2016 இல் 400000 மேலான தமிழக களப் போராளிகளை திரட்டிய செந்தமிழன் சீமான்

 

இரா சம்பந்தன் திராவிட ஆரிய திருவாளர்கள் சிங்கள உலக கூட்டுச் சதியில் தமிழ் மக்களுடைய அரசியல் அதிகாரத்திற்கான தமிழீழ கட்டமைப்பு 2009 இல் அழிக்கப்பட்டது.இந்த அழிப்புக்கு எண்ணில் அடங்காத உலக அரச படைகளின் வலிமையைப் பயன்படுத்தி தமிழீழ மண்ணில் 400 ஆண்டாகஅரசியல் அதிகாரத்திற்காக போராடிய தமிழர்களையும் அவர்களின் கட்டுமானங்களை யும் அழித்தொழிக்கப்பட்டது. 

எமக்கு இதுதான் முதல் அழிவு அல்ல.1621இல் யாழ்ப்பாண அரசு வீழ்த்திய போது ஏற்பட்ட அழிவும் முள்ளிவாய்க்கால் அழிவும் சமம். முள்ளிவாய்க்காலில் தொழில்நுட்பம் கருவிகளைப் பயன்படுத்தப்பட்டது.

கடந்த 400 ஆண்டுகளாக அரசியல் அதிகாரத்திற்கான போர் பல்வேறு வடிவங்களில் நகர்ந்திருக்கிறது.எப்போதும் ஈழத்தமிழர்களை வீழ்த்திய போது அதே வீழ்த்தியவேகத்தில் எழுந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஈழமண்ணில் 2009 இனப்படுகொலையின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்டபோது அதேநாளில் உலகப்பந்தில் புலிக்கொடி பறந்தது.தமிழீழ மண்ணிலும் தமிழ்நாட்டு மண்ணிலும் புலிக்கொடி பறக்க பிடிக்கத் தடை.

 

2010 மே மாதத்தில் தமிழ்நாட்டின் தடைகளை உடைத்தெறிந்து புலிக்கொடியை தமிழ்நாட்டில் பறக்கவிட்ட முதல் தமிழன் செந்தமிழன் சீமான்.தடைகளை உடைத்து தேசியத்தலைவரின் படங்களை மேடைகளிலும் மக்களின் நெஞ்சத்திற்கு நெருக்கமாக கொண்டு சேர்த்த பெருமை தமிழ்த்தேசிய ஆளுமை நிறைந்த செந்தமிழன் சீமான்.

 

2009 க்கு முன் தமிழக இளையதலைமுறை தமிழ்த்தேசிய அரசியல் புரிதல் இல்லாமல் திராவிட திருடர்களின் திருட்டு மாயைக்குள் மறைந்திருந்தார்கள்.  

திமுக அதிமுக இதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது.

இந்நிலையில் இருந்த தமிழ்நாட்டு இளசுகளுக்கு பட்டி தொட்டியெங்கும் மேடைபோட்டு தமிழ்த் தேசிய அரசியல் கல்வியை தமிழ்த் தேசிய அரசியல் தாயால் செந்தமிழன் சீமானால் ஊட்டப்பட்டது.

 

தமிழ்நாட்டில் செந்தமிழன் சீமானின் தமிழ்த்தேசிய அரசியல் பரப்புரையால் இளைய தலைமுறையினரின் கூட்டம் சீமானோடு இணைந்தார்கள். களத்தில் நின்று போராடினார்கள்.இத் தமிழ்த் தேசியப்பரப்பு தூய்மை உண்மை நேர்மை பண்பு ஒழுக்கம் மதிப்பு என பல்வேறு நற்குணங்ஙளோடு தமிழக தமிழ்த் தேசியப்பரப்பில் வலிமை பெற்றது.

செந்தமிழன் சீமானின் தமிழக அரசியலில் திராவிட திருவாளர்களின் இழிவான அரசியலுக்கு எதிரான நேர்த்தியான அரசியல் வலிமை பெற்றது.

2016 தேர்தலில் உலக சாதனையின் உச்சசாதனையாக தமிழக அரசியல் களத்தில் 50/50 ஆணும் பெண்ணும் சமமாக களமாடினார்கள்.

2016 தேர்தலில் 500000 தூய்மையான தமிழ்த் தேசிய இளம் வாக்காளர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தார்கள்.

உலக வரலாற்றில் தமிழ்த் தேசிய அரசியல் தொடங்கி 6 ஆண்டுகளின் 500000 தமிழ்த் தேசிய அறிவாற்றல் நிறைந்த போராளிகளை தமிழக சாலைகளில் செந்தமிழன் சீமான் களமிறங்கி தமிழ்த்தேசிய அரசியலை வலிமையோடு முன்னெடுத்தார்.

 

2016 இல் பல இடையூறுகள் இருந்தன.அவற்றயெல்லாம் உடைத்தெறிந்த பெருமைக்குரியவர் செந்தமிழன் சீமான்.

 

திராவிட முன்னேற்றக் கழகம் 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாளில் இயக்கமாக உருவாக்கப்பட்டது.

1967 இல் மூன்றாவது சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றார்கள்.

1949 முதல் 1967வரை திமுக பல பின்னடைவுகளை சந்தித்தது.தெருத்தெருவாய் பிரச்சனையும் எடுத்தார்கள்.72 ஆண்டாக தமிழ்நாட்டையும் தமிழர்களையும் திராவிட சிந்தனைகளில் புதைத்து தமிழ் தமிழர்களின் இறைமையை அழித்த திராவிடத்தை இன்று எதிர்க்கின்ற வல்லமை சீமானிடம் பேசும் செந்தமிழன் சீமானால் மட்டுமே முடியும். உலகத் தமிழர்களின் அரவணைப்போடு களமாடும் தமிழ்த்தேசியம் போராளி செந்தமிழன் சீமான் வாழ்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *