கடற்சூரியனை ஆவணப்படுத்த தவறிய அமைப்புக்கள்

 

2009 ஆம் ஆண்டில் சிங்கள அரசால் நடத்தப்பட்ட தமிழினப்படுகொலையில் இருந்து தப்பி 492 ஈழத்தமிழர்கள் தங்கள் உயிர் துறந்தாலும் பரவாயில்லை சிங்கள இனவெறி அரசின் கொடிய ஆட்சியில் இருந்து தப்பி கடல்வழியாக கனடாவின் மேற்குப் பகுதியான வன்கூவர் விக்டோரியாப் பகுதியை வந்தடைந்தார்கள்.தமிழினப்படுகொலையில் இருந்து தப்பி வெறும் உயிரோடு கனடா மண்ணுக்கு வந்த தமிழர்களை பயங்கரவாதிகள் என்ற முத்திரையைக் குத்தியது கனடாஅரசும் சிங்கள இனவெறியரசும்.492 தமிழர்கள் வன்கூவர் கரையை அடைந்தபோது அவர்களை  தமிழ்அமைப்பும் அதனோடு வழக்கறிஞர்களும் இனப்படுகொலையிலிருந்து தப்பி வந்த உறவுகளை வரவேற்கச் சென்றார்கள்..

கனடாவில் ஏதிலிகளாக பதியப்பட்டபின் கனடாதமிழ் அமைப்பு 492 தமிழர்களின் பெயர் பட்டியலையும் சிங்கள இனவெறியரசிடம் கையளித்தது.492 தமிழர்களையும் வைத்து தனது அரசியலுக்கு வலுச்சேர்த்தவர்இன்றைய அரசியலாளர்.இந்த அரசியலாளர் இனப்படுகொலையை ஏற்காதவர் ஆனால் இன்றுவரை இனப்படுகொலைத்தீர்மானத்தை கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர். வழக்கறிஞர்கள் கப்பலில் வந்த தமிழர்களிடம் கட்டுக்கட்டாக பணத்தைக் கறந்தார்கள்.இந்த வழக்கறிஞர்கள் காசு கறந்த அளவுக்கு அகதிக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையில் தகவல் திரட்டி வெல்லமுடியாதபோது பறை ஊடகக் காணொளிகள் ஒப்படைத்தபின்தான் கப்பலில் வந்தவர்களின் அகதிக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.இந்த காணொளிகளை பறை ஊடக அனுமதி பெறாமலே இவ்வழக்கறிஞர்கள் பயனபடுத்தியுள்ளார்கள்.492 என் உயிர் உறவுகளுக்கான வாழ்வுக்காக மட்டுமே பறை ஊடகம் அமைதி காக்கிறது.பறை ஊடகப்பணி இனப்படுகொலையிலிருந்து தப்பிய உறவுகளுக்கு உதவியைக் கேள்வியுற்று மகிழ்ச்சி கொண்டோம்.

இன்று இந்தக் கப்பல் இனப்படுகொலையில் இருந்து தப்பி வந்த தமிழர்களுக்கான ஆவணப்பொருள்.ஆனால் இதை இதுவரையும் ஆவணப்படுத்த ஒரு அமைப்பினரும் முன்வரவில்லை.கனடாவில் 400அமைப்புகள் 30சைவக்கோயில்கள் 50க்கு மேற்பட்ட கிறித்தவ தேவாலயங்கள் 20க்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் என தமிழ்மக்களின் பணத்தில் இயங்கும் இந்த பொது நிறுவனங்கள் எவ்வளவு அக்கறையோடு செயல்படுகிறார்கள் என்பதை பாருங்கள்.நிதி திரட்டும் பணியில் உயிரைக் கொடுத்து பணத்தைத் திரட்டுவார்கள்.ஏமாந்த வணிகர்கள் ஏமாந்த பொதுமக்கள் தொடர்ந்தும் இனத்தின் மீது அக்கறை இல்லாதவர் கையுக்குத்தான் அள்ளிக் கொடுத்து ஏமாறுவதில் சுகம் காண்கிறார்கள்.

கப்பலில் வந்த 492தமிழர்களும் அறிவு ஆற்றல் ஆளுமை இனப்பற்று அரசியல் அறிவு என பல்துறை வல்லுனராக வெறும் உயிரோடு வந்தவர்கள்.ஆனால் தமது வரண்ட வாழ்வை வளமான அறிவு ஆற்றல் ஆளுமை  கனடா அரசின் அரசியல் உரிமையைப் பயன்படுத்தி 11 ஆண்டுகளில் உயர்ந்து நிற்கிறார்கள்.

நாம் பயங்கரவாதிகள்  என்ற பொய்ச் செய்தியை கனடா மண்ணில் வைத்து உடைத்தெறிந்த பெருமைக்குரியவர்கள்.

கனடாவின் வளத்தையும் தமது அறிவு ஆற்றல் ஆளுமை கனடா மண் வழங்கிய அரசியல் உரிமை அனைத்தையும் இணைத்து கனடா மண்ணை 490 தமிழர்கள் வளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எமக்கு ஒரு எடுத்துக்காட்டு.தமிழர் என்கிற இனம் அழிக்கப்பிறந்த இனம் அல்ல ஆக்கப்பிறந்த இனம் ஆளப்பிறந்த இனம்.அதிலும் குறிப்பாக ஈழத்தமிழர்களை பாலைவனத்தில் கொண்டு சென்றுவிட்டாலும் அப்பாலைவனத்தை பசுமை நிலமாக சோலைவனமாக மாற்றும் ஆளுமை உண்டு என்பதற்கு இனப்படுகொலையில் இருந்து தப்பி கனடா வந்த தமிழர்கள் முதன்மையான எடுத்துக்காட்டு.

இவர்களை தமிழ் அமைப்பு வஞ்சித்திருக்கிறது.தமிழ்அரசியல்வாதி வஞ்சித்திருக்கிறார்.தமிழ் சட்டத்தரணி பணத்தை கறகறவென கறந்திருக்கிறார்.

ஆனாலும் இவ்வளவு துயரங்களையும் தாண்டி கனடாவை வளப்படுத்திக் கொண்டு வஞ்சித்த தமிழர்களையும் அரவணைத்துக் கொண்டு கனடாவில் வாழும் உங்களை உலகத்தமிழர்கள் கைகூப்பி வணங்குகிறோம்.

கப்பலில் வந்த தமிழர்களின் வேண்டுகோள் இனப்படுகொலைத் தீரமானத்தை கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும்.ஆனால் தமிழ் அரசியல்வாதி தமிழினப்படுகொலைத்தீர்மானத்தை கனடா நாடாளுமன்றத்தில் இதுவரைநிறைவேற்றவில்லை. அவர் தொடர்ந்தும் இனப்படுகொலைத்தீர்மானத்தை நிறைவேற்றமாட்டார் என்பது பலருக்குத்தெரியும்.அடுத்த தேர்தலில் அவர் போட்டியிடுவதில் எந்தப் பயனும் இல்லை.இவரால் அரசியல் ரீதியாக ஏமாற்றப்பட்ட வர்கள் பலர்.அடுத்துவரும் தேர்தலின்போது பார்ப்போம்கப்பலில் வந்த தமிழர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகயான இனப்படுகொலைத் தீர்மானம்  கனடாவில் நிறைவேற்றப்படவேண்டும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *