தமிழனுக்கு கிடைத்த முதல் வெற்றி தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு 

 

கடந்த 50 ஆண்டுகளாக திராவிட ஆரிய திருவாளர்கள் தமிழை சைவக் கோயில்களில் போகவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தார்கள்.வடமொழி மந்திரத்தை சைவக்கோயிலிருந்து வெளியேற்றவிடாமல் பாதுகாத்தவர்கள் இந்த திராவிட ஆரியத் திருவாளர்கள்.திராவிடத்தின் போலிப்பகலவன் ஈ.வே.ராமசாமி தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லி தமிழையும் தமிழனையும் இழிவுபடுத்தினார்.கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் போகவேண்டுமென்று போராடியவர்.ஆனால் கோயிலுக்குள் கருவறையில் நின்று தாண்டவமாடிய செத்த வடமொழிக்காக ஏன் ஈ.வே.ராமசாமி குரல் கொடுக்கவில்லை? இங்கேதான் ஆரியனும் திராவிடனும் ஒன்றாய் நிற்கிறான். ஆரியமும் திராவிடமும் ஒன்றுதான்.தமிழர் அல்லாதவர்கள் தமிழை அளிக்கத் துடிப்பவர்கள்.இவர்களை தோலுரித்து தமிழ்நாட்டுத் தெருக்களில் தொங்கப்போட்டு தமிழக மக்களை தட்டியெழுப்பிய பெருமைக்குரிய  தமிழ் தேசியத்தின் ஒப்பற்ற  தேசியத்தலைவரின் தம்பி சீமான்.

உலக வரலாற்றில் 1010 ஆண்டு பழைமை வாய்ந்த சிவனுக்கு தமிழில் குடமுழுக்கு செய்யவேண்டும் என்று போராடிய செந்தமிழன் சீமானும் அவரோடு கைகோர்த்து வாக்களித்த 17 இலக்கம்1700000) தமிழ்நாட்டின் அரசியலை கையெடுத்த தமிழக இளையவர்கள். தமிழக மண்ணில் தமிழக மக்களின் வாழ்வியலை வளப்படுத்த புறப்பட்ட நாம் தமிழர் கட்சி அறிவு ஆற்றல் ஆளுமை இனவுணர்வு மொழியுணர்வு கொண்ட பல இலக்கம் தமிழக தமிழர்களுக்கு உலகில் வாழும் 12கோடி தமிழர்களும் இணைந்து நாம் தமிழர் கட்சியை பலப்படுத்தவேண்டும்.

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தவேண்டுமென்று வழக்காடி தமிழிலும் குடமுழுக்கு செய்யவேண்டும் என நீதிமன்ற தீர்ப்பை ஏற்றி தமிழை வழிபாட்டு தளத்தில் நிலைநிறுத்தியவர்கள் நாம் தமிழர் கட்சியும் வீரத்தமிழர் முண்ணியினருமே.

தமிழக மக்களின் வாழ்வை அழிக்கும் திட்டங்களை கொண்டு வரத்துடிக்கும் திராவிட ஆரிய திருவாளர்களை தமிழக மண்ணிலிருந்து விரட்டவேண்டிய பொறுப்பும் கடமையும் உலகில் வாழும் 12கோடி மக்களின் தமிழ்தேசியம் பணியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *