எம் இன இழவுக்கு அழாதவனுக்காக நாம் அழமாட்டோம்.அழக்கூடாது.அழமுடியாது.

3 ஆவது  உலகப்போரில் உலக , தமிழின அழிப்பாளர்கள்  எம் கண்முன்னே அழிவதுதான் தமிழரின் அறம். 

2500 ஆண்டுகளாக சிங்கள மக்களால் அளப்பரிய அழிவுகளை ஈழத்தமிழர்கள் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். சிங்கள மக்களும் சிங்கள அரசும் புலம்பெயர் தமிழர்களின் நடைமுறை வாழ்க்கையில் பயங்கரவாதிகள் என்ற பொய்யான முத்திரையைப் குத்தி ஈழத்தமிழர்களை தொடர்ந்து அழிப்பதில் திடமாக செயற்படுகிறார்கள்.சிங்கள மக்களால் அளப்பரிய அழிவுகளை சந்தித்த நாம் சிங்களமக்களை அழிக்கவேண்டும் என்ற இழிவான முடிவுக்குக் செல்லாமல் தொடர்ந்து ஈழமண்ணில் எமக்கான உரிமையைப் பெறுவதற்கான செயல்களில் செயற்படுகிறோம்.

இன்று தமிழின அழிப்பால் தொடர்ந்து பல துயரங்களை தமிழர்கள் சந்தித்துவருகிறோம். தொடர்ந்து ஆதிக்குடிகளான எமக்கு உரிமைகளை வழங்க மறுத்து 2 ஆம் தர குடிமக்களாக தொடர்ந்தும் நடத்தி வருகிறார்கள்.ஆனால் இன்று சிங்கள மக்கள் மிகப்பெரிய பொருளாதார சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.ரசியா உக்ரேன் போருக்காக ஈழத்தமிழர்கள் ஒப்பாரி வைக்கமாட்டோம்.வைக்கக்கூடாது.உலகநாடுகள் தமிழின அழிப்பில் ஒன்றாக நின்று உலக படை வலிமைக்கு ஈடாக கட்டியெழுப்பிய தமிழீழப்படையை ஈவு இரக்கமின்றி அழித்தார்கள்.

எம்மினத்தை அழித்து சிங்கள அரசுக்கு துணையின்றி உரிமைக்காக  போராடிய  எம்மை அழித்த எந்தநாட்டுக்காகவும் நாம் குரல்கொடுக்கமாட்டோம்.குரல் கொடுக்கக்கூடாது.எம்மினத்தை அழித்தவர்கள் எம் கண்முன்னே அழிவதை நாம் கண்குளிரப் பார்க்கவேண்டும்.அதுதான் தமிழினத்தின் அறம்.

அடித்தவனை திருப்பி அழிப்பது தமிழனின் அறம்.

 கனடாவில் லிபரல் கட்சியும் கனடா முதன்மை அமைச்சர் யசுட்டின் றூடோவும் தொடர்ந்தும் தமிழின அழிப்பு நீதிக்காக எந்த ஆக்கபூர்வமான செயற்பாட்டையும் முன்னெடுக்கவில்லை.கனடாவிலும் இனப்பாகுபாடு  நிறையவே  அரசியலில் கையாளப்படுகிறது.ஈழத்தமிழர்கள் கனடா நடுவண் அரசால் கனடாவில் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுகிறார்கள்.போரால் பாதிக்கப்பட்ட மக்கள் கப்பலில்  வந்த 492  தமிழர்களையும் பயங்கரவாதிகள் என்ற  முத்திரை குத்தி கனடாவாழ் தமிழர்களை இழிவுபடுத்தியவர்கள் அன்றைய ஆளும் மற்றும் எதிர்க்கட்சியும் ஆகும்.2009 .இனப்படுகொலை உலகநாடுகளின் உதவியோடு சிங்கள அரசு அழித்தபோது கனடாவாழ் தமிழர்கள் தெருக்களில் இறங்கி போராடினார்கள். சிங்கள அரசால் சுற்றிவளைக்கப்பட்ட 1,65000 தமிழர்களை காப்பாற்ற போரை நிறுத்தும்படி கனடாவாழ் தமிழர்கள் வீதிகளை முடக்கினார்கள். உலகநாடுகளின் உதவியோடு 165000 தமிழர்களை சிங்கள இனவெறி அரசு  அழித்தது. 

3 ஆம் உலகப்போரில் எம் இனத்தை அழித்த நாடுகள் அழிவதை தமிழர்கள் நாம்  கண்டு  மகிழ்ச்சி  கொள்ளும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். இந்த உலகப்போரில் தமிழின அழிப்புக்கு நீதி கிடைக்காமல் சிங்கள அரசுக்கு துணைநின்ற தமிழினத்துரோகிகளும் அழிவார்கள்.

எம் இன இழவுக்கு அழாதவனுக்காக நாம் அழமாட்டோம்.அழக்கூடாது.அழமுடியாது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *