வடஅமெரிக்க நா.க.த.அரசு தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிரானதா?

ஆறுமுகம் கோபால் பா.உ, TGTE , Toronto 08/May/2021

மதிப்புக்குரிய பறை ஊடக ஆசிரியருக்கு வணக்கம்!. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்றுமே குழம்பியது கிடையாது. குழம்பியதாக சில பேர் கூக்குரல் போடுகின்றனர். நா க த அரசாங்கத்தின் முழுச் சரித்திரத்தையும் ஒழுங்காகத் தெரியாதவர்கள் குழம்பியதாக சொல்வது அறியாமையே. 2010 தொடக்கம் நா க த அ ஒன்று தான் சிங்கள அரசினை ICC நீதிமன்றில் இலங்கை, இனவெறி அரசைக் கொண்டு சென்று நிறுத்தப் பல நிதிப்பிரச்சனைகட்கு மத்தியில் உயிரைக் கொடுத்துப் போராடுவது விடயம் தெரிந்தவர்கட்குத் தெரியும், உதாரணம் NCCT, CTC,BTF,GTF போன்றவற்றின் மீது இருந்த தடையை சிறீசேன அரசு அவர்கள் எல்லோரையும் வளைத்து, தடை நீக்கியது பின்னர் தடையை அறவே 100% நீக்கியது மட்டுமல்ல,தேன் நிலவுக் கொண்டாட்டமும் நடந்தது . சிங்கள அரசின் 100% எதிரி நா க த அ என்பதை சிங்கள அமைச்சர்கள் பாராளுமன்றத்திலும்,வெளியிலும் வெளிப்படையாக சொன்னதை அறியாத பறை ஊடகம் புலம்பிக் கொட்டுகின்றது. நா க த அரசாங்கம் வெளிப்படையான,ஜன நாயகப் பண்பாடுகளைக் கொண்ட ஒரு அமைப்பு என்பது பறை ஊடக ஆசிரியருக்கு ஏன் விளங்கவில்லை. மே 18 நிகழ்வு நடக்க இருக்கும் தருணத்தில் தேன் கூட்டுக்கு கல் எறிகின்றார். யாரோ எறிந்த எலும்புத் துண்டை கவ்விக் கொண்டு சத்தமிடுகின்றார், அதற்கான உரிமை பத்திரிகையாளனுக்கு உண்டு. ஆனால் கேள்வி கேட்கும் முறையில்தான் கேள்வி கேட்க வேண்டும். அதிகாரத் தோரணையில் சில பேர் ஏவி விட வாய்க்கு வந்தபடி கதைப்பது போல் எழுதுவது அறம் தெரிந்த பத்திரிகையாளன் கடமையல்ல. நா க த அ ஒரு விடயத்தை மாற்றுவது என்றால் அதற்குரிய சரியான வழியில் போக வேண்டும். எடுத்தேன்,பிடுங்கினேன், வெட்டிச் சாய்த்தேன் என்று செய்ய முடியாது. பல விண்ணப்பப் படிவங்கள் நிரப்பிக் கொடுத்து ,விவாதித்துத் தான் முடிவுக்கு வருவார்கள். துக்க தினம் என்பது தனி நபரின் தீர்மானம் அல்ல, நீண்ட காலம் பாராளுமன்றத்தில் விவாதித்து 2010அன்றைய சூழ் நிலையில் எடுக்கப் பட்டமுடிபு. இனப் படுகொலை என்ற பதத்தை முதன் முதல் எழுதியவரும் பிரதமர் உருத்திரகுமாரன் தான். அறிஞர் குழாம்களையும் (lobby group),பல சட்ட அறிஞர்களைக் கொண்ட அமைப்பு தான் நா க த அரசாங்கம் என்பதையும் பறை ஊடக ஆசிரியருக்கு தெரியப்படுத்துகின்றோம். பல இடர்களை ஆரம்ப நாளில் இருந்து நா க த அ சந்தித்து வளர்ந்தது என்பதை மீண்டும் பறை ஊடகத்தின் ஆசிரியருக்கு தெரியப்படுத்துகின்றேன் விரும்பினால், நட்புடன் கேள்விகள் கேட்க விரும்பினால் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள் நானும் நா க த அ பாராளுமன்ற உறுப்பினன், நீண்ட கால தொண்டனும் கூட. 416 766 9544, arumugamgopal9@gmail.com இவ்வண்ணம்

பறை ஊடகத்தின் மறுமொழி

வணக்கம் ஆறுமுகம் கோபால் ஐயா

உங்கள் பதிலுக்கு பொறுப்பு கூறவேண்டிய பொறுப்பில் நாம் இருக்கிறோம்.

நீங்கள் நாடுகடந்த அரசு தொடங்கும் போது அதற்கு எதிராக கனடாவில் களமாடிய உலகத்தமிழரின் பங்காளி.உங்களுக்கும் உலகத்தமிழர் செய்த தமிழ்த்தேசியக் துரோகத்திற்கும் பங்கிருப்பதால் மக்களால் அள்ளி வழங்கப்பட்ட பணத்திற்கு என்ன நடந்தது என்று சொல்லமுடியாமல் திணறுவதோடு 2009 க்குப் பின் தமிழ்த் தேசிய மக்களின் வலியை நடுத்தெருவில் போட்டவர்களோடு நின்றவர் நீங்கள்.நாடுகடந்ததமிழீழ அரசு தொடங்கியபோது அதைகுளப்பி அதற்கு நேர் எதிராக உருவாக்கப்பட்டது தேசிய அவை.

நாடு கடந்த தமிழீழ அரசு புலிக்கொடியை எல்லா நிகழ்விலும் பயன்படுத்தவேண்டும் எனஅடாத்தாக முன்வைத்தவர்கள்  முதற்கொண்டு நீங்கள் உட்பட ஏனைய உலகத்தமிழர்களும்வற்புறுத்தினீர்கள்.ஆனால் வற்புறுத்தியவர்களால் தொடங்கப்பட்ட தேசிய அவையோ உலகத்தமிழர் செய்தித்தாளோ இப்போது புலிக்கொடியையோ தலைவரின் படத்தையோ  தமிழ்நிகழ்வுகளில் முன்நிறுத்துவதில்லை..இவ்வளவு விளக்கம் 2010இல் உங்கள் நிலை.இடையில் நீங்கள் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் எடுப்புக்குஆடியவர்.2012 தமிழ்த்தேசிய அரசியல் பரப்பில் த.தே.கூட்டமைப்பு பலம்பெற்றபோதெல்லாம் சிங்கள அரசுக்கு முண்டு கொடுத்தபோது அதற்கு கனடாவில் முண்டு கொடுத்து கனடா த.தே.கூட்டமைப்புக்கு முண்டு கொடுத்து இனப்படுகொலைக்கான நீதிக்கான கதவுகளை மூடுவதற்கு உடந்தையாக இருந்தவர்.

 2010 இல் நா.க.த.அரசை நீங்கள் உலகத்தமிழர்களோடு எதிர்த்து களமாடிய நீங்கள் பின்பு   நீங்கள் முதல் இருந்தவர்களோடு முரண்பட்டு வந்து நாடுகடந்த தமிழீழ அரசுடன் இணைந்து கொண்டு தமிழ்த்தேசியம் பரப்பில் உலகத்தமிழர்மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை விதைப்பதோடு அந்த காழ்ப்புணர்ச்சியோடு செயற்படுபவர்களை இணைத்து தமிழ்த்தேசியம் பரப்பில் பெரும் பின்னடைவுக்கு உறுதுணையாக நிற்கிறீர்கள்.இப்போது நாடுகடந்த தமிழீழ அரசோடு இணைந்து இருக்கிறீர்கள்.2010 இல் நீங்கள் எதிர்த்த பிரதமரை இன்று புகழாரம் சூடுகிறீர்கள்.2010 இலிருந்து இன்றுவரை அமெரிக்காவில் பிரதமரால் செய்த தமிழ்த்தேசிய அரசியல் என்ன? கனடா உறுப்பினர்களை மூன்றாகப்பிரித்து கோழிசண்டைக்கு வழிகாட்டியதைத் தவிர வேறு என்ன தமிழ்த்தேசியப்பரப்பில் செய்துள்ளார்.

நீங்கள் அரசியலில் பழுத்தபழம்.உங்களுடைய ஆழமான பட்டறிவை உங்களோடு தமிழ்த்தேசியம் பரப்பரப்பில் பயணிப்பவர்களுக்கு நீங்கள் ஒரு வழிகாட்டியாக இல்லாது பழையவர்களின் துரோகங்களை மனதில் வைத்துக்கொண்டு தமிழ்த்தேசியப் பரப்பிற்கு இடையூறாகவும் தமிழீழ மக்களின் நீதிக்கு தொடர்ந்தும் முட்டுக்கட்டையாக நீங்கள் பயணிப்பது உங்கள் அரசியல் பட்டறிவை உடைத்தெறிகிறது. இதன் பொருள் நீங்களே உங்களை இழிவுபடுத்துவதை அரசியல் ஆளுமை கொண்டவர்களுக்கு நீங்களே உங்களை அடையாளப்படுத்துகிறீர்கள்.நாம் உங்கள் மீது அதி உயரிய மதிப்பு உண்டு.நீங்கள் முந்து தமிழர்.ஆழமான அரசியல் ஆளுமை கொண்டவர்.தமிழ்த்தேசிய உணர்வாளர். உங்களோடு நட்போடு இருப்பவன்.இதனால் உங்கள் மீது அளப்பரிய பற்றும் உயரிய மனிதராக நாம் போற்றுகிறோம்.

பொதுவெளியில் தமிழ்தேசிய வெளியில் எண்ண வெளிப்பாட்டை கருத்து முரண்களைக் களைந்து தமிழ்த்தேசியம் பரப்பில் நாம் கை கோர்த்து தமிழ்த்தேசிய அரசியலைச் பலப்படுத்தி உலகில் வாழும் 12கோடி மக்களின் அரசியலில் வலிமையுள்ள இனமாக மாற்றப்படவேண்டும்.காழ்ப்புணர்ச்சிகளை விதைப்பவர்கள் தமிழ்த்தேசியம் பரப்பில் பயணிக்கமுடியாது.நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அழகிய சொல்லாடலைப் பயன்படுத்தி அமைப்பு தொடங்கப்பட்டது..

இதை நாடு கடந்த அரசாங்கம் என்று மாற்றிய அடிமுட்டாள் யார்?

தமிழ்மொழியின் தனித்துவத்தை இதில் விளக்கவேண்டிய பொறுப்பு எனக்குரியது.

நாடு/ கடந்த/ தமிழீழ/ அரசு

நாடு நிலப்பரப்பைக் கொண்டது.

அரசு நிலப்பரப்பைக் கொண்டது.

தமிழீழம் நிலப்பரப்பைக் கொண்டது.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு நிலப்பு இல்லை.

கடந்த என்ற சொல்லு நிலப்பரப்பு இல்லை என்பதை வலியுறுத்தி நிற்கிறது.

ஆகவே தான் நாடு கடந்த தமிழீழ அரசு.அமைப்பின் பெயர் எளிமையாக பாமர மக்களுக்கு புரியக்கூடிய இந்தப்பெயரை அரசாங்கம் என்று மாற்றிய பொறுக்கி யார்?நான் இவ்வளவு கோபமாகக் கேட்பதற்கான அடிப்படைக் காரணம் மொழி அறிவில்லாத முட்டாள்கள் செய்த இழிவு.

அரசு அழகிய சிறப்பான தமிழ்ச்சொல்.அரசு நிலப்பரப்பைக் கொண்டது.

அரசாங்கம் என்பது அரசு+அங்கம் அரசாங்கம்.அரசாங்கம் என்ற சொல் அரசைக் குறிக்கவில்லை.தவறாக பயன்படுத்தும் சொல்லாடல்.அரசாங்கம் என்ற சொல்லில் மொழிக்கலப்பு இருக்கிறது.

உருத்திரகுமாரன் கடந்த 11 ஆண்டாக பிரதமராக இருந்தது தமிழினத்திற்கு கிடைத்த சாபக்கேடு.பிரதமராக வரும் பொழுது தெரியாமல் இருக்கலாம்.ஆனால் மொழி அறிவை வளர்த்துக் கொள்ளாத உருத்திரகுமாரன் எப்படி நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பிரதமராக இருக்கும் தகுதி உடையவர்.

கனடாவில் 2 நாடுகடந்த அலுவலகம்.ஒன்று பொது அலுவலகம்.மற்றது பிரதமர் அலுவலகம்.பிரதமர் அலுவலகத்தின் பணி பொது அலுவலகத்தில்உள்ள உறுப்பினர்களை தமிழ்த்தேசிய அரசியலை செய்யவுடாமல் தடுப்பது. இதில் அலுவலக துறப்புக்கு கோழிச்சண்டை.எங்கே நிற்கிறது உங்கள் தமிழ்தேசியம்.

கனடா நாடுகடந்த உறுப்பினரை பிரித்து ஆள்வது பிரதமரின் பொறுப்பு.நல்லவற்றை செய்யவிடாமல் தடுப்பது பிரதமர் அலுவலகத்தின் முதன்மைப்பணி.கனடா நாடுகடந்த அரசில் 3 பிரிவாக பிரித்து வைப்பது உருத்திரகுமாரனுக்கு கொடுக்கப்பட்ட பணி.யார் கொடுத்தார்?பிரதமரைக் கேளுங்கள். நாங்கள் சொன்னால் நம்பமாட்டீர்கள். நீங்கள் தான் கேட்கவேண்டும்.கனடாவில் நாடு கடந்த அரசு செய்த தமிழ்த்தேசிய அரசியல் பணி ஒன்று சொல்லுங்க ஐயா.

அமெரிக்காவில் உருத்திரகுமாரன் செய்த தமிழ்த்தேசிய அரசியல் பணி என்ன? அமெரிக்காவில் தமிழ்த்தேசிய அரசியலில் அமெரிக்க உறுப்பினரை க் கொண்டுசெய்வித்த பணிகள் என்ன?

நாடு கடந்த அரசுக்கு அமெரிக்காவில் நிதி எவ்வளவு திரட்டினீர்கள் சொல்லமுடியுமா?

கனடாவில் திரட்டிய பணத்தை நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள் என்பதற்கு கணக்கு வழக்கு கனடா உறுப்பினர்களுக்கு காட்டீனீர்களா?

உலகில் எல்லா தமிழர்களும் இனவழிப்பு நாளாக பின்பற்றுகிறோம்.நீங்கள் ஏன் துக்கதினம் என்று சொல்லுகிறீர்கள்.உருத்திரகுமாரனுக்கு யார் இந்த முட்டாள்தனமான அறிவைக் கொடுத்தது.

கடந்த 11 ஆண்டு களாக நா.க த.அரசு பற்றிய பல ஆயிரம் குற்றச்சாட்டுகளை மக்கள் வழங்கியிருந்தார்கள்.ஆனால் வாய்மொழியாகவும்  நேரடியாகவும் பல முறை பலர் பேசியும் நீங்கள் தொடர்ந்தும் தமிழ்த்தேசியப்பரப்பில் கனடா அமெரிக்காவில் செயற்படக்கூடியவர்களையும் செய்யவிடாமல் தடுப்பது தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது.

 

 நீங்கள் முடிந்தால் திருத்துங்கள்.இல்லையேல் தமிழ் தேசிய அரசியலில் இருந்து ஒதுக்குங்கள்.தமிழ்த்தேசிய அரசியலை அழிவுப்பாதைக்கு போவதை பறை ஊடக குழுமம் அனுமதிக்காது.பலர் போலித் தமிழ்தேசியக் காவடியை தூக்கிக் கொண்டு ஆடி மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுகிறார்கள்.

 

தமிழ்தேசிய போலிகளை 12கோடி மக்களுக்கும் தோலுரித்துக் காட்டுவோம்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *