சிங்கள இனவெறியரசால் பறக்கும் காணொளி கருவி மூலம் தமிழர்கள் கண்காணிப்பு

ஈழமண்ணில் சிங்கள அரசபடையால் பறக்கும் காணொளி கருவி மூலம் தமிழர்களை கண்காணிக்கும் பணிகளை சிங்கள அரச காவல்துறையினர் முடுக்கி விட்டுள்ளார்கள்.ஈழத்தின் தென்பகுதியில் பறக்கும் காணொளி கருவியூடாக பதியப்பட்ட காட்சிகள் இணையவழியில் பகிரப்பட்டிருக்கிறது.ஆனால் தென் தமிழீழத்தில் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.தற்போது வடதமிழீழத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.சிங்கள அரச காவல்துறை கோரோனா நிலையைக் காரணம் காட்டி வடதமிழீழம் கிழக்குத் தமிழீழப் பகுதிகளில் மனித உரிமைக்கு எதிரான முறையில் தமிழர்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது . 

 

இது சட்ட விரோதமானது. வடக்கு தமிழீழம் கிழக்கு தமிழீழப் பகுதிகளில் தமிழ்மக்கள் தடையை மீறி நடமாடினால் பிடிப்பதற்கு வேறு வழிமுறைகள் உண்டு. பெருந்தொகையான படையினரையும் காவல்துறையினரையும் குவித்து வைத்துக் கொண்டு பறக்கும் காணொளிகள் கருவி மூலம் தமிழர்களுடைய தனியுரிமையை மீறி இவ்வாறு படம் பிடிப்பது மனிதவுரிமை மீறலாகும். யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் திறந்த கிணறுகளே குளியலுக்கு பயன்படுத்தப்படும். தமிழ்ப்பெண்கள் குளிக்கும்போது சிங்தள அரசபடைகளால் பாதுகாப்பு கண்காணிப்பு என்ற போர்வையில் பறக்கும் காணொளிக் கருவி மூலம் படமாக்கும் செயல்கள் நடைபெறுவதாக அதிகாரபூர்மற்ற தகவல்கள் வந்திருக்கிறது.மக்கள் பிரதிநிதிகள் இதுகுறித்து உடனடியாக செயற்படவேண்டும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *