தமிழ்த்தேசிய எதிரிகள் தமிழ்த்தேசியப்போராளி செந்தமிழன் சீமானை விமர்சிக்க தகுதி அற்றவர்கள்.

மொழி அறிவோ இனஅறிவோ இல்லாத புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பலர் தமிழ்த் தேசியப்பரப்பை சிதைக்கின்ற பணியை முன்னெடுக்கின்றார்கள். இவர்கள் தமிழ்த்தேசியப்பரப்பில் என்னசெய்வதென்று தெரியாமல் தங்களை மக்கள் மத்தியில் தெரியப்படுத்த தமிழ்த்தேசிய அரசியலை சிதைக்கின்றார்கள்.இவர்கள் முற்றுமுழுதான தமிழ்த்தேசிய அரசியல் அறிவு இல்லாதவர்கள்.தமிழீழ மண்ணில் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் தமிழ்த்தேசியப் போராளி செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழீழ விடுதலைப் பரப்புரைக் கருவியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.

அதற்கான சான்று காணொளிகள் இணைக்கப்பட்டிருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் தமிழ்த்தேசியப் பரப்பரைக்காக பல்வேறு நாடுகளுக்கு சீமான் அழைக்கப்பட்டார்.2009க்குப் பின் தமிழீழ விடுதலைப்புலிகள் கருவிகள் அமைதியாக்கப்பட்டு விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட போது தமிழ்த்தேசிய அரசியல் பேசிய தலைமைகள் அமைதி காத்தார்கள். 2009 இனப்படுகொலைக்கு தமிழீழ மண்ணில் சம்பந்தரும் தமிழ்நாட்டு மண்ணில் திராவிட கட்சிகளும் இந்திய அளவிலான உள்ள காங்கிரசும் பாரதீய யெனதாவும் சிங்கள அரசோடு உலகநாடுகளும் இணைந்து அழிக்கப்பட்ட தமிழின அழிப்பு 2009.2009 இலிருந்து தமிழின அழிப்பில் தமிழீழ புலம்பெயர்ந்த மக்களின் செயல்பாடு பல வெற்றியளித்திருக்கிறதா?இனப்படுகொலைக்கான அதிகளவு சான்றுகளோடு ஆவணப்படுத்தப்பட்ட இனப்படுகொலை தமிழீழப் படுகொலை.

தமிழீழ மண்ணில் அரசியல் தலைமைகள் சிங்கள இந்திய அரசுகளின் நிகழ்ச்சி நிரலில் இயங்குவதை தட்டிக்கேளாமல் இருப்பது இந்த தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்களின் அறியாமை. தமிழ்தேசிய அறியாமையில் முழ்கியவர்கள் சீமானை தனிப்பட்ட முறையில் சீண்டுவது தமிழ்த்தேசிய அரசியலின் அறியாமையின் வெளிப்பாடு.இக்கட்டுரை வரைபு க்கான காரணம் இந்த தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்களின் அறியாமையின் அளவை மக்களுக்கு வெளிப்படுத்துவதே உண்மை யான நோக்கம்.சிங்கள திராவிட ஆரிய நிகழ்ச்சி நிரலில் தமிழின அழிப்புக்கு பல ஈழத்தமிழர்கள் துணைபோய் கடந்த 12 ஆண்டுகளாக தமிழர்களின் உரிமைக்கான தமிழ்த்தேசியப் பரப்பை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.பரசுராமன் இதற்கு சான்றாக பறை ஊடகம் பல செய்திகள் வெளியிடப்பட்டிருக்கிறது..

தமிழ்த்தேசியத்தை காறித்துப்பும் பரசுராமனால் எமக்கு தெரியப்படுத்திய இககாணொளி உண்மைக்குப் புறம்பான காணொளி என்பதால் தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்களை மக்களுக்கு இனம்காட்டவேண்டிய பொறுப்பபு பறை ஊடகத்திற்கு உண்டு.பரசுராமனின் சிங்கள பாணியிலான கொலை அச்சுறுத்தலையும் தாண்டி இச்செய்தி வெளியிடப்படுகிறது.

மேலே சீமானைப்பற்றி தவறான எண்ணங்களை விதைப்போருக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை நாம் ஆராய வேண்டிய தேவை மிக அவசியம்.

இவர்களின் 

1.மொழி அறிவு

2.ஈழவரலாற்று அறிவு

3.பண்பாட்டுஅறிவு,

4.த.தே.கூட்டமைப்பின் தமிழர்களுக்கு எதிரான முடிவுகளுக்கான இவர்களின் கடந்தகால செயற்பாடு

5.திராவிட கட்சிகளின் தமிழின அழிப்புக்கு துணைபோனதில் உங்கள் செயற்பாடு

6.1991க்குப்பின் தேசியத் தலைவரை மேடையில் வைத்தவர்கள் பற்றிய அலசல்

7.பிரபாகரனீசம் தமிழ்நாட்டு மண்ணில் பேசியவர்கள் யார்?

8.2009 இனப்படுகொலைக்குப்பின் தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ்த்தேசிய அரசியலை விதைத்தவர்கள் யார்?

9.தமிழ்நாட்டு இளைய தலைமுறையினர் எப்படி தமிழ்த்தேசிய அரசியலை பற்றிப் பிடித்தார்கள்?

10.திராவிட ஆட்சியில் தமிழின் நிலை?

11.திராவிட ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களின் அரசியல் நிலை?

12.தமிழ்நாட்டு மக்களின் இயற்கை வள அழிப்புக்கு யார் காரணம்?

13.தமிழ்நாட்டு மக்களின்மண்வள சூறையாடலுக்கு யார் காரணம்?

14.தமிழீழ மக்களின் விடுதலையில் தமிழ்நாட்டு மக்களின் பங்கு விடுதலைப்புலிகள் காலத்தில்?

15.தமிழீழ மக்களின் விடுதலையில் தமிழ்நாட்டு மக்களின் பங்கு 2009 க்குப் பின்?

16.எழுவர் விடுதலையில் திமுகவின் பங்கு என்ன?

17.எழுவர் விடுதலையில் அதிமுகவின் பங்கு என்ன?

18,ராயீவ்காந்தி வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 19பேரின் உழைப்பில் திமுக பங்கு என்ன?

19.,ராயீவ்காந்தி வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 19பேரின் உழைப்பில் அதிமுக பங்கு என்ன?

20.விடுதலைப்புலிகளின் தடையில் திமுகவின் பங்கு என்ன?

21.விடுதலைப்புலிகளின் தடையில் அதிமுகவின் பங்கு என்ன?

இப்படி பல ஆயிரம் கேள்விகளுக்கு பதிலை நாம் தேடவேண்டும்.

தேடினால் 

நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசியப்போராளியும் 30 இலட்சம் தமிழ்நாட்டு தமிழ்த்தேசிய வாக்களாரால் 3 ஆவது கட்சியான அங்கீகாரத்தோடு தேர்தல் களத்தில் 5 ஆண்டுகளில் உலகசாதனை படைத்தவர்கள் செந்தமிழன் சீமானும் நாம் தமிழர் கட்சியும்.இந்த சாதனையில் 11துளிகூட புலம்பெயர் தமிழர்கள் சாதிக்கவில்லை..சீமானின் அரசியல் அறிவு,மொழியறிவு,பொருளாதார அறிவு, இயற்கை அறிவு,மண்வள அறிவு நீர்வள அறிவு வேளாண்மை அறிவு தற்சார்பு பொருளாதார அறிவு இன்னும் பல்துறை அறிவோடு ஒட்டுமொத்தமாக பலமணி நேரம் தொடர்ந்து பேசக்கூடிய ஆளுமையும் அதை மக்களிடத்தில் இலகுவாகப் புரியும்படி விதைக்கும் பேராற்றல் கொண்ட சீமானை யாருக்கும் விமர்சனம் உரிமை இல்லை. 

இதுவரை சீமானை விமர்சனம் செய்தவர்கள் தமிழ்த்தேசியப் பரப்பில் எந்தவிதமான அறிவும் ஆற்றலும் இல்லாதவர்கள் பொய்களை சொல்லி தமிழ்த் தேசியப் பரப்பை இழிவுபடுத்தி சிங்கள திராவிட ஆரிய நிகழ்ச்சி நிரலுக்கு வலுச்சேர்ப்பதே தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்களின் பணி.உலகில் வாழும் 12 கோடி தமிழர்களும் தமது ஆழமான அறிவை வைத்தே அரசியலில் பயணிக்கிறார்கள். இந்த தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்களை தாண்டித்தான் முழு வீச்சோடும் வீரியத்தோடும் தமிழ்த்தேசிய அரசியல் பயணிக்கும்.

நாம் அனைவரும் எமது ஆளுமைகளை சரியான முறையில் பயன்படுத்தி தமிழ்த்தேசிய எதிர்ப்பளர்களை இனம் கண்டு தமிழ்த்தேசியம் பரப்பை பண்படுத்துவோம். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *