திராவிட திருவாளர்கள் எழுவரையும் விடுதலை செய்யமாட்டார்கள்

1991 ஆம் ஆண்டு முதல் ராயீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பாக 26 குற்றமற்ற தமிழர்கள் கைது செய்யப்பட்டு 19 தமிழர்கள் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டார்கள்.மிகுதியாக சிறையில் வாழும் 7 தமிழர்களும் குற்றமற்றவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. கடந்த 31 ஆண்டுகளாக திராவிட திருவாளர்கள் எழுவர் விடுதலையை வைத்து தமிழக அரசியலில் ஊஞ்சல் ஆட்டுவதை உலகத்தமிழர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தி.மு.கவோ அதிமுகவோ எழுவரையும் விடுதலை செய்யமாட்டார்கள். இவர்கள் தமிழக தமிழர்களின் வாழ்க்கையும் தமிழ்நாட்டையும்  அழித்தொழிப்பதில் கவனமாக செயல்படுகிறார்கள்.

 குறிப்பாக 2021 ஆட்சிக்கு வந்த திமுக அடுத்த 5 ஆண்டுகளில் பாயாகவோடு சேர்ந்து தமிழர்களை அழிப்பதற்கு திட்டமிட்டவண்ணமிருக்கிறது.

திமுகவும் அதிமுகவுடன் ஏன் எழுவரையும் விடுதலை செய்யமாட்டார்கள்? இவர்கள் இருவரும் தேசியக்கட்சியோடு சேர்ந்து தமிழ்நாட்டு நலனையும் தமிழர்களையும் அழிப்பதற்கும் துணைபோபவர்கள்.ஆகவே எந்தக் காலத்திலும் திராவிட திருவாளர்களால் எழுவர் விடுதலை நடைபெறாது. 2021 திமுகவின் ஆட்சியில் எழுவர் விடுதலை நடக்காது என்பதை நோக்கியே ஆட்சியாளர்களின் செயற்பாடு அமைகிறது 

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் எழுவர் விடுதலையே முதற்செயற்பாடாக இருக்கும். மக்கள் அனைவரும் அடுத்த 5 ஆண்டுகளில் திமுகவின் தமிழின அழிப்பு அரசியல் வழியாக உணர்ந்து அடுத்த தேர்தலில் நாம் தமிழரை வெல்லவைப்பதன் வழியாக மட்டுமே எழுவரும் விடுதலை செய்யப்படுவார்கள்.இது உலகத்தமிழர்களுக்கு உண்மையாகவும் உறுதியாகவும் தெரிந்த உண்மை.தமிழக முதலமைச்சராக இருப்பதற்குரிய எந்தத் தகுதியும் இசுட்டானிக்கு இல்லை. மக்கள்தமது அரசியல் அறிவை அடுத்த 5 ஆண்டுகளில் உற்று நோக்கி தெளிவுபட்டு திராவிட திருவாளர்களை அரசியலிருந்து ஒதுக்கினால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை வளமாகும்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *