சில தலைகளை  அடக்கிய பறை ஊடகம்

கனடாவில் பல தமிழ் ஊடகங்கள் இருக்கின்றன.ஒவ்வொரு ஊடகமும் தமக்கான வழியில் ஊடகப்பணியை ஆற்றுகின்றன.அதிகப்படியான ஊடகங்கள் தவறுகளுக்கு துணைபோவது வழக்கம்.20,25 ஆண்டாக நழுவல் போக்கில் ஊடகப்பணியாற்றி வந்தவர்கள் கடந்த 6,7ஆண்டுகளாக தடம்புரளும் நிலையில் இயங்குகின்றன.

அறிவியல் வளர்ச்சியின் வெளிப்பாடாக கையடக்கத் தொலைபேசியால் ஒரு செய்தியை அல்லது ஒரு நிகழ்வை உலகப்பந்தில் நேரடியாக நேரலைப்படுத்தும் வாய்ப்பு இன்று வலிமைபெற்றிருக்கிறது.இணையவழியில் முகநூல் என பல்வேறு இணையவழித்தளத்தினூடாக இன்று செய்திகளை நேரலையில் பார்க்கும் வாய்ப்பு எமக்கு உண்டு. உலக இயக்கம் ஊடகத்தில் தங்கியுள்ளது.சுடச்சுட நேரலையில் செய்திகள் வெளிவருகின்றன.

வானொலி நிலையத்தினருக்கும் தொலைக்காட்சி நிலையத்தினருக்கும் இந்த வளர்ச்சி சங்கடமான நிலை. இந்த இணையவழி நேரலை மக்களிடமிருந்து வானொலி நிலைய தொலைக்காட்சி நிலைய நேயர்களின் இணைப்பை பிரித்துவிடுகிறது. இன்று ஊடகப்பணி என்பது வலிமையானது.சிலருடைய பொய்களை களவுகளை ஊடகங்கள் நேரலையூடாக மக்களுக்கு வெளிப்படுத்தி வருகின்றன..

கனடாவில் அடைமானக்கடன்மோசடி, காப்புறுதிமோசடி, வீடுவிற்பனையில் மோசடி, தமிழ் மக்களுக்கு பொய் சொல்லி பணம் திரட்டுபவர்கள்,  தமிழ் மக்களை அமைப்புகளுடாக  ஏமாற்றுபவர்கள், அரசியலில் தமிழர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள்,  என பல்வேறு வழிகளில் தமிழ்மக்களை ஏமாற்றியவர்களை கடந்த பல ஆண்டாக பறைஊடகம் மக்களுக்கு வெளிப்படுத்தி வந்துள்ளது.

இந்த மாதம் கனடாவில் நடந்த பெண்கள் நாள் சார்ந்த நிகழ்வில் அந்த அமைப்பினர்  இணையவழி ஊடகங்களை அழைக்கவில்லை.ஊடகங்களுக்கு பாடங்கள் புகட்ட கொடுக்கு கட்டிய தலைகள் இன்று இணையவழி ஊடகங்களை கண்டு அச்சம் கொண்டுள்ளார்கள்.

உலகவரலாற்றில் முதன்முதலாக இணையவழி ஊடகங்களை அழைத்து தமது நிகழ்வுகளை நேரலை செய்ய அச்சப்பட்ட தலைகளும் அவரின் சின்ன எடுபிடிகளும்.விளம்பரமின்றி ஊடக அறிவித்தல் இன்றி நிகழ்வுகளை நடத்தி மக்களின் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறார்கள்.

தமிழ்மக்களை ஏமாற்றிய எவரும் தமிழ்மக்களின் முன் வரமுடியாத இக்கட்டான நிலைக்கு பல தலைகள் அச்சப்படுகிறார்கள்.சில ஆற்றல் குறைந்த தம்மை அறிவாளிகள் என நெஞ்சை நிமிர்த்தும் தலைகள் இணையவழியில் இயங்கும் ஊடகங்களுக்கு பாடம் புகட்டப் புறப்பட்டார்கள்.ஆனால் இன்று தாமே ஊடகங்களிடம் பல அறிவைப்பெற்று ஒதுங்கும் இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இன்று இணையவழி ஊடகங்களுக்கு பாடம் புகட்ட புறப்பட்ட சில தலைகள் மக்கள் முன் மேடை ஏறப்பயப்படுகிறார்கள்.கையில் ஒலிவாங்கியைத் தூக்க அச்சப்படுகிறார்கள்.பதவிகளை வகிக்கப் பயந்து பதவிகளை கைமாற்றுகிறார்கள்.ஊடகம் என்பது உண்மையை உரக்க வெளிப்படுத்துவது.நேர்மைக்கு வாய்ப்பளிப்பது.சிறந்த அரசியல் ஆளுமைகளை மக்களுக்கு இனம் காட்டுதல். சிறந்த சமூகப்பணியாளரை ஊக்குவித்தல்.சிறந்த அரசியலை மக்களுக்கு தெளிவுபடுத்தல்.பல இலட்சம் தமிழர்களை அழித்த சிங்கள அரசுக்கு முண்டு கொடுப்போரை தமிழ் மக்கள் முன்னிலையில் தோலுரித்துக் காட்டுவது. 

இப்படிப் பல பணிகளுக்கு முன்னுரிமை வழங்குதல் ஊடகப்பணியாகும்.இவ்வளவு அதிஉயர்பணியை பறைஊடகம் செய்து வருகிறது.இதனால் கனடாவாழ் தமிழர்கள் தம்மை மோசடி செய்து ஏமாற்றும் தலைகளை இனம் கண்டு தமிழ் மக்களின் சரியான வணிகர்களை தொழில்அதிபர்களை கனடாத் தமிழர்கள் இனம்கண்டு சேவைகளைப் பெறுகிறார்கள்.பல ஆபத்தான தமிழர்களை ஏமாற்றும் தரகர்களிடமிருந்து தப்பித்துள்ளார்கள்.

ஊடகத்தின் முதன்மைப்பணியானது என்பது மக்களை ஏமாற்றுபவர்களை தோலுரித்துக் காட்டுதல்.அடைமானக்கடனில் மோசடி செய்பவர்களை மக்களுக்கு இனம் காட்டவேண்டும்.காப்புறுதி முதலீடு சார்ந்தவற்றில் தமிழர்களை ஏமாற்றுபவர்களை மக்களுக்கு இனம் காட்டவேண்டும்.மக்களிடம் பொய்சொல்லி நிதி திரட்டியவர்களை மக்களுக்கு இனம்காட்டுதல்.

சில ஊடகங்களால் சில தலைகள் அட்டணக்கால் போடமுடியவில்லை.நெஞ்சை நிமிர்த்தமுடியவில்லை.இருக்கையில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. மேடையில் ஏறி மக்களை ஏமாற்றும் பேச்சு பேசமுடியவில்லை.தம்மை தமிழர்களின் தலையாக தம்பட்டம் அடிக்கமுடியவில்லை.

ஆகவே தமிழ் உறவுகளே நாம் உலகத்தில் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிற இனம்.எமது இனப்படுகொலைக்கான போதிய சான்றுகள் இருந்தும் எமக்கு நடந்தது இனப்படுகொலைதான் என்ற நீதியை உலகநாடுகள் வழங்க மறுக்கிறார்கள்.தமிழர்கள் தமிழர்களுக்கு துணையாக இருங்கள்.தமிழர்களை தமிழர்கள் ஏமாற்றாதீர்கள்.சில தலைகள் தங்கள் புகழுக்காக தமிழர்கள் ஏமாற்றி தமிழினத்திற்கு தலையாகி சிங்களத்திற்கு தம்பட்டம் அடிப்பதை தவிர்த்து தமிழர்களுக்கு உதவுங்கள்.

தமிழரின் இறைமை காப்பாற்ற தன்னாட்சி நிறைந்த தமிழீழக்குடியரசே ஒற்றைத்தீர்வு.இதற்கு எதிராக எவன் குரல் எழுப்பினாலும் அவன் தமிழினத்துரோகியாக முத்திரை குத்தப்படுவார்கள்.தமிழரின் நாடு செந்தமிழ் நாடு தமிழீழநாடு.இது ஒரு பொதுவான மோசடி செய்பவர்களுக்கான செய்தி.இதில் தனிப்பட்ட எவருக்குமான பதிவு அல்ல.4இலட்சம் தமிழர்களில் ஏமாற்றப்பட்டவர்களின் குரலாக மக்களின் எண்ணங்களை வழங்கியுள்ளோம்.

இக்கட்டுரையில் உலகத்தமிழர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் 100 விழுக்காடு உள்ளடங்கியுள்ளது.  வெளியீட்டாளர்கள் 100விழுக்காடு இக்கட்டுரைக்கு பொறுப்பானவர்கள்அல்ல.வெளியீட்டாளர்கள் 100 விழுக்காடு தமதுகருத்தையோ எண்ணத்தையோ இக்கட்டுரையில் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *