திரட்டிய நிதி நா.க.தமிழீழ அரசின் உறுப்பினர் பலரின் கைகளில் ஊஞ்சலாடுகிறது.

 

 

தமிழீழக்கோரிக்கையையும் தமிழ்த்தேசியக் கொடியையும் ஏந்திக் கொண்டு கனடா வாழ் தமிழர்களுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருக்கும் நா.க.தமிழீழ அரசு.

நா.க.தமிழீழ அரசு தமிழீழத் கோரிக்கையையும் தமிழீழத்தேசியக்கொடியையும் ஏந்திக் கொண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சிங்கள அரசின் பிடிக்குள் சிக்கவைத்திருக்கிறது.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவாக நீண்ட தூரம் நடப்பதாக போலி வேடமிட்டு 10288 கனடாவெள்ளியைத் திரட்டி அமெரிக்க நா.கடந்த தமிழீழ அரசுக்கு தாரைவார்த்த பெருமைக்குரியவர்கள் கனடா நா.க.தமிழீழ அரசினர்.சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலின் இனப்படுகொலையின் முதன்மைச் சாட்சிகளாக தெருவில் போராடும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைக் காட்டிக்கொடுப்பதோடு அதற்கு கனடாவாழ் தமிழர்களிடம் ஏமாற்றி10288 கனடாவெள்ளியை திரட்டியதாக உலகத்தமிழர்கள் நம்புகிறார்கள்.கனடாவாழ் தமிழர்களின் காதில் நா..க.தமிழீழ அரசு பூவைச்செருகியிருப்பது பெரும்துயராகும். 

இப்போது அமெரிக்காவில் உள்ள ஜெயக்குமார் தலைமையில் கீழ் ஞானேசுவரன் தலைமையில் கனடாவில் பல ஆயிரம் கனடா வெள்ளிகளை திரட்டியிருப்பதாகத் தகவல்.பழைய உறுப்பினர்களின் கையிலும் கடந்த காலத்தில் திரட்டிய பணம் அது கனடாவில் தான் இருக்கிறது.ஆனால் மூன்று பிரிவாக பணம் கையாடல் நடந்துகொண்டிருக்கிறது.

இவைகள் அனைத்தும் நாடுகடந்த தமிழீழ அரசின் யாப்பு க்கு எதிராகவே நடைபெறுகிறது.இதனுடைய முழுப் பொறுப்பும் நா.க.தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரனே பொறுப்பு.கனடா அமெரிக்காவில் உள்ள நா.க.தமிழீழ அரசை முழுமையாக கலைத்துவிட்டு அடுத்த தலைமுறையினரை உள்வாங்கி நா.க.தமிழீழ அரசை சீரமைக்கவேண்டியதுகனடா அமெரிக்க வாழ் தமிழர்களின் மிகப்பெரிய பொறுப்பாகும்.

இங்கே பலர் நா.க.தமிழீழ அரசைப் சாட்டி நிதி திரட்டலில் ஈடுபட்டுள்ளார்கள்.இந்நிதி யாப்பின் ஒழுங்குக்கு எதிராக கையாளப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.இதை நாம்உடனடியாக நிறுத்தவேண்டும்.

இக்கட்டுரை கனடா மற்றும் உலகம் தழுவி வாழும் மக்களுடைய குற்றச்சாட்டை பறை ஊடகம் வெளியிடுகிறது..இதுபறை ஊடகத்தின் எண்ணப்பாடு அல்ல. இக்கட்டுரைக்கு பறை ஊடகம் பொறுப்பல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *