தமிழ்த்தேசிய எதிர்க்குரல் பரசுராமன்

 

மே 6 ஆம் நாள் 2021 அன்று ஒன்ராறியோ மாநில அவையில் மாநில உறுப்பினர்  தமிழினவழிப்பு கல்வி அறிவூட்டல் கிழமை 104 தனியர் சட்ட வரைபு ஒன்ராறியோ மாநில அவை உறுப்பினர்களின் எதிர்ப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 

இதை 2 ஆண்டுகளுக்கு முன் விசய்  முன்னெடுத்தபோது அதற்கு மிகப்பெரிய வரவேற்பை கனடா வாழ் மக்கள் வழங்கியிருந்தார்கள்.கனடாவில் 400 தமிழ் அமைப்புகளோடு வேற்றின மக்களின் அமைப்புகளின் அமோக வரவேற்போடு தமிழின அழிப்பு கல்வி அறிவூட்டும் கிழமை யின் செயல்திட்டங்கள் முழு வீச்சோடு முன்னேடுக்கப்பட்டது.

இதில் அதிஉயர்வாக பங்கேற்ற இளையோர் அமைப்பினர் பல்கலைக்கழக மாணவமணிகள், கல்லூரி மாணவமணிகள், உயர்கல்வி மாணவமணிகள், பள்ளி மாணவர்கள் என பெரிய அளவில் உள்ள இளையவர்களின் முயற்சியாலும் தமிழின வலியை சுமந்து கொண்டு தமிழீழ மக்களின் வலிமையோடு கனடாவில் களமாடியவர்கள் கனடா வாழ் இளம் அறிவியல் போராளி விசய் தணிகாசலமும் அவருடன் களமாடும் இளையோருமே.

போற்றுதலுக்குரிய விசய்அவர்களை பல்வேறு வழிகளில் இழிவுபடுத்தியும் இழிவாக பறை ஊடகத்தோடு முட்டி மோதியவர்தான் தமிழின அழிப்புக்கும் சிங்கள திராவிட ஆரிய தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்களின் தோழனாக ஈழத்தமிழர்களின் அவமானச் சின்னமாக உலகப்பந்தில் வாழும் பரசுராமன்.

தமிழ்த்தேசியப் பரப்பில் பெருமைக்கும் எளிமைக்கும் போற்றுதலுக்கும் 12 கோடி தமிழர்களின் வலியை தனது வலியாக உணர்ந்து பரசுராமனின் இழிவுபடுத்தலை பொருட்படுத்தாமல் எள்ளவுக்கும் கணக்கெடுக்காமல் தட்டிக் கழித்து விட்டு தமிழ்த்தேசிய உணர்வை உலகமக்களுக்கு அள்ளி வழங்கிய இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலைப் பெருமூச்சோடு ஈழமக்களின் மண்டியிடாத மானத்தோடும் வீழ்ந்து விடாத வீரத்தோடும் அறிவுக்கருவி கொண்டு களமாடியவர் பெருந்தமிழர் விசய் தணிகாசலமும் அவரோடு கை கோர்த்து இணைந்துள்ள 12கோடி தமிழ்மக்களும்.

விசய் தணிகாசலம் பணி தொடர தமிழ்தேசிய நன்றியுணர்வோடு வாழ்த்துகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *