104 சட்டவரைபுக்கு எதிரான வழக்கில்  திட்டமிட்டு நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும்தமிழினப்படுகொலையின் கண் கண்ட சாட்சியங்களைப் பயன்படுத்த மறுத்த இரண்டு அமைப்புகள்

ICEDT booksnew books

 104 சட்டரைபுக்கு எதிரான வழக்கை  குத்தகைக்கு எடுத்து தமிழர் தரப்பை பலவீனமாக்கிய இரண்டு அமைப்புகள்(NCCT and Tamil right group)

கனடாவில் 104 தமிழினப்படுகொலை கல்வியூட்டல் சட்டவரைபு ஒன்ராரியோ மாநில அவையில் கொண்டுவந்த காலம் முதல் சிங்களமக்களும் சிங்கள இனவெறியரசும்    பல்வேறு இடையூறுகளையும் தடைகளையும் மேற்கொண்டுவருகிறார்கள்.

ஈழமண்ணில் சிங்கள இனவெறியரசாலும் சிங்கள மக்களாலும் தமிழர்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறார்கள். சிங்கள மக்களிடமும் சிங்கள அரசிடமும் இருந்து உயிர் அச்சுறுத்தலில் இருந்து கனடாவுக்குஉயிர் தப்பி வந்தவர்கள் தமிழர்கள்.கிட்டத்தட்ட 400000 தமிழர்கள் சிங்கள இனவெறிக்கொலையில் இருந்து தப்பி கனடாவில் வாழ்கிறோம்.

கனடாவிற்கு தப்பி வந்த தமிழர்கள் கனடாவின் குடியுரிமைச்சட்ட ஒழுங்குக்கு உட்பட்டு வாழ்கிறார்கள். கனடாவில் வாழும் தமிழர்களை அழிப்பதற்காக கனடாவில் சிங்கள மக்களும் சிங்கள அரசும் தொடர்ந்து தமிழர்களின் கனடாக்குடியுரிமைச் சட்ட ஒழுங்குக்கு  எதிராக தமிழர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக கனடாவில் செயற்படுகிறார்கள்.பிறந்த மண்ணிலும் புலம்பெயர்ந்த கனடா மண்ணிலும் சிங்கள மக்களாலும் சிங்கள இனவெறியரசாலும் தமிழர்களின் வாழ்வுக்கு உயிர் அச்சுறுத்தலான செயல்களை முன்னெடுக்கிறார்கள்.இதனால் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

104 சட்டவரைபுக்கு எதிராக இரண்டு அமைப்புகள் கொடுக்கு கட்டிக்கொண்டு தமிழர்பக்கம் உள்ள சிறந்த வாய்ப்புகளை திட்டமிட்டு நழுவ விட்டிருப்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

சிங்கள தரப்பில் 104 சட்டவரைபை உடைப்பதற்காக ஒற்றுமையாக சிங்கள தரப்பின் வெற்றிக்காக  கடுமையாக உழைக்கிறார்கள்.

தமிழர் தரப்பில்  கனடாத் தமிழர் தேசிய அவையும் தமிழர் உரிமைக் குழுமத்தினரும் 104 சட்டவரைபிற்கு எதிரான வழக்கைப் பற்றி கனடாவாழ் தமிழர்களோடு கலந்தாலோசிக்காமல் இவ்வழக்கில் தம்மை முன்னிலைப்படுத்தி  மக்களை ஏமாற்றியிருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

அரசியல் ஆளுமையையோ ஈழமண்ணின் அரசியல் வரலாற்றையோ சரியான முறையில் படித்து அறிந்துகொண்டு 104 சட்டவரைபுக்கு எதிராக நம்மிடம் உள்ள வலுவான தரவுகளை இரண்டு அமைப்பும்  திட்டமிட்டு சமர்ப்பிக்கத் தவறவிட்டுள்ளார்கள்.கனடாவாழ் தமிழ் மக்கள் இந்த இரண்டு அமைப்புகளையும் புறக்கணிப்போம் எனப் பேசிக்கொள்கிறார்கள். 

தமிழின படுகொலை பற்றிய போதிய வலுவான தரவுகளை வழங்காமல் தமிழர்கள் பக்கத்தை பலவீனமாக்கியவர்கள் கனடாத்தமிழர் தேசிய அவையும் தமிழர் உரிமைக் குழுமத்தினருமே.

கனடாவாழ் தமிழர்களோடு கலந்தாலோசிக்காமல் தவறாக பிழையாக தமிழர்களை வழிநடத்தும் இந்த இரு அமைப்புகளையும் கனடாவாழ் தமிழர்கள் புறக்கணிக்கவேண்டும்.

சிங்கள மக்களாலும் சிங்கள அரசாலும் கடந்த 72 ஆண்டுகளாக தமிழர்கள் அழித்த வரலாற்றின் கண்கண்ட சாட்சிகள் நம்மோடு வாழ்கிறார்கள்.2009 தமிழினப்படுகொலையில் கண்கண்ட சாட்சிகள் பலர் எம்மோடு வாழ்கிறார்கள். ஏன் இந்த இரு அமைப்புகளும் 104 சட்டவரைபுக்கு எதிரான வழக்கில் கண் கண்ட சாட்சியங்களைப் பயன்படுத்தவில்லை?

வலுவான இனப்படுகொலைச் சான்றுகளை கையாலும் ஆற்றலும் அறிவும் இல்லாத இரண்டு அமைப்புகளை மக்கள் தூக்கியெறியுங்கள்.

இந்த இரண்டு அமைப்புகளும் தமிழினப்படுகொலை வழக்கை விசய் தணிகாசலத்திடம் குத்தகைக்கு எடுத்து கனடாவாழ் தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தை முடக்குகிறார்களா?

இக்கட்டுரையில் உலகத்தமிழர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் 100 விழுக்காடு உள்ளடங்கியுள்ளது.  வெளியீட்டாளர்கள் 100விழுக்காடு இக்கட்டுரைக்கு பொறுப்பானவர்கள் அல்ல.வெளியீட்டாளர்கள் 100 விழுக்காடு தமதுகருத்தையோ எண்ணத்தையோ இக்கட்டுரையில் வெளியிடவில்லை.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *