சுழற்சிமுறையில் உணவுத்தவிர்ப்பு 

எமது இனிய உறவுகளே

2052 கும்பம் 18 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை(Feb28,2021) காலையில் தமிழீழம் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் கோயில் மேற்கு வீதியில் எமது இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு  நீதி வேண்டி பல்கலைக்கழக  மாணவர்கள்  சுழற்சி முறையில் உணவுத்தவிர்ப்பு ஒன்றினை ஆரம்பித்துள்ளார்கள்.

 

2009ஆம் ஆண்டில் சிங்கள அரசால் அனைத்துலக நாடுகளின் உதவியோடு ஈழத்தமிழர்களை அழித்தொழித்தார்கள்.

146670 ஈழத்தமிழர்களை கொன்று 90000 தமிழ்ப்பெண்களை விதைவைகளாக்கி பல ஆயிரம் ஈழத்தமிழர்களை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு இரசாயன குண்டுகளைப் பயன்படுத்தியும் கொன்று குவித்தார்கள்.

 

மனிதநேயமற்ற நாடுகள் தமிழர்களை அழித்துவிட்டு அழித்தவனிடம்  பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நடந்த இனவழிப்பை சிங்கள அரசே விசாரிக்கவேண்டுமென பரிந்துரைப்பதை பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

 

பாதிக்கப்பட்ட வலிசுமந்த மக்கள் நீதி வேண்டி நிற்கின்ற போது அதற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் தமது நலனை முன்னிலைப்படுத்தி மனித உரிமைக்கான பண்புகளை மீறி செயற்படுகிறார்கள்.

ஈழத்தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கு நீதிவேண்டியும்  தமிழர்களின் இறைமையைப் பாதுகாக்கக் கூடிய தன்னாட்சி அரசை நிறுவக் கோரியும்  உணவுத் தவிர்ப்பை  மாணவர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.

 

இதற்கு உலகில் வாழும் 12கோடி தமிழர்களும் ஆதரவு வழங்குகிறார்கள். புலம்பெயர்நாடுகளிலும் உணவுத்தவிர்ப்பை தமிழர்கள் தொடர்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *