வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை பலிக்காடாவாக்கும் கனடா நா.க.தமிழீழ அரச உறுப்பினர்கள்

 

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் நாள் ஈழமுரசு செய்தித்தாளில் நாடு கடந்த அரசின் நிதியமைச்சரால் வெளியிடப்பட்ட நிதி சார்ந்த அறிக்கையில் தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிராக சிங்கள அரசுக்கு ஆதரவாக வெளியிடப்பட்டிருந்தது கண்டு கனடா வாழ் மக்கள் பேரதிர்வில் முழ்கியிருக்கிறார்கள்.

 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஆதரவாக செயல்படுவதாகச் சொல்லிக் கொண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை பயங்கரவாதச் சட்டத்திற்குள் கைது செய்யக்கூடிய வகையில் நா.க.த.அரசின் நிதி அமைச்சுக்குப் பொறுப்பான தமயந்தி லோகேசுவரன் அவர்கள் இவ்வறிக்கையை வெளியிட்டிருக்கின்றார்.

இவரை இவ்வறிக்கை பற்றி விசாரித்தபோது நான் இலங்கைக்குப் போறதில்லை.ஆகவே எனக்கு அதைப்பற்றி எதுவித கவலையும் இல்லை என்று சொல்லியிருக்கின்றார். இவர் நாடுகடந்த அரசின் கீழ் இருந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாயகமண்ணில் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் பணியைச் செய்து வருகின்றார். 

 

கனடாவில் இருக்கும் 25 உறுப்பினர்களும் இதற்கு உடந்தையாக இருப்பது மிகமிக இழிவாகும்.

 

இது சார்ந்த கூட்டம் ஒன்றை பறை ஊடகம் ஒழுங்கு செய்தது.அதில் அனைவரும் பங்குபற்றினால்  பல திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்த முடியாத நிலையில் பின்வாங்கிய 25 உறுப்பினர்களும் நாடுகடந்த அரசில் இருந்து எதை சாதிக்கப்போகிறீர்கள்?

25 உறுப்பினர்களுக்கும் பறை ஊடகம் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் பொதுவெளியில் வரும்வரை உண்மைகளை பறை ஊடகம் வெளிக்கொண்டு வரும் என்பதை உறுதியோடு நிற்கிறோம்.இவ்வறிக்கையில் தமயந்தி லோகேசுவரன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பேரில் திரட்டிய 10288 கனடா வெள்ளியைப் பணத்தை தாயகத்தில் உள்ள எம் மக்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான செயற்பாடுகளுக்கே செலவிடப்படும் என சிங்கள அரசுக்கு சான்று வழங்கியிருக்கிறார்.

 

மக்களிடம் இருந்து கிடைத்த தமிழ்த்தேசியத்திற்கு எதிரான இச்செய்தியின் அடிப்படையில் கனடா நா.க.தமிழீழ அரச உறுப்பினர்கள் தமிழ்த்தேசிய எதிர்வினையாற்றும் செயல் அம்பலமாகிறது. கனடா வாழ் மக்களே கனடா நா.க.தமிழீழ அரசின் பல தமிழ்த்தேசியத்திற்கு எதிராக செய்கின்ற பல பணிகளை பறை ஊடகம் மக்களுக்கு முன் வெளிக் கொண்டு வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *