தமிழ்தேசிய ஆசான் கே.சி.சுப்ரமணியம் இறப்புத்திருவோலை 13.4.2021

தமிழ்தேசிய உணர்வாளரும் ஆங்கிலமொழி ஆசானுமாகிய கே.சி.சுப்ரமணியம் அவர்கள் புலோலி மண்ணில் பிறந்தார். இவர் 13.4.2021 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கல்வியாளர்கள் நிறைந்த மண்ணில் தமிழ்மொழிக்கு காலம்சென்ற ஆசான் கந்தையா ஆசிரியர் எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பண்டிதர் வீ.பரந்தாமன் ஆசிரியர் போன்று ஆங்கில மொழியில் ஆசானாக காலஞ்சென்ற நடராசா ஆசிரியர் வரிசையில் வடமாராட்சி மக்களால் பெருதும் போற்றுதலுக்கும் பெருமைக்குமுரிய ஆங்கிலமொழி ஆளுமை நிறைந்த ஆசிரியர் கே.சி.சுப்ரமணியம் ஆசிரியரே.நாம் அவரிடம் ஆங்கிலம் படித்த காலத்தில் கல்வியோடு நின்றுவிடாது தமிழ்த்தேசிய உணர்வுகளையும் சேர்த்து எமக்கு ஊட்டிய கல்வித்தாய் கே.சி.சுப்ரமணியம் ஆசிரியரே. விடுதலைப்போராட்டம் பற்றிய தகவல்களையும் அறிவூட்டிய கல்வி ஆளுமை நிறைந்தவர் தான்  கே.சி.சுப்ரமணியம் ஆசிரியர்.கடும் கோபம் நிறைந்தவர்.நிறைந்த நகைச்சுவையாக பேசும் பண்பு நிறைந்தவர்.மாணவர்களோடு நண்பர்களாக பழகும் அழகு நிறைந்தவர்.

நாம் பல ஆசிரியரிடம் கல்வி கற்றிருக்கிறோம்.ஆனால் பல வழிகளில் பல துன்புறுத்தல்களை வெவ்வேறு ஆசிரியர்கள் மீது மாணவர்களாக படித்த காலத்தில் நாம் செய்திருக்கிறோம்.ஆனால் தமிழ்மொழி ஆசான் கந்தையா ஆசிரியர் பண்டிதர் வீ.பரந்தாமன் ஆசிரியர் காலஞ்சென்ற நடராசா ஆசிரியர் ஆங்கிலமொழி ஆசான் கே.சி.சுப்ரமணியம் அவர்கள் மீது மாணவர்கள் குறும்பு செய்ததாக ஒரு செய்தியும் இல்லை.வடமராட்சி மண்ணின் மாணவர்கள் அனைவரும் தங்கள் அறிவை ஆற்றலை ஆளுமைகளை அள்ளி கொடுத்து மாணவர்களை உயரிய படைப்பாளிகளாக தமிழீழ மண்ணில் களமிறக்கிய ஆசான்கள். கே.சி.சுப்ரமணியம் அவர்களின் உயிர் உலகத் தமிழர்களின் மூச்சோடு இணைந்திருப்பதால் நமது மனதில் அவர் குடிகொண்டிருக்கிறார். அவரின் உயரிய ஆசிரியப்பணியைபெருமதிப்போடும் இன்றும் நாம் பேசி வருகிறோம்.

என் உயரிய வாழ்வுக்கு மாணவனாக இருந்த காலத்தில் மேலே குறிப்பிட்ட ஆசிரியப்பெருந்தகைகளின் பங்கு அளப்பரியது.இவருடைய உண்மையான பெயர் நான் மாணவனாக இருக்கும் பொழுது தெரியாது.அவரை நாம் கஸ்புஸ் என்று அழைத்தோம்.அதுதான் அவருடைய பெயராக நாம் இன்றும் கனடாவில் சந்திக்கும் நண்பர்களோடு கஸ்புஸ் என்று சொல்லித்தான் பேசுவோம்.

நாமும் அவரைப் போல் குமூக அக்கறையோடு பொதுப்பணியில் இணைந்து நல்ல தலைமுறையை உருவாக்குவோம்.

வடமராட்சி மக்கள் சார்பாக

பறை ஊடகக் குழுமம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *