கனடா நா.க.தமிழீழ அரசின் தில்லுமுல்லு

Transnational Government of Tamil Eelam & Trans Global Tamil Emancipation Inc என்று

கனடாவில் இரண்டு நிறுவனங்கள் நாடு கடந்த தமிழீழ அரச25 வின்னர்களும்  இன்னும் சில பழைய நா.க.தமிழீழ அரச வின்னர்களும்  தனித்தனியாக வைத்திருக்கிறார்கள்.இவர்களை மூன்று பிரிவாக பிரித்து வைத்திருப்பவர் பிரதமர் உருத்திரகுமாரன்.மூன்று பிரிவாகப் பிரிந்து கோழிச்சண்டையைப் போடுவதையே தமிழ்த்தேசியப்பணியாக வைத்திருக்கிறார்கள். கனடா வாழ் தமிழர்களை ஏமாற்றி சிங்கள இனவெறியரசின் விருப்பங்களை கனடா வாழ் மக்களின் பணத்தில் முன்னேடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு நிறுவனங்களும் கனடா வாழ் தமிழர்களை ஏமாற்றுவதோடு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு சிக்கலை உருவாக்கும் பணியில் மும்முரமாக செயல்படுகிறார்கள். நாடு கடந்த தமிழீழ அரசு சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலின் கீழ் கே.பியின் கட்டளைக்கமைய நா.க.தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் செயற்பட்டுக் கொண்டு தமிழ்மக்களை ஏமாற்றி வருவது அம்பலமாகியிருக்கிறது.

ஆகவே கனடாவில் நாடுகடந்த தமிழீழ அரசு எந்தவிதமான செயற்பாடும் முன்னெடுப்பதற்கு மக்கள் தடை போடவேண்டும்.கனடாவாழ் தமிழ் மக்களே நாடுகடந்த போலித்தமிழ்த்தேசியவாதிகளுக்கு நிதியுதவி வழங்காதீர்கள்.ஏற்கனவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரின் பேரில் 10288 கனடா வெள்ளி அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு விட்டது.கடந்த 10 ஆண்டாக தமிழீழ மக்களின் அரசியல் அதிகாரத்திற்கான ஆக்கபூர்வமான எந்தவித செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக பாதிக்கப்பட்டவர்களைச் சாட்டாக வைத்துக் கொண்டு நிதி திரட்டி கனடா மக்களை ஏமாற்றுவதை அனுமதிக்க முடியாது.

கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முன் உலகத்தமிழருக்கு மக்கள் அள்ளி வழங்கிய பணத்தை சுருட்டியவர்களும்  தேசியத் தலைவருக்கு தண்ணி காட்டிய பொறுக்கிகளோடும் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.அதேபோல இவர்களுக்கும் அந்த வாய்ப்பை வழங்கக்கூடாது. .விழிப்போடு இருங்கள்.

“எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு”

இந்தக் குறள் ஒன்றே உங்களுக்குப் போதுமானது அடுத்தவன் உங்களை ஏமாற்றாமல் தடுப்பதற்கு.போலித் தமிழ்த் தேசியத்தைமுன்னெடுப்போரை  மக்கள் இனம் கண்டு ஒதுக்கவேண்டும். இக்கட்டுரை கனடாவாழ் மக்களின் முறைப்பாடுகளையும் குற்றச்சாட்டுகளையுமே  வெளிப்படுத்தியிருக்கிறது.

ஆகவேபறை ஊடகக் குழுமம் பொறுப்பல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *