கனடாத்தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் 2021 -2022ஆம் ஆண்டுக்குரிய உறுப்பினர் கூடலும் புதிய ஆட்சிக்குழு தெரிவும் 2052 துலைத்திங்கள் 16 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (October31,2021)கனடா ஒன்ராரியோ மாநிலம் இசுக்காபுரோ நகராட்சியில் உள்ள யே.யே. விருந்தினர் மண்டபத்தில் மிக சிறப்பாக பண்பட்ட உறுப்பினர்கள் புடைசூழ கூடல் சிறப்பாக நடைபெற்றது.
கடந்தகால சில கசப்பான சிக்கல்களையும் தாண்டி க.த.வ.சம்மேளனத்தை கடந்த மூன்று ஆண்டு காலத்தில் பல ஆக்கபூர்வமான செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு செயலாக்கம் பெற்றன.க.த.வ.சம்மேளனத்திற்கான சொந்தக் கட்டிடம் சாந்தா பஞ்சலிங்கம் ஆட்சிக்குழு முதல்வராக வரும்போது சொல்லியிருந்தார்.அதை சாந்தா பஞ்சலிங்கம் செய்து காட்டியுள்ளார்.
புதிய க.த.வ.சம்மேளன ஆட்சிக்குழு 2021 – 2022
ஆட்சிக்குழு முதல்வர்
வீணா தேவதாசு
துணை முதல்வர்
கல்யாணி நாதன்
உள்ளக துணை முதல்வர்
அரி ஆரியன்
நிதி துணை முதல்வர்
விது இராமச்சந்திரன்
துணை முதல்வர்
குமூக ஒருங்கிணைப்பு தீபன் ராச்
துணை முதல்வர் உறுப்பினர் தொடர்பு
சக்தி பத்மநாதன்
ஆட்சிக்குழு உறுப்பினர்
கிறிஸ்டின் சீவரட்ணம்
ஆட்சிக்குழு உறுப்பினர்
பூரணி சொர்ணபாலா
ஆட்சிக்குழு உறுப்பினர்
கெளதமி தனஞ்செழியன்
கடந்த காலத்தில் அச்சுறுத்தல் அடாவடித்தனம் என பல்வேறு வடிவில் க.த.வர்த்தக சம்மேளனம் சுற்றிவளைந்தபோதும் அவை அனைத்தையும் மனம் தளராத உடைத்தெறிந்த 2020-2021 க.த.வ.சம்மேளன ஆட்சிக்குழுவினர்கள் தமிழ் குமூகம் சார்ந்த பலபணிகள் முன்னெடுக்கப்பட்டதால் உறுப்பினர்களின் ஆதரவும் சிறப்புப் பெற்றது.அமைதியான புதிய ஆட்சிக்குழு தெளிவானது உறுப்பினர்கள் மத்தியில் மிகப்பெரிய கசப்பான கடந்த கால அடாவடித்தனம் அச்சுறுத்தல்களை மண்டபத்தில் கூடிய உறுப்பினர்களால் இரை மீட்கப்பட்டது.இன்றைய கூடல் பல ஆக்கபூர்வமான பட்டறிவைப் பகிரும் களமாக உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.
அமைதியான அறம்சார்ந்த ஆற்றலும் ஆளுமையும் கொண்டவர்களின் கைகளில் இருந்து கனடாத்தமிழர் வர்த்தக சம்மேளனம் வளர்ச்சிப்பாதையில் செல்கிறது என்ற மனநிறைவோடு உறுப்பினர்களின் கூடல் நிறைவு பெற்றது.புதிய ஆட்சிக்குழுவினர்களின் பணி சிறப்பாக அமைய உலகில் வாழும் 12 கோடி தமிழர்கள் சார்பாகவும் கனடா ஊடகங்கள் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.நிறைந்த கூடலிலும் குறைகள் உண்டு.குறைகளை எதிர்காலத்தில் நிறைவாக்கும் பொறுப்பும் க.த.வ.சம்மேளனத்திற்குரியது.
கடந்த 25ஆண்டுகளுக்கு மேலாக கனடாமண்ணில் அடைமானக்கடன் வீடுவிற்பனை மோசடியின் பெயர்போன ஓர் உறுப்பினர் இக்கூடலில் இணைந்ததை பல உறுப்பினர்கள் பறை ஊடகத்தின் காதில் போட்டார்கள். பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொலைபேசியூடாக பறை ஊடகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்கள்.
1.கனடாவாழ் தமிழ்மக்களை ஏமாற்றி நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்களை நடுவீதியில் துயர வாழ்க்கைக்குள் தள்ளிய உறுப்பினருக்கு சில நடவடிக்கைகளை க.த.வ.சம்மேளனம் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பறை ஊடகம் முன்வைக்கின்றது.
2.நீண்டகால உறுப்பினர் க.த.வ.சம்மேளன கூடலில் போது மது அருந்தியிருந்ததாக உறுப்பினர்கள் பலர் குற்றம் சாட்டியிருந்தார்கள்.குறிப்பிட்ட உறுப்பினர் எதிர்காலத்தில் இதை தவிர்ப்பது அமைப்புக்கும் உறுப்பினர்களின் சுயமரியாதையையும் பாதுகாக்கும்.
எமது தமிழ்மக்களுக்காக உண்மையாக உழைக்கும் உறுப்பினர்களின் மதிப்பை இழக்கும்படி நடப்பவர்கள் தாமாக ஒதுங்கவேண்டும் இல்லையேல் அமைப்பின் மதிப்பை தரக்குறைவாக்கும்செயற்பாடுகளை அமைப்பு ஒரம்கட்டுவது நல்ல பணியாகும்.