கரி ஆனந்தசங்கரி கையில்

தமிழினப்படுகொலையை 20 நாடுகளின் உதவியோடு ஈழத்தமிழர்களை அழித்த சிங்கள அரசு கடந்த 11 ஆண்டாக ஒடிஒடி மூடி மறைக்க பல முயற்சிகள் எடுத்தவண்ணம் இருக்கிறது.இன்று கனடாவில் தமிழின அழிப்பு கல்வியூட்டல் கிழமை 104 சட்டவரைபு 2021 மே 6ஆம் நாள் கனடா ஒன்ராறியோ மாநில அவையில் நிறைவேற்றப்பட்டது.இதில் தமிழின அழிப்பின் வலிசுமந்த மக்களை ஆறுதலுக்குள்ளாக்கியது.

போலித் தமிழ்த்தேசியளர்களின் தமிழின அழிப்பிற்கு நீதி கிடைக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். 104 சட்டவரைபு நிறைவேற்றிய உடனே கனடாவில் உள்ள இலங்கை தூதுவராலயம் அதை தடுப்பதில் தோல்வி கண்டிருக்கிறது. போலித்தமிழ்தேசியவாதியான பாலன்   இலங்கை தூதுவராலயத்திற்கு மேலும் அழுத்தத்தைக் கொடுத்து ஏதாவது ஒரு வழியில் 104 சட்டவரைபை முடக்குமாறு தமிழர் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.சிங்கள வெளியுறவுத்துறை அமைச்சர் கனடா அரசுக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறார்.

இப்போது கனடா அரசில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கரி ஆனந்தசங்கரி அவர்கள் தமிழ் மக்களால் கனடாவில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்.கரி ஆனந்தசங்கரி யசுடின் ரூடோவை இசுக்காபுரோவுக்கு அழைத்து கொத்துரோட்டி போடச்செய்தார்.கரி ஆனந்தசங்கரி யசுடின் ரூடோவை இசுக்காபுரோவுக்கு அழைத்து தமிழர்பண்பாட்டோடு பொங்கல் விழாவில்  கலந்து கொள்ள வைத்தார்.இதையெல்லாம் செய்யமுடிந்த கரி ஆனந்தசங்கரி தமிழர்களின் மிகப்பெரிய வலியான தமிழின அழிப்பை கனடா நாடாளுமன்ற த்தில் கிடப்பில் வைத்திருப்பதேன்?இப்போது கரி ஆனந்தசங்கரி அவர்கள் தமிழினப்படுகொலையை கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்குரிய அரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவார்கள்.காலம் தாழ்த்தாது கரி ஆனந்தசங்கரி அவர்கள் லிபரல் கட்சி உறுப்பினர்களோடு கலந்து பேசி ஏனைய கட்சி உறுப்பினர்களோடு பேசி இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு கரியின் கையில் உள்ளது.உங்கள் இனப்படுகொலைத்தீர்மானம் நிறைவேற்றும் பணிக்கு தமிழர்களோடு அனைத்து கனடா வாழ் மக்களும் உறுதுணையாக நிற்கிறார்கள்.தமிழர் நிகழ்வுகளில் வந்து மேடையில் பேசும்போது தமிழர் பக்கம் எப்போதும் நிற்போம் என உறுதி கொடுத்துவிட்டுச் செய்யாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

ஈழத்தமிழர்கள் வீரியத்தையும் வீரத்தையும் கரி ஆனந்தசங்கரி உறுதிப்படுத்தவேண்டும் .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *