வலி சுமக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு ஆப்படித்த இசுக்காபுரோ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை  நாள் உலகத்தமிழர்களின் மனங்களில் இருந்து அழிக்க முடியாத வரலாற்று வடு.ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18 ஆம் நாள் உலகத்தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து வருகிறார்கள். முள்ளிவாய்க்காலில் தமிழீழ பூர்வீகத் தமிழர்கள் சிங்கள இந்திய திராவிட இந்துத்துவ சதியோடு உலக நாடுகளின் கூட்டணியின் துணையோடு அழித்தொழிக்கப்பட்டார்கள்.அனைத்துலக சட்டஒழுங்குக்கு எதிராகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனி உரிமை சாசனத்திற்கு மாறாகவும் தமிழினம் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறார்கள்.ஈழத் தமிழர்களின் அறவழிப்போராட்டத்தை வன்கொடுமையால் அழிக்கப்பட்டு இன்றுடன் 13 ஆண்டுகளாகும்.

உலகத் தமிழர்கள் இந்த ஆண்டும் வழமையாக தமிழீழ மண்ணிலும் தமிழ்நாட்டுமண்ணிலும் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எழுச்சியோடு முன்னெடுக்கிறார்கள்.சிங்கள இனவெறியரசால் கொல்லப்பட்ட அப்பாவித்தமிழர்களால் கடைசியாக சாப்பிட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சியைக் காய்ச்சி நினைவேந்தி வருகிறார்கள்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளில் இனப்படுகொலைக்கான அனைத்துலக நீதி வேண்டியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளின் உறவினரின் நீதி வேண்டியும் தமிழீழப்படையாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் தடையை நீக்கவும் பயங்கரவாத அமைப்பின் பட்டியலில் இருந்து விலக்கிவிடவும் கனடாவில் எந்த அமைப்பும் எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை.

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நீதிக்காகவோ தமிழீழ விடுதலைப்படையான தமிழீழ விடுதலைப்புலிகளின் தடையை எடுப்பதற்காக எந்த அரசியல் முன்னகர்வையும் முன்னெடுக்காதவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வது மிகமிக இழிவாகும்.

 

இந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவகம் என்ற போலிப்பெயரில்  போலிவடிவத்தை வடிவமைத்து கனடாவாழ் தமிழர்களைமுட்டாள்களாக்கிய நினைவேந்தல் நிகழ்வு முன்நகர்த்தப்பட்டிருக்கிறது.இந்த தமிழின அழிப்பு நினைவகத்தின் பின்ணணி என்ன? யார் வடிவமைத்தது?வடிவமைப்பு எதன் பின்புலத்தைக் கொண்டது?இந்த வடிவமைப்புக்கான வளம் மற்றும் களம்எது?

 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொறுப்பானவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக அல்ல அதற்கு முன்பும் தமிழரின் உரிமைப்போராட்டத்திற்கு எதிராக சிங்கள இந்திய திராவிட இந்துத்துவ கால்களில் படுத்து உறங்கிக் கொண்டு கனடாவாழ் தமிழர்களை ஏமாளிகளாக்கிக் கொண்டு  தமிழ் மக்களின் இனப்படுகொலையை மூடிமறைக்கும் பணியில் தமிழினத்துரோகிகள் ஈடுபட்டுவருகிறார்.

 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தமிழினப்படுகொலையின் வலியோடு நிற்கிறார்களா?என்ற கேள்வி பலரிடம் உண்டு.

கனடாவில் பிரம்ரன் நகரில் நிறுவ இருக்கும் சிங்களபெளத்த சின்னவடிவமான தாமரை வடிவமைப்பை நிறுவதற்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்ப்பாட்டாளர்களால் முன்நிறுத்தப்பட்டதே இந்த தமிழின அழிப்பு நினைவகம்.

 

தமிழினத்துரோகிகளை மக்கள் இனம் காண்பதும்  சரியான வழியை பின்பற்றுவதும் கனடாவாழ் தமிழர்களுக்கான தேவையாகும்.

 

கனடா வாழ் தமிழர்கள் ஊடகங்கள் வணிகர்கள் தலையாட்டி பொம்மையாக இருப்பதை மாற்றி அறிவார்ந்த மக்களாக நாம் மாறவேண்டும்.இதை மக்கள் உணராதவரை தமிழினத்துரோகிகளின் தமிழ்த்தேசிய எதிர்ப்பு அரசியல் வலிமையாகவே இருக்கும். துரோகிகளை விரட்டும் வரை எமது குரல் தேசித்தலைவரின் வழியில் முன்னெடுக்கப்படும்.

தமிழினத் துரோகிகளை விரட்டிக் கொண்டு தமிழீழ குடியரசை நிறுவுவோம்.

இக்கட்டுரையில் உலகத்தமிழர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் 100 விழுக்காடு உள்ளடங்கியுள்ளது.  வெளியீட்டாளர்கள் 100விழுக்காடு இக்கட்டுரைக்கு பொறுப்பானவர்கள் அல்ல.வெளியீட்டாளர்கள் 100 விழுக்காடு தமதுகருத்தையோ எண்ணத்தையோ இக்கட்டுரையில் வெளியிடவில்லை.

இக்கட்டுரையில் உலகத்தமிழர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் 100 விழுக்காடு உள்ளடங்கியுள்ளது.  வெளியீட்டாளர்கள் 100விழுக்காடு இக்கட்டுரைக்கு பொறுப்பானவர்கள் அல்ல.வெளியீட்டாளர்கள் 100 விழுக்காடு தமதுகருத்தையோ எண்ணத்தையோ இக்கட்டுரையில் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *