சிறப்புச் சொற்பொழிவு

கனடாவில் உலகத்தமிழரில் இணைந்து பணியாற்றியவர் மாதகல் கண்ணன்.

 விடுதலைப்புலிகளைச் சொல்லி உலகத்தமிழர் பலகோடி பணத்தினை மக்களிடம் திரட்டினார்கள் என்பதோடு தானும் பணம் திரட்டியதை ஏற்றுக்கொண்டிருக்கிறார். விடுதலைப்புலிகளைச் சொல்லி பணம் திரட்டியவர்களில் ஒரு சிலர் பிழைவிட்டிருக்கலாம்.அதற்காக எல்லோரையும் தவறாகச் சொல்லக்கூடாது என்பதை  வலியுறுத்தி சொல்லியிருக்கிறார்.

உலகத்தமிழர் விடுதலைப்புலிகளைச் சொல்லி பலகோடி கனடாவெள்ளிகளைத் திரட்டியவர்கள் இதுவரை அப்பணத்திற்கான கணக்கு எஎதையும் பற்றி பொதுமக்களுக்கு பதிலளிக்காமல் 11 ஆண்டுகளைக் கடந்துவிட்டார்கள்.பணம் திரட்டியவர்களோடு பயணித்தவர்கள் இதுவரை அமைதி காப்பது கனடாவாழ் தமிழர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

ஈழமுரசு சார்பாக தமிழீழ விடுலைப்புலிகளின் தலைவர்,மேதகு,தேசியத்தலைவரின்பிறந்தநாள் விழாவை மாவீரர் நாள் விழா ஒழுங்கமைப்பாளர்கள் தொர்ந்து புறக்கணித்துவந்திருக்கிறார்கள்.அதேபோல மாவீரர் நாளில் மாவீரர் நாள் நிகழ்வை  தேசியத்தலைவர் பிறந்தநாள் ஒழுங்கமைப்பாளர்கள்புறக்கணித்துவந்துள்ளார்கள். உலகத்தமிழருக்குள் பிளவு வந்தபின் மாவீரர்நாளுக்கு இசைநிகழ்ச்சி வழங்கும் வானம்பாடிகள் குறிப்பாக 2009க்குப்பின் தேசியத்தலைவரின் பிறந்தநாளில் இசைநிகழ்ச்சி வழங்குவதில்லை.

விடுதலைப்புலிகளைச் சொல்லி பணம் திரட்டிய உலகத்தமிழரின் தலைவர்கள், செயலாளர்கள், நிதிப்பொறுப்பாளர்கள், பிராந்திய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் அனைவரின் பெயர்ப்பட்டியல்களையும் மாதகல் கண்ணன் வெளியிட வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் நிலையான உறுதிப்பாடு.மாதகல் கண்ணன் ஏன் விடுதலைப்புலிகளின் பெயரில் பணம் திரட்டியவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தாததற்குரிய காரணம் என்ன?

தமிழ்த்தேசிய உணர்வோடு மக்கள் இரண்டு நிகழ்வுகளுக்கும் சென்று மாவீரர்களையும் தேசியத்தலைவரையும் நினைவு கூர்ந்து மனநிறைவாக மதிப்பளித்துவருகிறார்கள்.மாவீரர் நாளையும் தேசித்தலைவர் பிறந்தநாளையும் போலித்தமிழ்த்தேதியவாதிகளால் பிரித்தாளுவதை மக்கள் பல ஆண்டுகளாக கண்டித்துவருகிறார்கள்.மக்களின் பணத்தில் நிகழ்வுகளை நடத்துபவர்கள் மக்களின் எண்ணங்களை அவமதித்துக்கொண்டு சுயநலமாக செயற்படுவதால் மக்கள் வெறுப்படைந்துள்ளார்கள்..

 

இரண்டு நிகழ்வையும் நடத்துபவர்கள் தமிழ்த்தேசியத்தையும்  உணர்வோடு செல்பவர்களையும் பிரித்தாண்டு போலித்தமிழ்த்தேசியத்தை கனடா மண்ணில் விதைத்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தி சிங்கள அரசுக்கும் இந்திய அரசுகக்கும் திராவிட கட்சிகளுக்கும் மறைமுக ஆதரவை வழங்குகிறார்கள்.

விடுதலைப்புலிகளைச் சொல்லி பணம் திரட்டிய பலகோடி பணம் வணிகநிறுவனங்கள் வணிகவளாகங்கள் என தம்வசமாக்கியவர்களை அவர்களோடு பயணித்தவர்களையும் மூடிமறைத்துக்கொண்டு மூச்சுக்கு மூச்சுக்கு தலைவரையும் தமிழ்த்தேசியத்தையும் போலியாகப் பேசிவருகிறார்கள்.இதனால் கனடாவாழ் தமிழர்கள் தொடர்ந்து ஏமாறுகிறார்கள்.

விடுதலைப்புலிகளைச் சொல்லி உலகத்தமிழரால் கனடாவாழ் மக்களிடம் திரட்டிய அனைத்து தேசியப்பணம்  தேசியத்தின் உடைமைகள் கனடாவாழ்மக்களின் பொதுநிதியத்திற்குள் கொண்டுவரப்படவேண்டும்.பாதிக்கப்பட்ட மக்கள் அணிதிரண்டுகொண்டிருக்கிறார்கள்.. விடுதலைப்புலிகளைச் சொல்லி கனடாவாழ் மக்களிடம் திரட்டிய பல கோடி கனடா வெள்ளிக்கு சரியான தீர்வு எட்டும்வரை பறை ஊடக குழுமம் பாதிக்கப்பட்ட மக்களின் முறைப்பாடுகளை வெளியிடுவோம்.மேலே சொல்லப்பட்டவை பறை ஊடகத்தின் எண்ணப்பாடு அல்ல.பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாடுகளை குறைபாடுகளை கனடாவாழ் மக்கள் நலனுக்காக வெளியிடுவோம்.

கனடாவில் வாழும் தமிழர்கள் பலர் அடைமானக்கடன்மோசடி வீடுவிற்பனையில் மோசடி என பல்வேறு சிக்கலைச் சந்திக்கின்ற மக்களுக்கும் தமிழீழ மண்ணில் இனப்படுகொலைப்போரால் பாதிக்கபபட்ட மக்களுக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்டோரின் உறவுகளுக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற செயற்பாடுகளுக்கு கனடா சட்டவிதிகளுக்கு அமைய தேசியநிதியைப் பயன்படுத்தவேண்டும்.

போலித்தமிழ்த் தேசியவாளர்களின் உண்மைகளை உடைத்தெறிவோம்..

இக்கட்டுரை கனடா மற்றும் உலகம் தழுவி வாழும் மக்களுடைய தகவல்களையும் முறைப்பாடுகளையும் பறை ஊடகக் குழுமம் வெளியிடுகிறது..இதுபறை ஊடக குழுமத்தின் எண்ணப்பாடு அல்ல. இக்கட்டுரைக்கு பறை ஊடகக் குழுமம் பொறுப்பல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *