தமிழ் மொழியை  கனடாத்தமிழர் பேரவை புறக்கணிக்கிறார்களா?   

 

உலகத்தமிழர்கள் அதிர்ச்சியில்!

கனடாத் தமிழர் பேரவை ஈழத்தமிழருக்கான அரசியல் அதிகாரத்திற்கான அரசியலை கனடா வாழ் மக்களின் சார்பாக கனடா மண்ணில் முன்னெடுப்பதற்காக தொடங்கப்பட்டது. 2009 இல் ஈழத்தமிழர்கள் அழிக்கப்பட்டபின் கனடாவில்  தமிழர்களின் அரசியல் அதிகாரத்திற்கான அரசியலை கனடா மண்ணில் கைவிட்டுவிட்டார்கள்.தமிழினப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பல திட்டங்களை முன்னேடுத்து நடையுலா மூலம் பல ஆயிரம் கனடாவெள்ளிகளைத் திரட்டினார்கள். அந்த செயல்திட்டங்கள் எதுவும் முழுமையான திட்டங்களாகவும் பாதிக்கப்பட்ட மக்களை நிறைவு செய்யக்கூடிய திட்டமாகவும் அமையவில்லை.

2016,2017,2018 ஆண்டு காலப்பகுதிகளில் கனடாத்தமிழர் பேரவையால் திரட்டப்பட்ட நிதி பற்றிய தகவல்களை கேட்டிருந்தோம். ஆனால் இதுவரை எதையுமே நிதிவழங்கிய மக்களுக்கு பொறுப்புக் கூறாமல் தொடர்ந்தும் நிதி திரட்டும் பணியில் கனடாத் தமிழர் பேரவைகுறிப்பாக சிங்கள அரச நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் முன்னிலைப்படுத்தி மட்டக்களப்பில் பாற்பண்ணை உருவாக்குவதற்காக மக்களிடம் திரட்டிய பல ஆயிரம் கனடா வெள்ளிக்கு செயல்திட்டத்தின் நிலைப்பாடு அறிவிக்கப்படவில்லை.

கனடா  தமிழர் பேரவையினர் தமிழ்மொழியை பயன்பாட்டு மொழியாக பயன்படுத்தாமல் நிதிதிரட்டுவதில் முனைப்புக் காட்டுவது தமிழ்மொழி பேசும் மக்கள் கேள்வியெழுப்பியிருக்கிறார்கள்.பல மக்களுடைய குற்றச்சாட்டை முறைப்பாட்டை பறை ஊடகம் முன்வைக்கின்றது.கனடாத் தமிழர் பேரவை சில செய்திகளை இணைத்திருக்கிறோம்.இவை அனைத்திலும் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.மக்களின் கேள்வியாக இவர்களே தமிழ் மொழியை தமது அமைப்பின் செயல்பாடுகளில் முன்னெடுக்காமல் புறக்கணித்துக்கொண்டு தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டுவதன் உள்நோக்கம் என்ன?

25 க்கு மேற்பட்டசைவக் கோயில்கள் கனடாவில் இயங்குகின்றன.இவை அனைத்தும் கனடா வாழ் தமிழர்களின் பணத்தில் கட்டி வளர்க்கப்பட்டிருக்கிறது.இறைவன் பேசிய மொழி தமிழ்.அனைத்து கோயில்களும் தமிழ் மொழியைப் புறக்கணித்து தமிழருக்கு புரியாத மொழியில் தமிழர்களை குறிப்பாக தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும் வடமொழியில் தமிழர் அல்லாதவர்கள் பூசை செய்வதை ஏன் கனடாத் தமிழர் பேரவை தட்டிக்கேட்டு தமிழ்மொழி வழிபாடு செய்வதற்கு முயற்சி எடுக்கவில்லையென மக்கள் கேள்வியெழுப்பியுள்ளார்கள்.

தமிழ் மக்கள் மீதும் தமிழ் மீதும் அக்கறை இருப்பதாக காட்டிக் கொண்டு நிதியை மட்டும் திரட்டுவதை முன்னிலைப்படுத்துவதை தமிழ்மக்கள் வன்மையாக பறை ஊடகத்தின் கண்டித்திருக்கிறார்கள்.கனடாத்தமிழர் பேரவை கோயில்களில் இறைவன் பேசிய மொழி தமிழை வழிபாட்டு மொழியாக மாற்ற பணியாற்றவேண்டும் என மக்கள் பறை ஊடகத்தின் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

 கனடாத்தமிழர் பேரவை இதுவரை ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக் கொண்டு கனடா அரசுடன் பேசி தமிழினப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான பணிகளை ஏன் முன்னேடுக்கவில்லை? 

ஈழத்தமிழர்களின் அடிப்படை அரசியல் உரிமைக்காக கனடா மண்ணில் கனடாத்தமிழர் பேரவை முன்னேடுக்கவேண்டும்.இல்லேயேல் கனடாதமிழர் பேரவையை கலைத்துவிடவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.கனடா வாழ் மக்களின் சார்பாக கனடாத் தமிழர் பேரவை கனடா அரசுடன் இணைந்து கனடா நாடாளுமன்றத்தில்

1.ஈழத்தமிழர்களுக்கு நடந்தது தமிழினப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான பணிகளை முன்னேடுக்கவேண்டும்.

2.அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் தமிழினப்படுகொலைக்கான நீதிக்காக பணியாற்றுதல்

3.ஈழத்தமிழர்களின் இறைமையைப் பாதுகாக்கத் கூடிய தன்னாட்சி அதிகாரம் கொண்ட தமிழர் அரசை நிறுவுவதற்கான பணியை முன்னேடுக்கவேண்டும்.

4.உலகநாடுகளில் வாழும் தமிழர்களிடம் தமிழீழத்திற்கான தன்னாட்சி அரசிற்கான வாக்கெடுப்பை நடத்தவேண்டும்.

மேலே சொல்லப்பட்ட 4  பணிகளையும் கனடாத்தமிழர் பேரவை முன்னேடுக்கவேண்டும் என கனடா வாழ் மக்களோடு உலகத்தமிழர்களும் விரும்பி நிற்கிறார்கள்.

இக்கட்டுரை அனைத்தும் மக்களின் எண்ணங்களை பறை ஊடகம் வெளிப்படுத்தியிருக்கிறது.இக்கட்டுரையில் பறை ஊடகம் தமது கருத்தாக எதையும் முன்வைக்கவில்லை.

இக்கட்டுரைக்கு பறை ஊடக குழுமம் பொறுப்பல்ல.

தமிழ்மொழி காப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *