இனப்படுகொலைத் தீர்மானத்தை ஏன் லிபரல்கட்சி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவில்லை?

 

கனடாவாழ் தமிழர்கள் தாயகத்தின் அரசியலுக்காக கனடாவாழ் அரசியல்வாதிகளை பலமுறை நாடியிருக்கிறோம்.ஆனால் மிகவும் தந்திரமாக எம்மைக் கையாளுவார்கள்.கனடாவில் தெருவிழாவிற்கு அரசியலாளர்கள் வரிந்துகட்டிக்கொண்டு வருவார்கள்.தெருவிழாவில் கொத்துரொட்டிபோடுவதற்கு அரசியலாளர்கள் நேரத்தை ஒதுக்குவார்கள்.மரபுத்திங்கள் நாளில் வாழ்த்துச் சொல்லுவார்கள்.தமிழர்களின் விழா மேடைகளில் நாங்கள் உங்களோடுதான் இருப்போம் என்று முழங்குவார்கள்.அரசியலாளர்கள் பொங்கல்விழாவில் வேட்டிகட்டிக்கொண்டு பொங்கல்விழாவில் கலந்துகொள்வார்கள்.

இதே அரசியல்வாதிகள் கப்பலில் வந்தவர்களை பயங்கரவாதிகள் என்று அன்றைய ஆளும் கட்சி சொல்லும் அதை எதிர்க்காமல் இருந்தவர்கள் இன்றைய ஆளும் கட்சியினர்.

 

வலிநிது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு  நீதிவேண்டி ஒட்டோவுவுக்கு நடந்தவர்கள் ஒட்டாவா நாடாளுமன்ற வாசலில் கரி ஆனந்தசங்கரியிடம் ஒப்படைத்த அறிக்கைக்கு வெளிவிவகார அமைச்சர் சிங்கள அரசுக்கு சார்பாகவும் நீதி கேட்கின்ற மக்களுக்கு எதிரான அறிக்கை வெளியிட்டிருந்தார். வெளிவிவகார அமைச்சரும் லிபரல் கட்சியைத் சார்ந்தவரே.கரியைத்தவிர வேறு லிபரல் கட்சினர் வரவும் இல்லை. கரியும் யாரையும் கூப்பிட்டதாகத்தெரியவில்லை.நடந்து வந்தவர்களையும் திரும்பியே பார்க்காத அரசியல்வாதிகள்.

1.இவர்கள் இதுவரை நாடாளுமன்ற பதவியை வைத்துக்கொண்டு இனப்படுகொலைத்தீர்மானத்தினை நிறைவேற்றாதது ஏன்?

2.லிபரல் கட்சியினர் ஏன் தமிழரின் தேசியக்கொடியைக் புறக்கணிக்கிறார்கள்?

3.கனடாவில் விடுதலைப்புலிகளின் தடையை லிபரல் கட்சி நீடிப்பேன்?

4.இனப்படுகொலைக்கான தீர்மானத்தை ஏன் லிபரல் கட்சி இதுவரை நிறைவேற்றவில்லை?

5.கனடா ஏன் சிங்கள அரசை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான பணியை முன்னெடுக்கவில்லை?

இந்த அரசியலாளர்கள் தமிழரின் தேசியக்கொடியை அன்றிலிருந்து தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள்.தமிழ் அமைப்புகளின் இரவு விருந்து  நிகழ்வுகளில் தமிழ்த்தேசியக்கொடியை புறக்கணித்த அரசியலாளர்கள்.

இதுவரை லிபரல் கட்சி தமிழரின் அரசியல் சிக்கலுக்காக செய்த பணிகள் என்ன?

சிங்கள அரசிற்கு ஐநாவில் காலநீடிப்புக்கு பரிந்துரை வழங்குவதும் அதற்கு தமிழ்மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காத்தவர் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்.

கனடாவில் வாழும் தமிழர்களாகிய நாம் இனிமேல் மேலே சொல்லப்பட்டவற்றை நிறைவேற்றாதவர்களுக்கு எங்கள் வாக்குகளை போடக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவேண்டும்.

தமிழ்த்தேசியக்கொடியை ஏற்காத விடுதலைப்புலிகளின் தடையை எடுக்காத சிங்கள அரசை அனைத்துலக நீதிமன்றில் பாரப்படுத்தாத இனப்படுகொலைத்தீர்மானத்தை நிறைவேற்றாத கனடாவில்  ஆட்சியில் உள்ள  கட்சியை நாம் ஒரம்கட்டுவதே கனடாவாழ் தமிழர்களின் உறுதியான முடிவாக இருக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *