இனவழிப்பு வலியை சுமக்கும் தமிழ்தேசியப் பரப்பில்

கடந்த 12 ஆண்டுகளாக தமிழின் அழிப்புக்கான நீதியை பெறுவதற்கான அனைத்து திறவுகோல்களையும் தமிழர்கள் வைத்திருக்கிறார்கள்.ஆனால் அனைத்து அமைப்புகளும் சிங்கள திராவிட ஆரிய நிகழ்ச்சி நிரலில் நின்று இனவழிப்பு க்கான நீதி கிடைக்காது என மகிழ்ந்த அமைப்புகளும் கல்விமான்களும் பட்டதாரிகளும் அடுத்த தலைமுறையினரின் செயற்பாட்டால் அதிர்வடைந்துவிட்டார்கள்.இவ்வளவு காலமும் தமிழ்த் தேசியத்தை சாகடிப்பதற்காக பலர் கடுமையாக உழைத்தார்கள்.ஆனால் இவர்களையும் தாண்டி தமிழின் நீதிக்கான துடிப்பும் வீரியமும் வீச்சும் இளையவர்களால் முன்னெடுக்கப்படுகிறது.தமிழ்த்தேசிய வீழ்ச்சிக்கு தமிழீழ மண்ணில் தமிழ்நாட்டு மண்ணில் புலம்பெயர்ந்த மண்ணில் என மூன்று தளத்திலும் கடுமையாக தமிழீழ தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்கள் எதிர்வினையாற்றுகிறார்கள்.

இவர்கள் அனைவரும் மொழியறிவையோ இனவறிவையோ ஈழவரலாற்று அறிவையோ உலக அறிவையோ பெறாதவராக காணப்படுவது மிக மிக இழிவானகும்.இந்தக் கல்வியாளர்கள் நூலைப் படித்து குறிப்பிட்ட துறையில் பட்டம் பெற்றவர்கள். இவர்களுக்கு 12 கோடி தமிழர்களுக்கான அரசியல் செய்யும் அறிவு குன்றியவர்கள். இதனால்தான் இவர்களின் போலித்தமிழ்  தேசியத்திற்கான செயற்பாடுகளில் தோல்வியைக் காண்கிறார்கள்.தமிழின அழிப்பு கல்வி அறிவூட்டும் கிழமை 104 சட்டவரைபு பல போலித் தேசியவாதிகளை இனம் காட்டியிருக்கிறது.    இளையவர்களின் தமிழ்த்தேசிய அரசியலுக்குத் துணை நின்று தமிழ்த்தேசிய அரசியலை வெல்லுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *