.எமக்காக தம் உயிரை ஈகம் செய்த மாவீரரை வணங்குவதற்கு  எவரின் தடைகள் இன்றி மனம் உருகி வழிபடும் உரிமை தமிழீழ குடியரசில் மட்டுமே உண்டு.சிங்கள இனவெறியரசால் இனவழிப்புப் செய்த எமது உறவுகளுக்கு ஒப்பாரி வைத்து எமது வலிச்சுமையின் வலியை தீர்க்கும் இடமும் தமிழீழக்குடியரசில் மட்டுமே எமக்குக் கிடைக்கும்.

தமிழீழ மக்களின் இறைமையைப் பாதுகாக்க தமிழர்கள் அரசியல் அதிகாரம் கொண்ட மக்களாட்சியே தமிழர்களுக்கான தீர்வு.

தமிழர்களின் ஒற்றுத்தீர்வு தமிழீழம் ஆகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *