5ஆண்டுகளில் 30 இலட்சம் வாக்குகளா? சீமானுக்கும் நாம் தமிழர் படைக்கும் அமோக வெற்றி!

உலக வரலாற்றில் எதுவிதமான அரசியல் பின்புலம் இன்றி தமிழ்த்தேசிய அரசியல் தமிழ் நாட்டு மண்ணில் உண்மையாக்கிய பெருமை தமிழ்த் தேசிய ஆளுமை சீமானுக்கும் நாம் தமிழர் பெரும் படைதக்கும் உரியது.

உலக வரலாற்றில் பணபலமற்ற எளிய மக்களின் துணைகொண்டு தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய அரசியல் சாத்தியப்படும் என்ற மனவலிமையை  நிலைநாட்டிய பெருந்தகை செந்தமிழன் சீமான்.

உலக வரலாற்றில் வழிபாட்டு மொழி தமிழை இதுவரை காலமும் உலகிலுள்ள எந்தக் கோயில்களில் வழிபாட்டு மொழியாக்க எவரும் முன்வரவில்லை.1010 ஆண்டு தமிழரின் தொன்மையான  தஞ்சை பெருவுடையார் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடைபெறுவதற்கு போராடியவர்களில் செந்தமிழன் சீமானும் அவர் தம்பிகளும் இணைந்த உழைப்பின் வெற்றி.

உலக வரலாற்றில் தமிழ்நாட்டு அரசியலில் வரலாற்றில் மிகக் குறைந்தளவு நிதிச் செலவோடு தேர்தல் பரப்புரையை முன்னெடுத்து தமிழ்த் தேசிய அரசியலின் வீச்சை வலிமையாக்கி தமிழ்நாட்டு அரசியலில் முதன்மையாக  களமாடிய வர்கள் செந்தமிழன் சீமானும் தமிழ்த்தேசிய நாம் தமிழர் படையுமே.

உலக வரலாற்றில் தமிழ்நாட்டு அரசியலில் திராவிட  ஆரிய சிங்கள சதிவலையில் ஈழத்தமிழர்களை பலிக்காடாக்களாக்கி சீமானின் தமிழ்த்தேசிய அரசியலுக்கு பின்னடைவைக் கொடுத்தபோதும் தனித்துவமாக உண்மைக்கும் நேர்மைக்குமான தமிழக தமிழர்களின் வாழ்வியலின் புரிதலை உணர்ந்த தமிழக மக்கள் வலி மறக்காது வலிமை குன்றாது தேர்தல் களத்தில் அமோக வெற்றியீட்டியவர்கள் தமிழ்த் தேசிய ஆளுமை நிறைந்த சீமானும் நாம் தமிழர் படையுமே.உலகவரலாற்றில் தமிழ்நாட்டு தமிழர்களுக்கு 2009க்குப் பின்  சீமானால் மட்டுமே தமிழ்த்தேசிய அரசியல்அறிவூட்டபட்டது.2009 இலிருந்து 2016வரை தமிழ்த்தேசிய அரசியல் பரப்பில் தமிழக இளசுகள் விழித்துக்கொண்டு தமிழ்த்தேசிய அரசியலில் களமாடினார்கள்.

2016 தேர்தலில் கிட்டத்தட்ட 5இலட்சம்,2019 தேர்தலில் 17இலட்சம் 2021தேர்தலில் 30இலட்சம் என அதிவேகத்தில் தமிழ் தேசிய அரசியலில் செந்தமிழன் சீமானின் ஒருங்கிணைப்பில் நாம் தமிழர் கட்சி மண்டியிடாத மானத்தோடும் வீழ்ந்து விடாத வீரத்தோடும் அதி உச்ச அரசியல் கட்சியாக வலிமையோடு நிமிர்ந்து நிற்கிறது.தேசியத்தலைவரின் தமிழ்த்தேசியப் படையின் வலிமையை விட பலமடங்கு வலியோடும் வலிமையோடும் 2021இல் செந்தமிழன் சீமானும் நாம் தமிழர் பெரும்படையும் அமோக வெற்றியீட்டியுள்ளார்கள்.

தமிழக மக்களின் பசுமை நிறைந்த வாழ்வியலும் தான் தமிழ்நாட்டின் தமிழ்த்தேசிய அரசியலை மிகத்துள்ளிமாக நகர்த்த தமிழ்த் தேசிய ஆளுமை நிறைந்த சீமானும் நாம் தமிழர் படையின் போராளிகளும் களமாடத்துடிக்கிறார்கள்.

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *