தமிழ்த்தேசிய துரோகிகளை  இனம் காட்டிய தமிழக தேர்தல் 2021

 

தமிழக மண்ணில் தமிழக தமிழ்த் தேசிய அரசியலை செந்தமிழன் சீமான் தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்திலிருந்து தமிழ்த் தேசிய பரப்புரையை மேற்கொண்டவர்.தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை தமிழ்த்தேசிய அரசியல் கொள்கைகளை எள்ளளவும் விலகாமல் இன்றுவரை தமிழ்த்தேசியப் பரப்பில் களமாடும் ஆளுமை நிறைந்தவர் செந்தமிழன் சீமான்.2008 பகுதியில் கனடாவில் தேசியத்தலைவரின் பிறந்தநாள் விழாவில் சிறப்புரை ஆற்றியிருந்தார்.அதன் தொடர்ச்சியாக தமிழக மண்ணில் 2009 இனவழிப்பிற்குப் பின் தமிழ்த்தேசிய அரசியலை செந்தமிழன் சீமான் முன்னெடுத்தார்.

1991 ஆம் ஆண்டு ராயீவ் காந்தி கொலைக்குப்பின் தமிழக தெருக்களில் தேசியத் தலைவரையோ விடுதலைப்புலிகளின் கொடியோ ஆதரவோ வழங்கினால் சிறை செல்வது உறுதி.திராவிடத் திருவாளர்கள் போலித் தமிழ்த் தேசியவாதிகளாக தமிழக மண்ணில் இருந்தபோது எந்த தமிழ்தேசிய அரசியலையும் முன்னெடுக்காமல் முடக்கினார்கள்.அதன் வெளிப்பாடுதான் உலக வல்லாதிக்க அரசுகளுக்கு ஈடான தமிழீழ படைப்பலத்தைக் கட்டியெழுப்பிய தேசியத்தலைவரின் தலைமையிலான தமிழீழ அரசை அழித்தார்கள்.

2009 இனவழிப்பைத் தொடர்ந்து செந்தமிழன் சீமான் நாம் தமிழர் என்ற இயக்கத்தைத் தொடங்கி தமிழ்த்தேசிய அரசியலை தமிழக மண்ணிலும் புலம்பெயர் நாடுகளில் பரப்புரை செய்து வந்தார்.பின் அரசியல் கட்சியாக மாற்றினார்.புலம்பெயர் நாடுகளில் இருக்கும் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டின் தமிழ்த்தேசிய அரசியலை சீரழிக்கின்ற பணியை 2021 ஆம் ஆண்டு தேர்தலில் மும்முரமாக பொய்களை விதைத்தார்கள். இந்த இழி பணியைச் செய்து ஈழத்தமிழன் என்ற தமிழ்த்தேசியக் தலைவரால் உயர்த்திய பெருமையை அவமானச்சின்னமாகியிருக்கிறார்கள்.

தமிழக மக்களின் தமிழ்தேசிய அரசியலை சீரழிக்கும் உரிமை ஈழத்தமிழருக்குக் கிடையாது.ஏன்? நாம் தமிழர் கட்சியின் தமிழ்த் தேசிய அரசியல் என்பது தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை வளமாக்கி வாழ்வியலை வளப்படுத்தும் தற்கால அரசியல்.ஈழத்தமிழர்களை சிங்களவன் அழித்தான். ஈழத்தமிழர்கள் தமிழக  மக்களின் வாழ்வை அழிக்கும் இழிதொழிலை இன்று செய்துகொண்டிருக்கிறார்கள்.தமிழ் நாட்டில் தமிழருடைய மண்ணின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய திராவிடத் திருவாளர்களுக்கு முண்டு கொடுக்கும்  போலி ஈழத்தமிழ்த்தேசியவாளர்கள் பலிக்கடாக்களாக திராவிடப் பண்ணையில் தீனீ போட்டு வளர்க்கப்பட்டார்கள்

2021தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழ்த்தேசியத்தோடு நாம் தமிழர் கட்சி களமாடினார்கள்.களமாடிய நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களின் தகுதிகள் என்ன?

1.எதுவித குற்றவியல் செயலில் ஈடுபடாதவர்கள்.

2.கல்வியாளர்கள்

3.இளைய தலைமுறை

4.நிறைந்த அரசியல் அறிவு

5.நிறைந்த ஆளுமை

6.நிறைந்த ஒழுக்கம்

7.தமிழ்த் தேசிய வழிக்கொள்கை

8.மக்கள் சேவையே மகேசன் பணி

9.50/50 ஆண் பெண் வேட்பாளர்

இன்னும் பல திறமைகளோடு தமிழக தேர்தலில் களமாடிய வர்கள்.

10.வாக்குக்கு பணம் கொடுக்காதவர்கள்

11.ஊழலை ஒழிப்பவர்கள்

12.கையூட்டை அழிப்பவர்கள்

13.தனித்து களமாடுபவர்கள்.

14.கொலை செய்யாதவர்கள்

 

திராவிட திருவாளர்கள்

1ஊழலில் விற்பன்னர்கள்

2.கல்வியறிவற்றவர்கள்

3.50 அகவையைத் தாண்டி யவர்கள் அதிகம்

4.அரசியல்அறிவு அற்றவர்கள்

5.பொருளாதார அறிவு அற்றவர்கள்

6.கையூட்டு பெறுபவர்கள்

  1. பல மனைவிகளோடு வாழ்பவர்

8.மண்வளத்தை சுரண்டும் வர்கள்

9.மக்களை ஏமாற்றுபவர்கள்

10.வாக்குக்கு பணம் கொடுப்பவர்கள்

11.மண்ணின் நிதியை ஒதுக்குபவர்கள்

12.பல குற்றச்செயலுக்கு பொறுப்பாளர்கள்

13.கற்பழிப்பில் வல்லவர்கள்

14.கொலை செய்வதில் வல்லுனர்

 

மேலே சொல்லப்பட்ட நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசிய வேட்பாளரோடு திராவிட வேட்பாளர்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

உலக வரலாற்றில் நாம் தமிழர் கட்சி  அதி உயர் சிறந்த வேட்பாளரை செந்தமிழன் சீமான் 2016,2019,2021களமாட களமிறங்கினார்.தமிழீழ மக்களின் விடுதலைப்போருக்கு தமிழக மக்களின் பங்களிப்பு அளப்பரியது.1970 ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரை தமிழக மக்கள் தமிழீழ மக்களின் விடுதலைக்கு  அளப்பரிய ஈகத்தை செய்திருக்கிறார்கள்.அந்த அளப்பரிய ஈகங்களை மறந்து ஈழத்தமிழர்கள் தமிழக மக்களின் அரசியலுக்கு துரோகிகளாக இன்று உலகப்பந்தில் இருந்து கொண்டு தமிழக மக்களின் அரசியலை அழிப்பதற்கு துணை நின்றார்கள். ஈழத்தமிழர்களை அழித்த திராவிட ஆரிய திருவாளர்களின் சூழ்ச்சியால் தமிழக மக்களின் தமிழ்த் தேசிய அரசியலை அழிப்பதற்கு பொய்களைப் பரப்புவதற்கு ஈழத்தமிழர்கள்  துணை நிற்கிறார்கள்.  

புலம்பெயர்ந்த தமிழீழ மக்களால் விடுதலைப்போருக்கு அள்ளி வழங்கிய பணத்தை சொத்துக்களை சுருட்டிய கள்ளர்களுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு சீமானை இழிவுபடுத்திப்பேச எவனுக்கும் அருகதை கிடையாது. தமிழக மண்ணில் முன்னெடுக்கும் தமிழ்த்தேசிய அரசியலுக்கு சேறுபூச முற்படும் போலித் தமிழ்த் தேசியவாதிகளை தோலுரித்துக் காட்ட பறை ஊடகம் தயங்காது.குறிப்பாக கனடா மண்ணில் தமிழ்த்தேசிய அரசியல் கொள்கைகளை நீங்கள் விமர்சனம் செய்யலாம். தனிப்பட்ட சீமானை விமர்ப்பரவர்களையும் நாம் தோலுரித்துக் காட்டுவோம்.தமிழ்த்தேசிய அரசியலுக்கு எவன் சேறுபூசினாலும் தோலுரித்து காட்டுவோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *