யி.யு.போப் அவர்களின் 202 ஆவது பிறந்தநாள்விழா கனடாமண்ணில்

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள்  கனடா இசுக்காபுரோ நகரமண்டபத்தில் சேக்கம் அமைப்பினால்யி..யு.பொப் அவர்களின் 202 ஆவது அகவைநாள்விழாசிறப்பாக  முன்னெடுக்கப்பெற்றது. நிகழ்வில் அன்ரீரேனா கெங்காதரன் அவர்கள் தமிழில் சிறப்புரை ஆற்றினார்.கனடாவில் பிறந்தாலும் தமிழை கற்று தமிழ் நிகழ்வுகளில்சிறப்பான நிகழ்வைஎமக்கு வழங்கிய அன்ரீரேனாவுக்கு கனடாத் தமிழர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.

யி.யு.போப் அவர்கள் 1820 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் நாள் பிரின் எட்வேட் தீவில் பிறந்தார்.1826 ஆம் ஆண்டு குடும்பத்துடன் பிரித்தானியா சென்றார்.1839 ஆம்  ஆண்டு 8மாத கடற்பயணத்தினூடாக தமிழ்நாட்டை வந்தடைந்தார்.

இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல்1908வரை தமிழ் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார்.1886 ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலமொழியில் மொழிபெயர்த்தார்.தொடர்ந்து புறப்பொருள் வெண்பாமாலை புறநானூறு திருவருட்பயன் நாலடியார் திருவாசகம் என தமிழின் தொன்மை நூல்களை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்தார்.

இந்த ஆண்டு யி.யு.பொப் அவர்களின் பிறந்த நாளை  கனடாவாழ் தமிழர்களால் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *