தமிழின அழிப்பை மூடிமறைக்க சிங்கள அரசுக்கு ஆதரவாக செல்வக்குமார்

தமிழின அழிப்பை ஏற்றுக்கொள்ளாத தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர் செல்வக்குமார்.இவரை பறை ஊடக நிறுவனர் 2020 மார்ச் மாத ஐநா வளாகத்தில் சந்தித்தார்.இவர் ஐநா கூட்டத்தொடர் முடிந்தபிற்பாடு கனடாவுக்கு வந்து ஒன்ராரியோ முதல்வர் டக்போட்டை சந்தித்து தமிழின் அழிப்பு கல்வி அறிவூட்டும் கிழமைக் சட்டவரைபை தடுப்பதற்காக சிங்கள அரசால் அனுப்பப்பட்டதாக செல்வக்குமார் பறை ஊடகத்தின் தெரிவித்திருந்தார்.இதற்குரிய முழுமையான உதவியை கனடா வாழ் மக்களால் கையொப்பமிட்டு இன்று இயங்கிக்கொண்டிருக்கின்ற வானொலியினர் செய்திருந்ததாக செல்வக்குமார் தெரிவித்திருந்தார். ஆனால் கோரோனா தொற்று காரணமாக 104 தமிழின அழிப்பு கல்வி அறிவூட்டல் கிழமையை தடுப்பதற்காக முயற்சியில் சிங்களஅரசு தோல்வி கண்டது.

தமிழினவழிப்பை ஏற்காத உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு இந்த அமைப்பு தமிழர்களின் இனவழிப்பை மூடிமறைப்பதற்கான பணிகளை தமிழர்களுக்குக் தெரியாமல் சிங்கள இந்திய அரசுகளுக்கு ஆதரவாக முன்னெடுப்பதை புலம்பெயர் தமிழர்கள் இனம் கண்டிருக்கிறார்கள்.இந்த அமைப்பின் தலைவர் செல்வக்குமார் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்.

தமிழ்நாட்டில் இருந்து சிங்கள இந்திய அரசுகளின் துணையோடு போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாகச் சொல்லிக்கொண்டு தமிழீழ மண்ணில் நடந்த இனப்படுகொலையை மூடி மறைப்பதற்கு செயல்பட்டவரே இந்த தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட செல்வக்குமார்.உலகத்தமிழர் இவரை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் காரணம்

தமிழினப்படுகொலையை ஏற்காதவர்

சிங்கள இந்திய அரசின் கீழ் தமிழர்களின் மொழி பண்பாடு பொருளாதாரத்தை சீரழிக்க புறப்பட்டவர்.கனடாமண்ணில் தமிழர் முன்னெடுக்கும் தமிழின அழிப்பின் நீதிக்கான அரசியல் செயற்பாட்டுக்கு தடையாக செயற்படமுற்படுபவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *