ஈ.வே.ராமசாமி  105 ஆண்டுகளாக தமிழகத் தெருக்களில் தமிழர்களை ஏமாற்றிய உண்மையை வெளிப்படுத்திய தமிழக இன்றைய முதலமைச்சர்

1916 ஆம் ஆண்டு நீதிக்கட்சி என்ற போர்வையில் தமிழர்களை யும் தமிழ் மொழியையும் இன்றுவரை அழித்துக் கொண்டிருப்பவர் திராவிட திருவாளர்கள்.

தமிழர் அல்லாதவர் தமிழ்நாட்டில் திராவிடர்கள் என்கிறார்கள். தமிழகத்தில் வாழும் தமிழர்கள் தமிழர்களாகத் தான் வாழ்கிறார்கள்.ஆனால் தமிழர்கள் அல்லாதவர்கள் தமிழ்நாட்டுக்குள்ளே வந்து தமிழ்மொழி நன்கு கற்றுக்கொண்டு தமிழ்ப்பெயரையும் வைத்துக்கொண்டு தமிழர்களுக்கு திராவிட பாடம் எடுத்து தமிழர்களை திராவிட சிந்தனைக்குள் வீழ்த்தி இன்றோடு 105 ஆண்டுகள் கடந்த பின்பும் திராவிடமுன்னேற்றக் கழக  ஆட்சி மலர்ந்திக்கிறது.

1936 ஆம் ஆண்டு ஈழத்திற்கு வந்த ஈ.வே.இராமசாமி  திராவிட சிந்தனைகளைப் பரப்பி திராவிட கட்சியினை உருவாக்க முற்பட்டார். ஆனால் ஈழத்தமிழர்களிடம் அந்தப் பருப்பு அவியவில்லை.ஈழத்திற்கு வந்த ஈ.வே.ராமசாமி அவர்களை மனமகிழ்வோடு வரவேற்று அவரை மீண்டும் தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.ஆனால் ஈழமண்ணில் நாம் திராவிடர் என்ற  சொல்லை  பயன்படுத்துவதில்லை.மாறாக இன்றுவரை எமது மண்ணின் பெருமையும் ஆழமும் அழகும் தொன்மையும் நிறைந்த ஈழம் என்ற சொல்லை ஒவ்வொரு நொடியிலும் நாம் பயன்படுத்தி வருகிறோம்.

ஈ.வே.ராமசாமியின் திராவிட சிந்தனை தமிழரின் தொன்மையை வரலாற்றை மொழியை அழிப்பதே உள்நோக்கம்.திராவிடம் என்று பேசுபவர்கள் அனைவரும் தமிழர் அல்லாதவர்கள்.திராவிட திருவாளர்களின் உண்மை முகத்தை 2009 இனப்படுகொலை வெட்ட வெளிச்சமாக வெளிப்படுத்தியது.இங்கேதான் சீமானிசம் என்ற தமிழக அரசியல் பிரபாகரனீசத்திலிருந்து அறிவாயுதப்போராக மாற்றம் பெற்று தமிழக தெருக்களில் செந்தமிழன் சீமானால் விதைக்கப்பட்டது.

செந்தமிழன் சீமானின் விதைக்கப்பட்ட தமிழ்த்தேசிய விதைகள் பயிர்களாக தமிழ்த்தேசியம் பரப்பில் 2021 இல் 30 இலட்சம் தமிழக இளம் தலைமுறைத் தமிழர்கள் திராவிடத்தை பாடையில் வைத்து எரித்துவிட்டார்கள்.அடுத்த 5 ஆண்டுகளில் திராவிட சிந்தனைகள் தமிழர்களுக்கு எதிரானது என்ற உண்மையை வலுப்படுத்த திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்திருக்கிறது. அடுத்த 5ஆண்டும் தமிழக அரசியலில் தமிழக மக்களும் புலம்பெயர் மக்களும் வீரியத்தோடும் வீச்சோடும் களமாகக் காத்திருக்கிறோம். வடமொழியில் பிராமணர்களின் வாழ்த்துக்களைத் பெற்று மு.க.இசுட்டாலின் அவர்கள் மூத்திரச்சட்டியோடு ஈ.வே.இராமசாமியின் திருட்டு திராவிடச் சிந்தனைகளால் தமிழகத் தெருக்களில் தமிழர்கள் ஏமாற்றியதை தமிழக முதலமைச்சர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

தமிழ்நாட்டை ஆளும் முதலமைச்சர் செத்த விளங்காத மொழிக்கு முன்னுரிமை கொடுத்து இந்துத்துவ ஆதரவை தெரிவித்துள்ளார்.தமிழரிகளால் தெரிவுசெய்யப்பட்ட முதலமைச்சர் தமிழ் ஒதுவார்களை அழைத்து 12 திருமுறைகளைப் பாடி தமிழில் வாழ்த்துவதற்கு முயற்சி எடுக்கவில்லை..

 

திராவிடமும் ஆரியமும் ஒன்றுதான்.திராவிடம் ஆரியத்தை வலுப்படுத்தும்.தமிழை அழிக்கும். இது தமிழர்களின் காலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *