ரிசாட் பதியுதீன் இசுலாமிய உறவுகளுக்கு அழைப்பு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டத்துக்கு இசுலாமியர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” – அகில இலங்கை மக்கள் காங்கிரசுத் தலைவர் ரிசாட் பதியுதீன் அவர்கள் அழைப்பு!பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ் மக்களின்  நடையுலாவுக்கு முழுமையான  ஒத்துழைப்பை வழங்குமாறு இசுலாமிய உறவுகளிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிசாட் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார்.தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நடையுலா போராட்டம் 2021பெப்ரவரி3ஆம் நாளில்,  தொடங்கி, 2021 பெப்ரவரி 6 ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. நிலச்சுரண்டல், திட்டமிட்ட குடியேற்றம், தொல்பொருள் என்ற போர்வையில் தமிழ் மக்களின்  பூர்வீக வாழிடங்களை ஏப்பமிடல், பேரினவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் அரசின் போக்குகள், சுலாமிய பண்பாடா யனாசா எரிப்பு என்பவற்றைக் கண்டித்தே இந்த நடையுமாக நடைபெறுகிறது.எனவே, எமது தமிழ்ப்படம் உறவுகள் ஏற்பாடு செய்துள்ள இந்த நடைபவனிக்கு, மதவேற்றுமையைக் கடந்து நாம் அனைவரும் தமிழ் பேசும் மக்களாக இனத்தால் இணைந்து ஒத்துழைப்பை வழங்க  வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரசு வேண்டுகோள் விடுக்கிறது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.