மூதறிஞர் கந்தமுருகேசனார் தமிழ்ப் பண்பாட்டு இணையம்
நிறுவம் 2033(2002) நிறுவனர் மு.க.தமிழ்

2033(2002) ஆம் ஆண்டு கந்தமுருகேசனாரின் நூறாவது அகவையில். அவரின் நூற்றாண்டு விழாவை புற்றளைப் பள்ளி பழைய மாணவர் சங்கம் கனடாக் கிளையினர் செய்ய மறுத்தமையால் தமிழ் ஆகிய நான் இவ்விழாவை மூதறிஞருக்கு எடுத்தேன்.

2033(2002) ஆம் ஆண்டு சுறவத்திங்களில் விழாவிற்கான செயல்பாட்டில் இறங்கினேன்.கனடா ரொரண்ரோ பெரும்பகுதியில் வாழ்ந்துவருபரான கந்தமுருகேசனாரின் திண்ணைப் பள்ளி மாணவரும் எனது தந்தையாரின் நண்பருமான பேரறிஞர் முருகவே பரமநாதன் தென்புலோலியூர் கிருட்டிணலிங்கம் போன்றோரை அணுகிய போது அதற்குரிய நிறைந்த ஆதரவை பேரறிஞர் முருகவே பரமநாதன் ஐயா வழங்கி சிறப்பித்தனர்.. அத்தோடு இவ்விழாவிற்கு அறிஞர் சாமி அப்பாத்துரை பாவலர் கந்தவனம் இலங்கை வானெலி புகழ் நாடக நடிகர் கே.எசு. பாலச்சந்திரன் போன்றோரின் நிறைவான ஆதரவோடு விழா சிறப்படைந்தது. நூற்றாண்டு விழாவில் அன்று மூதறிஞரின் உறவினரும் மாணவருமான தென்புலோலியூர் நடராசன் அவரும் எம்மோடு இணைந்து செயல்பட்டார்.

ஆண்டு தோறும் மூதறிஞர் பெயரில் எடுக்கப்படும் விழாவை எமது எதிர்கால தமிழ் பேசும் சிறுவரின் கலை ஆற்றல் திறமையினை வெளிப்படுத்தும் மேடையாக பயன்படுத்துகிறோம். கணிதம் தமிழ் ஆங்கிலம் சிறந்த பேச்சாளர் என நான்கு தேர்வு ஆண்டு தோறும் நடத்தி வருகிறோம்.இந் நிகழ்வினில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களையும் மதிப்பளித்து பரிசு வழங்கி வருகிறோம்.

2033(2002) ஆம் ஆண்டு சுறவத்திங்களில் இவ்விழா பற்றிய தகவலினை பல கிழமை இதழிலும் அனைத்து வானெலியிலும் வெளியிட்டிருந்தோம். இதை அறிந்த புற்றளைப் பள்ளி கனடாக்கிளையினர் விழாவை நடத்த விடாமல் பல இன்னலையும் இடையூறினையும் பொருண்மிய செலவினத்தையும் ஏற்படுத்தியிருந்தனர். அதன் விளைவாக நூற்றாண்டு விழாவை நடத்தவேண்டுமானால் ஏழு காவல்துறையினரையும் ஒரு பொறுப்பதிகாரியையும் விழாவின் பாதுகாப்புக்கு கடமையில் ஈடுபடுத்த மண்டப முகாமையகம் உத்தரவிட்டது. புலோலி மண்ணின் தன்மான உணர்வோடும் மூதறிஞரின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்தவும் புற்றளைப் பள்ளி கனடாகிளையினரின் அடாவடித்தனத்தை அடக்கவும் கனடா காவல்துறையினருக்கு மட்டும் 4000 கனடா வெள்ளியினை என்னால் செலவு செய்யப்பட்டது. ஆடற்கலை ஆசிரியைக்கு கொலை அச்சுறுத்தலும் புற்றளைப் பள்ளி கனடாக்கிளையினரால் வழங்கப்பட்டிருந்தது.

நூற்றாண்டுவிழாவின் போது மூதறிஞரைப் பற்றிய தகவலினை கனடா வாழ் தமிழருடன் பகிர்ந்து கொள்ள தமிழ்த் தொலைக்காட்சியில் ஒழுங்கு செய்யப்பட்டது. அதையும்; புற்றளை பள்ளி கனடாக்கிளையினர் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இவ்விழாவை பேரறிஞர் முருகவே பரமநாதன் ஐயா அறிஞர் சாமி அப்பாத்துரை வேல் வேலுப்பிள்ளை பாவலர் கந்தவனம் வானெலி புகழ் கே.எசு.பாலச்சந்திரன் தென்புலோலியூர் இரட்ணம் கணேசு தென்புலோலியூர் நடராசன் ஐயா கிருட்ணவேணி ஆசிரியர் விவேகானந்தன் குடும்பத்தினர் சிவானந்தசோதி குடும்பத்தினர் கரவெட்டி இராசமோகன் ஆதரவு வழங்கி சிறப்பித்தார்கள். ஊடக ஆதரவாக கனடாத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். கனடாத் தமிழ் வானெலி கீதவாணி அலையோசை கனடாத் தமிழோசை கிழமை இதழான உதயன் முழக்கம் செந்தாமரை ஈழமுரசு மற்றும் இன்னும் பலர் திரை மறைவில் பல உதவியினை வழங்கியிருந்தனர்.

மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தக் கொள்கிறோம்.

2033(2002)ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப் பேசும் மாணவர்களுக்கு தமிழ் கணிதம் ஆங்கிலம் சிறந்த பேச்சாளர் தேர்வு ஆண்டு தோறும் நடைபெறுகிறது. கந்தமுருகேசனாரின் தன்னம்பிக்கை உறுதியான எண்ணம் தான் அவர் மீது உள்ள பற்று ஆகும். அவர் வழி சென்று எம் வாழ்க்கையில் பல வெற்றியினை படைக்கிறோம்..

நன்றி
வணக்கம்
ஆக்கியோன் மு.க.தமிழ்