செந்தமிழன் சீமான் அமோக வெற்றி

50 ஆண்டு காலமாக தமிழக வளங்களைச் சுரண்டி பிழைப்பு நடத்திய திராவிட ஆரியக் கும்பலுக்கு தமிழக மக்கள் சங்கு ஊதிவிட்டார்கள்.2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வளங்களைச் சுரண்டிக் கொழுத்த திராவிட திருவாளர்களுக்கு தமிழக மக்கள் ஆப்படித்துவிட்டார்கள்.

1991லிருந்து திராவிடத்திருவாளர்களால் போலித் தமிழ்த் தேசியம் பேசி தமிழக மக்களையும் தமிழீழ மக்களையும் புலம்பெயர் மக்களையும் ஏமாற்றி வந்தார்கள்.விடுதலைப்புலிகளின் தடை.தமிழீழ விடுதலை பற்றிப் பேசமுடியாது.இந்தக் காலகட்டத்தில் தமிழ்த்தேசிய ஆதரவாளராக தம்மை இனம் காட்டிய போலித் தமிழ் தேசியவாதிகள் எந்தவிதமான தமிழ்த்தேசிய அரசியலைச் செய்யாமல் இருந்தார்கள்.2009 தமிழின அழிப்பில் பங்கேற்ற திராவிட ஆரிய திருவாளர்களின் உண்மை முகம் கிழிந்தது.தமிழக தமிழீழ புலம்பெயர் மக்களின் இனவழிப்பு வலியிலிருந்து மீள முடியாமல் துடித்தோம். ஆனால் திராவிட ஆரிய போலித் தமிழ்தேசிய திருவாளர்கள் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தார்கள்.திராவிடப் பகலவனால்  காட்டுமிராண்டி மொழி என இழி முத்திரை குத்திய ஈ.வே.ராவும் அவரின் திராவிடக் கும்பல்களும் தமிழை தமிழனை அழிப்பதில் குறியாக இருந்தார்கள். 

செந்தமிழன் சீமான் 2008,2009 காலப்பகுதிகளில் தமிழ்த்தேசியம் பரப்புரையில் விடுதலைப்புலிகளால் இனம் களமிறக்கப்பட்டவர்.2009 இல் செந்தமிழன் சீமான் தமிழ்த்தேசிய அரசியலை தமிழ்நாட்டு மண்ணில் களமாடப் புறப்பட்டார்.அவர்பின் பல இலட்சம் இளையவர்கள் இணைந்து கொண்டார்கள்.திராவிட ஆரிய திருவாளர்களின்  தடைகளை உடைத்து நாம் தமிழர் கட்சியை கட்டமைத்தார்.திராவிட திருவாளர்களின் திருகுதாளங்களை செந்தமிழன் சீமான் தமிழ்த்தேசிய மேடைகளில் முழங்கினார்.நாம் தமிழர் கட்சி 2016 இல் 2019 இல் தனித்து போட்டியிட்டார்கள்.

2021 இல் புதிய அரசியல் அடிப்படை மாற்றத்திற்கான அங்கீகாரத்தை தமிழக மக்கள் வழங்கிவிட்டார்கள்.2021 ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம்நாள் தமிழ்த்தேசிய அரசியல் ஆளுமை நிறைந்த செந்தமிழன் சீமானும் அவர் அண்ணன் தம்பி அக்கா தங்கை அமோக வெற்றிக்கான செய்திக்காக 12 கோடி தமிழர்களும் காத்திருக்கிறோம்.

தமிழக மக்களின் வாழ்வியல் வளமாக வாக்குகளை அள்ளி வழங்கி இருக்கிறார்கள்.

வாழ்க சீமானிசம்! வாழ்க நாம் தமிழர்! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *