மீள்நடுகை முள்ளிவாய்க்கால் நடுகைக்கல் 2052 ஆம் ஆண்டு மேழம் 12ஆம் நாள் வெள்ளிக்கிழமை (23.04.2021)

தமிழீழ மக்கள் தமது அரசியல் அதிகாரத்தை இழந்து 400 ஆண்டுகள் கடந்துவிட்டது.இந்த 400 ஆண்டுகளில் ஈழத்தமிழினம் இழந்தவை மிகமிக அதிகம்.இந்த 400 ஆண்டுகளில் ஈழத்தமிழினம் தொடர்ந்தும் எழுச்சியோடு தமது அரசியல் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.1948 இல் பிரித்தானியாவிடமிருந்து  தன்னாட்சி உரிமை பெற்றபின் சிங்கள இனத்தின் கை ஓங்கி தொடர்ந்தும் தமிழர்களை அழித்துவந்தது.1948 இலிருந்து அறவழி உரிமைப்போர் தொடர்ந்தது.அதில் ஈழத்தமிழர்கள் மிகப்பெரிய அழிவை சந்தித்தார்கள்.அரசியல் உரிமை பெறுவதில் மேலும் சிக்கல்கள் நடுவில் உரிமைக்கான போர் வலிமை பெற்றது. சிங்களவர்கள் தமிழர்களை கருவி கொண்டு அடக்கியபோதுதான் கருவிப்போர் ஈழமண்ணில் சிங்களவனால் பெற்றுப்போடப்பட்டது.சிங்கள இனவெறியர்களால் பிறப்பிக்கப்பட்ட தமிழீழ விடுதலைக்கான கருவிப்போரில் தமிழீழ மக்கள் வலிமை பெற்றார்கள்.5 அமைப்புகள் தமிழீழ விடுதலைப்போரைத் தொடங்கியபோது தமிழீழக்கோரிக்கையை கைவிடாமல் மக்களோடு நின்று போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.தமிழீழ விடுதலைப்புலிகள் தேசியத்தலைவரின் வழிநடத்தலில் வான்படையும் அமைத்து தமிழீழ தனியரசை நிறுவினார்கள்.தமிழீழ தனியரசின் படைச்சமநிலையென்பது உலக வல்லாதிக்க படைச்சமநிலைக்கு ஒப்பாக தேசியத்தலைவர் கட்டமைப்பை கட்டி வைத்திருந்தார்.

சிங்கள இனவெறியரசு உலகநாடுகளின் உதவியோடும் தமிழின துரோகக் கும்பலின் துணையோடும் தமிழீழ மக்களை அழித்தது.தமிழீழ மக்களைக் காப்பாற்ற தமிழீழவிடுதலைக்கான கருவிப்போர் மௌனிக்கப்பட்டது.ஆனால் உலகநாடுகள் தமிழீழ அரச கட்டமைப்பையும் முற்றாக அழித்தது.2009 ஆம் ஆண்டு முதல் ஈழத்தமிழனத்தை அழித்த உலகநாடுகள் தொடர்ந்தும் இன்றுவரை சிங்கள இனவெறியரசைக் காப்பாற்றி வருகின்றன.நீண்டநெடிய வரலாற்றுப் பெருமையோடும் காலத்தால் அழிக்க முடியாத தமிழ் மொழியையும் உலகத்தில் வாழும் 12கோடித் தமிழர்களும் கட்டி அணைத்து முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று உலக அரங்கில் தமிழ்த்தேசிய விதை ஆழமாக உன்றியுள்ளது.

அதன் வெளிப்பாடாக கடந்த 2021 ஆம் ஆண்டு சனவரி 8 ஆம் நாள் இரவோடு இரவாக சிங்கள இனவெறியரசின் வேண்டுகைக்கு அமைய யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுக்கல் அரச பணியாளரின் தலைமையின் கீழ் உடைத்தெறியப்பட்டது. இதன் விளைவாக பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் அனைவரும் உணவுத்தவிர்ப்பில் இறங்கினார்கள். ஈழமண்ணில் உணவுத்தவிரப்பை முன்னெடுத்த மாணவ மணிகளுக்கு 

உலகத் தமிழர்கள் ஓங்கி குரல் எழுப்பினார்கள். உலக நாடுகளும் பெரும் அதிர்வை வெளிப்படுத்தியகின் வெளிப்பாட்டில்  சிங்கள அரசபடைகளின் தடைகளையும் தாண்டி தடுத்தபோதும் மீண்டும் அதே இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கல் நட ஒப்புதல் அளிக்கும்வரை உலகத்தமிழரின் போராட்டம் வெடித்தது.மீண்டும் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவுக்கல்லுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

23.4.2021 முள்ளிவாய்க்கால் நினைவுக்கல் மீண்டும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால்  தமிழ்தேசிய எழுச்சியோடு  திறக்கப்பட்டது.அத்தோடு கனடா மண்ணில் பிரம்மன் நகரசபை உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவோடு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால்  நினைவுக்குக் கல்லைப் போல் பிரம்மன் மண்ணிலும் நினைவுக்கல் வைப்பதாக நகரசபை உறுதியளித்துள்ளது.அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.தமிழ்த்தேசிய வலிமை உலகப்பந்தில் வலிமை பெற்றிருக்கிறது. தன்னாட்சி நிறைந்த தமிழீழத் குடியரசு நிறுவும் வரை நாம் போராடுவோம்.

ஈழத்தமிழரின் தமிழ்த்தேசிய இறைமையைப் பாதுகாக்க தன்னாட்சி நிறைந்த தமிழீழக்குடியரசே தீர்வாகும். தமிழீழம் கிடைக்கும்வரை போராடுவோம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *