கனடா நாடாளுமன்றத்தில் “தமிழீழ தனியரசு”பிரகடனம் செய்யும் வலிமையும் ஆளுமையும் கரி ஆனந்தசங்கரியின் கையில்

75 ஆண்டுகளாக ஈழமண்ணில் சிங்களவர்களால் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு வந்தார்கள்.இனப்படுக்கொலைக்கான ஒற்றைக்காரணம் தமிழருக்கான உரிமைகள் சிங்களமக்களால் மறுப்பதே.ஈழமண்ணில் 2500ஆண்டளவில் வந்து குடியேறியவர்கள் சிங்கள மக்கள். 20000 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் தொன்குடிகளாக வாழ்கிறார்கள் என்ற செய்தி ஈழத்து அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.சிங்களவர்கள் ஈழமண்ணுக்கு வருமுன் தமிழ்மொழி பேசும் தமிழர்கள் மட்டுமே வாழ்ந்தார்கள்.சிவமதம் மட்டுமே தமிழர்கள் பின்பற்றிய வாழ்க்கைநெறி ஆகும்.

கள்ளத்தோணியில் வந்த சிங்களவர்களுக்கு எமது மண்ணில் வாழ்வதற்கு ஒரு சிறுபகுதியை தமிழர்கள் வழங்கினார்கள்.அதுவே கோட்டையரசாகும்.2500 ஆண்டாக தமிழர்கள் இனப்படுகொலை செய்தார்கள் என்ற அடிப்படை அரசியல் அறிவு ஒவ்வொரு தமிழர்களுக்கும் தேவை.அதிலும் குறிப்பாக தமிழர்களின் வாக்கைப் பெற்று அரசியல் செய்ய துடிக்கும் அரசியலாளர்களுக்கு இந்தப் புரிதல் வேண்டும்.

கடந்த பல ஆண்டாக கனடா நடுவண் அரசில் கரி ஆனந்தசங்கரி அவர்கள் உறுப்பினராக இருந்து வருகிறார்.ஆனால் தமிழர்களின் இனப்படுகொலையின் வலியை சுமப்பதற்கு பின்வாங்குகிறார் என்ற குற்றச்சாட்டு மக்களால் முன்வைக்கப்படுகிறது.

ஐநா மன்றத்தால் சிங்கள அரசுக்கு காலநீடிப்பு வழங்கியதில் கனடாவிற்கு அதிகபங்கு உண்டு.அதிலும் லிபரல் கட்சியே இந்த காலநீடிப்பை வழங்குகிறது.இந்த லிபரல் கட்சி நாடளுமன்ற உறுப்பினராக கரி ஆனந்தசங்கரி இருந்தார். ஆனால் காலநீடிப்புக்குரிய எதிர்வினையை தெரிவிக்காமல் அமைதி காத்தவர் கரி ஆனந்தசங்கரி.கனடா நாடாளுமன்றத்தில் தமிழின அழிப்புக்கான தீர்மானத்தை நிறைவேற்றத் தவறியவர் கரி ஆனந்தசங்கரி.

தமிழீழப்போராளி மாமனிதர் கமலாம்பிகை அம்மாவை இனப்படுகொலையின் கண்கண்ட சாட்சியாகக் கொண்டு அதற்கான அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்காமல் காலம் தாழ்த்தியதாக வலி சுமந்த மக்களின் குற்றச்சாட்டுஇன்று சிங்கள மக்கள் மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் மாட்டி உரிமைக்காக போராடிய தமிழர்களை அழித்த சிங்கள மக்கள் சோத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள்.தமிழர்களை இனப்படுகொலை செய்தபோது வீதிகளில் வெடி கொளுத்தியும் கிரிபத் சாப்பிட்டுக் கொண்டாடியவர்கள் சிங்களவர்கள்.

2500 ஆண்டாக மிக மோசமான இனப்படுகொலையைச் செய்தும் அதையும் தாண்டிஈழத்தமிழர்கள் வலிமையோடும் ஆளுமையோடும் உலகப்பந்தில் உருண்டு விளையாடுகிறோம்.ஆனால் ஊரான் வீட்டு நிலத்தை வளப்படுத்தி உருண்டு விளையாடும் நாம் இழந்த மண்ணுக்குரிய உரிமைக்குரல் எழுப்பவேண்டிய நேரம்.

கனடா நாடாளுமன்றத்தில் கனடாவில் தமிழின அழிப்பால் கனடாவில் குடியேறி வாழும் பல இலட்சம் தமிழர்களுக்கு தமிழீழ தனியரசே ஒற்றைத் தீர்வு என்பதை தமிழீழத்தை பிரகடனம் செய்யவேண்டிய சிறந்த காலம்.

2500 ஆண்டாக தமிழர்கள் அடைக்கலம் கொடுத்த சிங்கள மக்கள் தமிழர்களின் இறைமையை அழித்து இன்று சோத்துக்காக வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள்.ஆகவே சிங்களவர்களோடு நாம்தொடர்ந்து சேர்ந்து வாழ்ந்தால் தொடர்ந்து தமிழர்கள் அழிவை சந்திப்பார்கள்.ஆகவே தமிழர்களின் இறைமையைப் பாதுகாக்கவேண்டுமென்றால் தன்னாட்சி நிறைந்த தமிழீழத்தை கனடா நாடாளுமன்றத்தில் பிரகடனம் செய்வது அவசியம்.

தமிழரின் இறைமையென்பது உயிர்,தன்மானம்,பெண்கள் பாதுகாப்பு,நிலம்,தமிழரின் வளம்,பண்பாடு,கலை,மொழி,பொருளாதாரம்,சமூககட்டுமானம் என்பனவாகும்.

இன்னும் காலம் கடந்துவிடவில்லை.கனடா நாடாளுமன்றத்தில் 1976 ஆண்டு தமிழீழக்கோரிக்கை நிறைவேற்றி 1977 ஆம் ஆண்டுசிங்கள அரசின் யாப்பின் கீழ் நடந்த தேர்தலில் தமிழர்கள் சிங்கள அரசிலிருந்து பிரிந்து சென்று தமிழீழ அரசை நிறுவுவதற்கான ஆணையை தமிழீழ மக்கள் வழங்கிவிட்டார்கள்.1977 ஆம் ஆண்டு தமிழீழ மக்கள் சிங்கள அரசிலிருந்து பிரிந்து தமிழீழக் குடியரசை நிறுவியதை அடிப்படையாகக் கொண்டு கனடா நாடாளுமன்றத்தில் தமிழீழத்தை பிரகடனம் செய்வது காலத்தின் தேவை.அதை செய்யக்கூடிய வலிமையும் ஆளுமையும் கரி ஆனந்தசங்கரியின் கையில் உண்டு.

இக்கட்டுரையில் உலகத்தமிழர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் 100 விழுக்காடு உள்ளடங்கியுள்ளது.  வெளியீட்டாளர்கள் 100விழுக்காடு இக்கட்டுரைக்கு பொறுப்பானவர்கள் அல்ல.வெளியீட்டாளர்கள் 100 விழுக்காடு தமதுகருத்தையோ எண்ணத்தையோ இக்கட்டுரையில் வெளியிடவில்லை.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *