செந்தமிழன் சீமான் வேண்டுகையில் தைப்பூச திருநாள் விடுப்பு

https://youtu.be/ukkjc8HsOpI

கடந்த 50 ஆண்டுகளாக திராவிட திருவாளர்களால்  தமிழர்களுடைய பண்பாட்டு விழுமியங்களை அழித்தொழித்தார்கள்.தமிழ் அரசர்களால் கட்டியெழுப்பப்பட்ட சைவக் கோயில்களுக்கு தமிழர்களைத் போகவிடாமல் திராவிட திருவாளர்கள் பொய்யான கொள்கைகளை விதைத்து முற்றாக தமிழர்களின் பண்பாடுகளை திராவிடத் திருவாளர்கள் அழித்தார்கள்.தமிழர்களின் வழிபாட்டு முறைக்குள் தமிழை உள்நுழையவிடாமல் பாதுகாத்த்தவர்கள்  திராவிட திருவாளர்களே. அதேநேரம் ஆரியத்தின்  செத்த வடமொழியை சைவக் கோயில்களிலிருந்து விரட்டாமல் பாதுகாத்தவர்கள் திராவிடத் திருடர்கள்.

 

திராவிடக் திருவாளர்களின் இந்த தமிழ்த்தேசியத் துரோகங்களை தோலுரித்துக் காட்டிய பெருமை செந்தமிழன் சீமான். சீமானால்  பண்பாட்டு புரட்சிக்காக உருவாக்கப்பட்ட வீரத்தமிழர் முன்னணியினரே பண்பாட்டு புரட்சியில் வெற்றி கண்டார்கள்.

கடந்த 50 ஆண்டு வரலாற்றில் தமிழர்களின் புத்தாண்டுக்கு விடுப்பு இல்லை.தைப்பூசத்திற்கு விடுப்பு இல்லை. மற்றைய மாநிலங்களின் பெருநாட்களில் தமிழ்நாட்டில் விடுப்பு. 

 

செந்தமிழன் சீமான் அதிமுக ஆட்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம்தைப்பூசவிடுப்புக்கான வேண்டுகை வைத்தார்.அதை ஏற்று 2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் தைப்பூச விடுப்பு நாளாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

 

செந்தமிழன் சீமானின் முயற்சியால் முதல்முதலாக தைப்பூச திருநாளுக்கு தமிழ்நாட்டுக்கு விடுப்பு கிடைத்தது.தைப்பூச விடுப்பைப் பெற்றுக்கொடுத்த தமிழ்த் தேசியத்தின் மகன் செந்தமிழன் சீமான்.

திராவிட திருவாளர்கள் தொடர்ந்தும் தமிழ்மக்களை தமிழீழ மண்ணிலும் தமிழக மண்ணிலும் அழிக்கும் திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.இதற்கு பல ஈழத்தமிழர்களை திராவிட ஆரிய திருவாளர்கள் பலிகடாக்களாக நேர்ந்து வைத்து திராவிட எலும்புத் துண்டுகளை போட்டு வளர்த்து வருகிறார்கள்.தமிழ்த்தேசியத்தை விலைபேசும்சில  ஈழத்தமிழர்கள் திராவிட ஆரிய எலும்புத்துண்டுகளை கடித்து சுவைப்பதில் சுகம் காண்கின்றார்கள்.

 

உலகத்தமிழர்களே திராவிட ஆரிய திருவாளர்களின் திருவிளையாடல்களை ஆற்றலும் அறிவும் ஆளுமையும் நிறைந்த 12கோடி தமிழ் மக்களிடம் நடைபெறாது.அதற்கு எவரும் தயாராக இல்லை.

 

நாம் அனைவரும் தமிழ்தேசியக் குடையின் கீழ் அணிதிரண்டு தமிழக மக்களின் வாழ்வுக்காக கைகோர்த்து இணைந்துகொள்வோம்.

 

திராவிட ஆரிய தமிழின் அழிப்புக்கு எதிராக நாம் குரலெழுப்பி தமிழ்த்தேசிய அரசியலை வலுப்படுத்தி நமக்கான தமிழக மக்களுக்கான அரசியலை உலக அரங்கில் தூக்கி நிறுத்துவோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *