ஈழத்தமிழர்களின் உதவி தேவையா?

 

தமிழகத்திற்கு கோரோனாவுக்காக உதவி செய்யுமாறு தமிழக முதலமைச்சர் ஈழத்தமிழர்களை உதவி கோரியிருக்கின்றார்.

முதலில் தமிழக முதலமைச்சர் கடந்த 70 ஆண்டு அரசியலில் தமிழக மக்களின் வளங்களை சுரண்டி வைத்திருக்கும் திமுக ஆட்சியாளர்கள் உங்களிடம் இருக்கும் பணத்தை கோரோனா தேவைக்கு பயன்படுத்தவேண்டிய கடமை உங்களுடையது.காரணம் தமிழக மக்களை ஏமாற்றி வளங்களைச் சுரட்டியபோதும் திரும்பத்திரும்ப ஆட்சி அதிகாரத்தில் இருத்துவதற்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு நீங்கள்  கோரோனா தேவைக்கு சுருட்டிய சொத்துக்களைப் பயன்படுத்துங்கள்.

 

ஈழத்தமிழர்கள் 20 நாடுகளின் படைக்கு சமபடைப்பலத்தை மக்கள் ஆதரவோடு தேசியத்தலைவர் கட்டியெழுப்பி இருந்தார்.அந்த உயரிய 20 நாடுகளின் படைசமநிலையை சீர்குலைத்து ஒட்டுமொத்த தமிழர்களையும் அழித்த திராவிடக் கட்சிகள். இப்போது நீங்கள் தமிழக மக்களின் சொத்துக்களை சுருட்டிய வைத்துக்கொண்டு ஈழத்தமிழர்களின் உதவி கேட்பது எந்தவகையில் அறமாகும்.மீண்டும் 2021 இல் தமிழக மக்கள் வாக்களித்து திமுக வெற்றி பெற்றிருக்கிறது. மீண்டும் வாக்களித்த மக்களுக்கு துரோகிகளாக தங்களை இனம் காட்டிக் கொள்வதேனே?

தமிழக மக்கள் திராவிட மாயையில் இருந்து வெளியேறி தமிழ்த்தேசிய அரசியலை உள்வாங்கி தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சியோடு இணைந்து எதிர்வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை வெல்லவையுங்கள்.தமிழக மக்களின் வாழ்க்கை வளமாகும்.

 

திராவிடத்திருவாளர்களின் தமிழ்தேசிய அழிப்பு மனப்பாங்கோடும் தமிழின அழிபிபுன் கறைபடிந்த கைகளுக்கு ஒரு சதம் கூட எம்மால் கொடுக்கமுடியாது.தமிழக மக்களோ தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்தால் அவர்கள் ஊடாக உதவ ஈழத்தமிழர்கள் அணியமாக இருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *