விருந்தோம்பலில் உச்சத்தையும் நெஞ்சத்தையும் தொட்ட  கூடல்

2053 ஆம் ஆண்டு விடைத்திங்கள் 30 ஆம் நாள் காரிக்கிழமை(June 11,2022) காலை 10 மணிக்கு மிலிக்கன் பூங்கா பகுதி “சி”(Milliken Park-Area “C”  Mccowan & Steeles)பருத்தித்துறை வாழ் மக்கள் கூடிய போதுதேநீரோடு கோடைகால கூடலோடு தொடங்கியது.ஈழண்ணில் தோசைக்கு புகழ்பூத்த பருத்தித்துறைத்தோசைக்கு பலவகைச் சம்பல்களுடன் கத்தரிக்காய் குழம்பும் சிறப்பாக பகிர்ந்துண்டு மகிழ்ந்தார்கள்.தொடர்ந்து நெருப்பில் வாட்டிய அசைவ உணவுகள்சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்டு மகிழ்ந்தார்கள்..அதே நேரத்தில் தமிழரின் பாரம்பரிய உணவான கூழ் தயாரிப்பில் கனடாமண்ணில் 25ஆண்டுகளுக்கு மேலாக சுவையக பட்டறிவு நிறைந்த சமையல் கலை வல்லுனர்களின் கைவண்ணத்தில் செய்யப்பட்டு அனைவரும் சுவைத்து உண்ட உணவு தாயகக்கூழ்.

ஈழமண்ணின் புகழ்பூத்த உணவான கொத்துரொட்டி கொத்துவதில்  கனடாமண்ணில் 25ஆண்டுகளுக்கு மேலாக சுவையக பட்டறிவு நிறைந்த சமையல் கலை வல்லுனர்களின் கைவண்ணத்தில் கொத்தப்பட்ட கொத்துரொட்டி அனைவரும் பகிர்ந்துண்டார்கள்.

சிறுவர்களுக்கான விளையாட்டில் பல சிறுவர்கள் பங்கேற்றிருந்தனர்.விளையாட்டில் வெற்றிபெற்ற விளையாட்டுவீரர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.சிறப்பு அழைப்பாளராக ஒன்ராரியோ மாநிலஅவை உறுப்பினர் விசய் தணிகாசலம் ஒன்று கூடலில் பங்கேற்றிருந்தார்.விசய் சிறப்புரையாற்றினார்.விசய் விளையாட்டில் வெற்றிபெற்ற மழலை விளையாட்டுவீரர்களுக்கு பரிசுகள் வழங்கி மதிப்பளித்திருந்தார்.ஒன்ராரியோ மாநில முதல்வர் டக்போட் சார்பாக சான்றிதழ் தலைவர் மணியம் ஆசிரியரிடம் விசய் தணிகாசலம் கையளித்தார்.பருத்தித்துறை மக்கள் ஒன்றிய உறுப்பினர்களின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கோடைகாலக்கூடலில் பங்கேற்ற மக்களின் விருந்தோம்பலின் உச்சத்தையும் நெஞ்சத்தையும் வருடியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *