பிரம்ரன் நகரில் அமையும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கும் நிதிச்சேர்ப்புக்கும்  முழுப்பொறுப்புடையவர்கள்.

2021 சனவரி 10 ஆம் நாள் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை சிங்கள இனவெறியரசின் தூண்டுதலின் பேரில் இடித்து அழிக்கப்பட்டது.அதனைக் கண்டித்து கனடாவில் ஒன்ராரியோ மாநில அவை நோக்கி இசுக்காபுரோ பிரம்ரன் பகுதிகளில் இருந்து தமிழர்களால் வாகனத்தொடரணி போராட்டம் நடைபெற்றது.

அதன் வெளிப்பாடாக பிரம்ரன் நகரசபை உறுப்பினரின் வேண்டுகோளுக்கமைய பிரம்ரன் நகரசபை உறுப்பினர்களின் முழுமையான ஆதரவோடு பிரம்ரன் நகர மையத்தில் அமைந்துள்ள சிங்குசி நகர தோட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நிறுவுவதற்கு நகரசபை ஒப்புதல் வழங்கியது.

இதை முன்னெடுக்க பிரம்ரன் தமிழ் ஒன்றியமும் பிரம்மன் முதியோர் சங்கமும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கான பணிகளை முன்னெடுத்தார்கள்.இவ்விரு அமைப்பினரும் இணைந்து 2022 சனவரி 22 ஆம் நாள் இணையவழியிலும் தொலைபேசியூடாகவும் நேரடியாகவும் உலகத்தமிழர்களிடம் பணம் திரட்டியிருந்தார்கள்.

ஒன்ராரியோ மாநிலத்தில் வாழும் தமிழர்களும் ஏனைய நாடுகளில் வாழும் தமிழர்களின் வேண்டுகோளாக:

தூபி அமையும் காணியில் வரைபடம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக தூபியின் அதே வடிவிலான தூபிக்குரிய வரைபடம்

தூபி நிறுவுவதற்கான பணமதிப்பு

செயற்குழுவினரின் நிழற்படங்கள் அனைத்தையும் 

 வெளியிடுமாறும் இனப்படுகொலையின்  வலி சுமந்த மக்கள் வலியுறுத்தியிருந்தார்கள்.ஆனால் எந்தத் தகவல்களையும் தமிழ்மக்களுக்கு செயற்பாட்டினர் வெளிப்படுத்தாமல் இருப்பதால் மக்கள் செயற்பாட்டாளர்கள் மீது பல ஐயப்பாடுகள் நிறைந்த கேள்விகளை தொடுத்தவண்ணம் இருக்கிறார்கள்.    தமிழர்களின் இனப்படுகொலையை மூடிமறைப்பதற்கான பணியில் சில செயற்பாட்டாளர்கள் சிங்கள அரசின் எடுப்பார் கைப்பிள்ளையாக செயற்படுவதாகவும் சந்தேகம் கொண்டுள்ளார்கள் என தமிழர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

தமிழர்களின் வரலாற்று திரிபை முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் திணிப்பதற்கான பணியை சிங்கள அரசு பின்னின்று செயற்படுவதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.சேர்க்கப்படும் நிதியை இந்த அமைப்புக்கு வெளியில் இருந்து வேறு சில அமைப்புகள் கையாளத் துடிப்பதாகவும்  சிலர் பேசிக்கொள்கிறார்கள்.

பி..தஅமைப்பின் ஆண்டுப்பொதுக்கூட்டம் வைக்காமல் காலத்தை கடத்துவதாகவும் உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள்.குறிப்பிட்ட ஒரு சிலர் அமைப்பின் யாப்பிற்கு எதிராகவும் உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் தாம் நினைத்ததை  செயற்படுவதாக சில உறுப்பினர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

அமைப்பில்  சில நிர்வாக உறுப்பினர்கள் தமிழர்களின் வரலாற்றுஉண்மைகளையும் இனப்படுகொலையின் வலியையும் ஊதாசீனம் செய்து கொண்டு மறைமுகமாக சிங்கள அரசின் விருப்பத்திற்கு அமைய தமிழர்களிடம்  பணங்களைத் திரட்டி தமிழர்களின் இனப்படுகொலையின் வலியை மேலும் காயப்படுத்தி தமிழ்மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறார்கள் என பல கருத்துக்களை மக்கள் தெரிவிக்கிறார்கள்.

கடந்த 30ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்மக்களிடம் தமிழீழ விடுதலைப்புலிகள் எனப் பொய்சொல்லி மக்களிடம் பணம் திரட்டி இதுவரையும் கணக்குக் காட்டாதவர்களும் இந்த செயற்பாட்டாளர்களின் பின்னால் நிற்பதாகவும் மக்கள் மீண்டும் பணத்தைக் கொடுத்து ஏமாந்துவிடுவோம் என்ற அச்சத்திலும் மன உளைச்சலுக்குள்ளாகியிருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

மக்களின் சந்தேகங்களை தேவையற்ற கருத்துக்களை இரு அமைப்புகள் மீதும் வைப்பதை தடுப்பதற்கான எந்த செயற்பாடுகளையும் அமைப்பினர் முன்னெடுக்கவேண்டும்.எனப் பலர் நிர்வாக உறுப்பினர்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இவர்களோடு கைகோர்க்கும் ஏனைய அமைப்புக்களும் கனடாவில் புலிக்கொடியையும் இந்தியாவில் இந்துத்துவ கட்சிகளுடன் கனடாவாழ் தமிழ் மக்களின் பெயரில் இரகசிய உடன்படிக்கைகள் மேற்கொள்ளல்.தமிழீழவிடுதலைப்புலிகளின் தடையை  இந்தியாவில் நீடித்த பாரதீய கட்சியின் மாநில பொறுப்பாளரை கனடாவுக்கு அழைத்தமை.

தமிழ்புபாடநூலில் தமிழரின் வரலாற்று திரிபுகளை திரித்த அமைப்புகளும் தமிழ் மரபுத்திங்களில் இரண்டு அமைப்புகள் ஏட்டிக்கு போட்டியாக தமிழர்களின் மரபுகளுக்கு எதிராக தமிழர்களின் வரலாற்றை அழிக்கும் பணியை செய்து வருகின்ற அமைப்புகளுடன் கைகோர்த்திருப்பது கனடாவாழ் தமிழர்களுக்கு மன உளைச்சல் கொடுக்கின்றது.

மீண்டும் பிரம்ரன் தமிழ் ஒன்றியமும் பிரம்ரன் தமிழ் மூத்தோர் ஒன்றியமும் இணைந்து கனடாவாழ் தமிழ்மக்களுக்கும் உலகத்தமிழர்களுக்கும் உண்மையான தெளிவை வழங்கவேண்டும் என தமிழ்மக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

தமிழ்மக்களின் பணத்தில் நிறுவப்படும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வலிசுமந்த தமிழ்மக்களின் உணர்வுக்கு நீதி வழங்கும் வலிமையை உயிரூட்டும் தூபியாக அமையவேண்டும்.அப்படி அமைக்கதவறின் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நிறுவுவதை நிறுத்துவது  சரியானதாகும்.உங்களால் சரியானதை செய்யவில்லையென்றால் மற்றவர்கள் சரியானதை செய்வதற்கு வழிவிடவேண்டும்.

 

ICEDT books   

ICEDT books

க்கட்டுரையில் உலகத்தமிழர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் 100 விழுக்காடு உள்ளடங்கியுள்ளது.  ஆசிரியரோ   எழுத்தாளரோ 100விழுக்காடு இக்கட்டுரைக்கு பொறுப்பானவர்கள் அல்ல.ஆசிரியரோ எழுத்தாளரோ 100 விழுக்காடு தமதுகருத்தையோ எண்ணத்தையோ இக்கட்டுரையில் வெளியிடவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *