தமிழர்களிடம் திரட்டிய பெருந்தொகைப்பணத்தில் சிங்களபௌத்த சின்னவடிவில்  முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு வாக்கரிசி போட்ட பி..த.ஒ 

தமிழர்களிடம் திரட்டிய பெருந்தொகைப்பணத்தில் சிங்கள பௌத்த சின்னமான தாமரை மொட்டுவடிவில் தமிழின அழிப்பை மூடி மறைக்கும்  நினைச்சின்னம் நிறுவுவதற்கு பிரம்ரன் தமிழ் ஒன்றியமும் பிரம்ரன் முதியோர் அமைப்பும்  கனடாத் தமிழினத்துரோக அமைப்புகளும்இணைந்த கூட்டுச்சதியில் முள்ளிவாய்க்கால் வலிக்கு வாய்க்கரிசி போட்டுவிட்டார்கள்.மேலே உள்ளபடமான முள்ளிவாய்க்கால் நினைவை சுமக்காத தூபியை நிறுவுவதாக முடிவெடுத்துவிட்டதாக உறுப்பினர்கள் எமக்கு செய்தியை வழங்கியுள்ளார்கள்.

பிரம்ரன் நகரசபை உறுப்பினர்களின் நகரபையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு எதிரான தன்னிச்சை முடிவான நினைவுத்தூபியை வைப்பபதற்கான வரைபடத்தை முடித்திருக்கிறார்கள்.

 

பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் இச்செயலுக்கு கனடாத் துரோகத்தமிழ் அமைப்புகளின் கூட்டுச்சதியில் தேசியத்தலைவரை அவமதித்தும்  60000 மாவீரரின் ஈகத்தை இழிவுபடுத்தியும் பல இலட்சம் அப்பாவி மக்களின் உயிரிழப்பை கொச்சைப்படுத்தியும் உலகில் வலிசுமந்து கொண்டு பல்வேறு தமிழ்த்தேசியப் பணிகளை செய்யும்  தமிழர்களை  மனஉளைச்சலைக்குள்ளாக்கி சிங்கள பௌத்த சின்ன வடிவத்தில் சிங்கள இராணுவ போர் வெற்றி நினைவாக கனடா பிரம்ரன் நகரில் தமிழர்களின் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி என்ற போலியை நிறுவுகிறார்கள். அரசியல் அறிவற்ற துணிவற்ற தாழ்வுமனப்பாங்கு நிறைந்த அடிமைத்தனத்தில் வீழ்ந்த சில செம்மறிகளால் தமிழினத்திற்கு அவமானம்.பிரம்ரன் நகரத்தில் வாழும் தமிழர்களுக்கும் இழுக்கு.

 

பிரம்ரன் தமிழ் ஒன்றியமும் பிரம்ரன் முதியோர் ஒன்றியமும் பிரம்ரன் வாழ் தமிழர்களின் அவமானச்சின்னங்கள்.இந்த அமைப்புகள் கனடா அரசிடம் தமிழர்களைக் காட்டி நிதிகளைப்பெற்றுக்கொண்டு தமிழர்களுக்கு எதிராகவும் சிங்கள அரசுக்கு ஆதரவாகவும் செயற்பட்டு வருகிறார்கள்.

 

கடந்த காலங்களில் பிரம்ரன் வாழ் மக்களைப் புறக்கணித்தே இந்த அமைப்பினர்  பல நிகழ்வுகளைச் 5  6 குடும்ப மட்டத்தில் செய்து வந்துள்ளார்கள்.பிரம்ரன் வாழ் மக்களுக்கு இந்த அமைப்புகளால் எந்தப்பயனும் இல்லை.

 

மேலே உள்ள நினைவுத்தூபி படங்கள் வலி சுமந்த மக்களால் நிறுவிய நினைவுத்தூபிகளை புறந்தள்ளி தமிழின துரோகமும் நம்பிக்கைத்துரோகத்தையும் பிரம்ரன் தமிழ் ஒன்றியமும் அதன் தமிழ்த்தேசிய துரோக அமைப்புகளும் முன்னெடுக்கிறார்கள். நல்லவர்கள் வல்லவர்கள் அமைதிகாப்பது தமிழினத்திற்கு கிடைத்த கேடு.

2500 ஆண்டாக தமிழர்களை அழித்த இனவெறிகொண்ட சிங்களவர்களை சாட்டாகச் சொல்லி தமிழின அழிப்பை மூடிமறைத்து சிங்களத்திற்காக பி..த.ஒன்றியம் செயற்படுவதாக பிரம்ரன் வாழ் தமிழர்களோடு பிரம்ரன் தமிழ் அமைப்பின் பல உறுப்பினர்களும் கொந்தளிக்கிறார்கள்.

 

இடிக்கப்பட்ட யாழ்ப்பாண முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் ஒருமாத காலத்திற்குள் நிறுவியவர்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.கனடாவில் முள்ளிவாய்க்காலை வைத்து பெருந்தொகைப்பணம் திரட்டிவைத்துக்கொண்டு தமிழ்மக்களின் பணத்தில் தமிழர்களின் வலியை மேலும் காயப்படுத்திக்கொண்டிருப்பவர்கள்  பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தினர்.

தமிழீழ மண்ணில் தமிழரின் உரிமைக்காக போராடிய தங்கள் உயிர்களை எமது சுகபோக வாழ்வுக்காக அர்ப்பணித்த மாவீரரை இழிபடுத்தி தாமரை மொட்டு வடிவில் சிங்களவர்களை மகிழ்ச்சிப்படுத்திய தமிழ் இனத்துரோகிகள் பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தினர்.

பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தில் மொழி அறிவோ இனஉணர்வோ பண்பாட்டு அறிவோ தமிழ் இனவரலாற்று அறிவோ இல்லாதவர்களின் இழிபணியால் தமிழீழ மக்களின் கடின உழைப்பை  சிங்கள மக்களின் காலில் போட்டு ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமானப்படுத்திய தமிழின நம்பிக்கைத்துரோக அமைப்பு பிரம்ரன் தமிழ் ஒன்றியம்.மக்கள் தெளிவுற்று அறிவார்ந்தவர்களாக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

குரல் 27

தேசத்தின் குரல் வைகாசி மாதம் 2022 இதழ் இத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது.இவ்விதழில் வெளிவந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னங்கள் அனைத்தும் இனத்தின் வலியை சுமக்கின்றது.ஆனால் கனடா இசுக்காபுரோவில் தமிழினத்துரோகிகளால் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல்நிகழ்வில் மக்களை ஏமாற்ற வைக்கப்பட்ட  சின்னமும் பிரம்ரன் தமிழ் ஒன்றிய தமிழினத்துரோகிகளால் நிறுவப்பட இருக்கும் முள்ளிவாய்க்கால் என்ற பெயரில் சிங்களபுத்த சின்னமான தாமரை வடிவிலான சின்னமும்  தமிழினத்தின் வலியை காயப்படுத்துவதோடு கனடாவில் வலியோடு வாழும் தமிழீழ மக்களை மேலும்  மன உளைச்சலுக்குள்ளாக்கும் இழிபணியைச் தமிழினத்துரோகிகள் செய்கிறார்கள். இவர்கள் நினைவுச்சின்னத்தை நிறுவாமல் உலகத்தமிழரிடம் திரட்டிய பெருந்தொகைப்பணத்தை திருப்பிவழங்கவேண்டும்.தமிழ் இனப்படுகொலை வலுயை சுமக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமையும் காலம் வரை பொறுத்திருந்தால் கனடாவாழ் தமிழர்களை மனஉளைச்சலில் இருந்து காப்பாற்ற முடியும்..

முள்ளிவாய்க்கால் நிறுவியபின் அடுக்தகட்ட செயற்பாடு முன்னெடுக்கப்படும்.

இக்கட்டுரையில் உலகத்தமிழர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் 100 விழுக்காடு உள்ளடங்கியுள்ளது.  வெளியீட்டாளர்கள் 100விழுக்காடு இக்கட்டுரைக்கு பொறுப்பானவர்கள் அல்ல.வெளியீட்டாளர்கள் 100 விழுக்காடு தமதுகருத்தையோ எண்ணத்தையோ இக்கட்டுரையில் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *