டேய் தனித்து நிற்கிறானே அதுதான்டா சீமானீசம்

என் உயிர்த்தலைவன் சமரசமின்றி தமிழரின் உரிமைக்காக களமாடிய பெருந்தகை.தலைவன் களத்தில் இல்லை.இன்றையஒவ்வொரு நொடிப்பொழுதும் தேசியத்தலைவனை உலகப்பந்தில் உருண்டு கொண்டிருக்கும் மனிதர்கள் பிரபாகரனை உச்சரித்து க் கொண்டேயிருக்கிறார்கள்.இவர்கள் அனைவரின் நெஞ்சத்தில் குடிகொண்டிருப்பவன் என் உயிர்த் தலைவன்.

 

சொந்த மக்களின் ஆதரவோடு சொந்த மண்ணில் இருந்து களமாடிய கார்மேக வண்ணன் என் உயிர்த் தலைவன்.தமிழ் மக்களின் உரிமையில் எந்த சமரசமும் வைக்காத தலைவன்.

 

படைகள் பல கட்டினான்.உலகம் அதிர வான்படை கண்டான்.துரோகிகளும் துவண்டார்கள்.தனித்து நின்று களமாடினான்.ஒற்றைத் தமிழனை அழிக்க உலக வல்லாதிக்க வல்லூறு கள் மிரண்டு திரண்டார்கள். சிங்களவனுக்கு திராவிடனும் ஆரியனும் முண்டு கொடுத்து பிரபாகரன் எனற ஒற்றை ஆளுமையை அழித்தார்கள். தமிழீழ மண்ணையும் தமிழீழ மக்களையும் ஈவு இரக்கமின்றி அழித்தார்கள்.

கடந்து 2010இல் தமிழ்நாட்டு மண்ணில் பிரபாகரனீசத்தை கல்விப்பாடமாக்கி செந்தமிழன் சீமான் பிரபாகரனீசம் பேசினார்.

பிரபாகரனீசம் தமிழ்நாட்டு பட்டிதொட்டியெங்கும் பேசும் போது 2016 இலிருந்து சீமானிசமாக வடிவெடுத்து தமிழக அரசியலில் தமிழ்த்தேசிய அரசியலை செந்தமிழன் சீமான் விதைத்தார். தமிழக இளையவர்கள் தமிழ்த் தேசியப் பயிரானார்கள்.பிரபாகரனீசத்தின் வெற்றியின் பிறப்பே சீமானீசம்.

 

2016 இல் தேர்தல் களத்தில் போராடிய சீமான் கிட்டத்தட்ட 5இலக்கம்(500000) தூய்மையும் உண்மையும் அரசியல் ஆளுமையும் நிறைந்த தமிழ்நாட்டு தமிழ்த் தேசியப் போராளிகளை சீமானின் தமிழ்த் தேசியப்படையில் இணைந்தார்கள்.

 

உலக வரலாற்றில் தூய தமிழ்த் தேசிய அரசியலை தமிழக மண்ணில் முன்னெடுத்த அதிஉயர் ஆளுமை செந்தமிழன் சீமான்.

 

புலியின் குணம் தனித்து வேட்டை அதேபோலத்தான் தமிழ்த்தேசியம் போரின் என் உயிர்த் தலைவனின் அரசியல் போரும் தனித்து தனித்துவமானது.உலகம் அழிந்தாலும் தமிழீழ விடுதலைப்போரை உலகம் பேசிக்கொண்டேயிருக்கும்.

 

2021 தமிழக சட்டசபை தேர்தலில் சீமானீசத்தை வீழ்த்த போடப்பட்ட சதி அனைத்தும் பிரபாகரனீசத்தை இழிவுபடுத்தி ஈழத்தமிழர்களை வைத்து சிங்கள திராவிட ஆரிய திருடர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டது.

 

தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் வேற்று இனத்தவன்எந்தவழியிலும் தமிழனை அழிக்க முடியாது.இது வரலாற்றில் நடந்த உண்மைகள்.

தமிழனை அழிப்பதற்கு தமிழரைப் பயன்படுத்தி அழிப்பதே மற்ற இனத்தவனின் பண்பு.மற்ற இனத்தவனுக்கு அடிமையாக பணிவிடை செய்யும் இழிவானவன் ஈழத்தமிழனாக 2021 இல் உலகத்திற்கு வெளிக்காட்டி நிற்கிறார்கள்.. இது நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமை நிறைந்த தமிழர்களுக்குப் பேரிழுக்காகும். டேய் தனித்து நிற்கிறானே அதுதான்டா சீமானீசம்.சீமானின் தமிழ்த் தேசிய அரசியலை உலகத்தமிழர்கள் வலுப்படுத்துவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *