விரிசலையையும் பிளவையும் முதலில் வெளிக்காட்டிய செய்தித்தாள்

2009 க்கு முதல் கனடாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என்ற போர்வையில் கனடாவில் ஈழமுரசு இயங்கியது.இவர்கள் கனடா வாழ் மக்களால் வழங்கிய பணத்தில் இயங்கியவர்கள். வன்னியின் தலைமையின் கீழ் தாம் இயங்குவதாகச் சொல்லிக்கொண்டு தமிழ்த்தேசிய அரசியலில் கனடா வாழ் மக்களுக்கும் வன்னித் தலைமைக்கும் தண்ணி காட்டியவர்கள்.விடுதலைப்போருக்கு  பணம் திரட்டியவர்களின் பங்காளிகள். ஆனால் மக்களின் பணத்தைப் தமதாக்கியவர்களை மூடிமறைத்து தமிழ்தேசிய அரசியலுக்கு பணத்தை வாரி இறைந்த மக்களின் பணத்தை திருப்பி பெற்றுக்கொடுப்பதில் அமைதி காத்தும் தமிழ்தேசிய அரசியலுக்கு எதிராக செயற்படும் செய்தியூடகமாக உயர்ந்து நிற்கிறது.இன்று தமிழ்த்தேசியத்திற்கு எதிரானதும் தவறானதுமான செய்திகளை வெளியிட்டு மக்களின் அமைதிப் போக்கை இழிவுபடுத்துவது மிகமிகத்துயரானது.

ஈழமுரசு மக்களின் சொத்துக்களில் ஒன்று.ஈழமுரசு செய்தித்தாள் இன்று தமிழ்த்தேசிய அரசியல் புரிதல் இல்லாதவர்களால் நடத்தப்படுவதால் தமிழ்த்தேசியத்திற்கு எதிரான மற்றும் விரிசல்களையும் பிரிவுகளைகளையும் வலுப்பெறும் வகையில் மூடிமறைக்கிறது.கனடாவில் நா.க.தமிழீழ அரசை இணைந்து பயணிக்கவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.ஈழமுரசு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உயிராபத்து வரக்கூடிய செய்திகளைப் பரப்பி சிங்கள அரசின் தேவைகளை கனடாவில் இருந்து நிறைவேற்றும் ஊடகமாக மக்களால் இனம் கண்டு அடையாளமிட்டு குற்றம் சாட்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள நா.க.தமிழீழ அரசின் நாடுகளுக்கிடையேயான இணைப்பாளர் யெயக்குமார் தலைமையில் ஞானேசுவரன் என்பவரை நிதி திரட்டப் பணித்துள்ளார்.ஞானேசுவரன்  நிதி திரட்டும்பணியில் ஈடுபட்டுள்ளார்.யெயக்குமாரின் வேண்டுதலின் பேரில் புதிதாக பதிவு செய்யப்பட்ட Trans Global Tamil என்ற நிறுவனத்தின் தலைவராக ஞானேசுவரன் இருக்கிறார்.இவருடன் இன்னும் மூவர் ஆட்சிக்குழு உறுப்பினராக இருக்கிறார்கள்..அவர்களுடைய பெயர்கள் வெளியிட ஞானேசுவரன் மறுத்துவிட்டார். இவர் நாடுகடந்த அரசின் உறுப்பினர் அல்லாதவர். இவர் 2019 இல் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கும் ஞானேசுவரனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையாம். ஞானேசுவரன் 25 உறுப்பினர்களையும் பிரித்தாண்டு தொடர்ந்தும் விரிசலையும் பிளவையும் வலிமையாக்கும்  பணியை வழங்கியிருப்பவர் அமெரிக்காவில் உள்ள யெயக்குமார்.நாடுகடந்த அரசை தொடர்ந்து பிரித்து வைப்பதில் ஈழமுரசு மும்முரமாக இயங்கிக் கொண்டு நா.க.தமிழீழ அரசிற்குள் எந்தவிரிசலோ பிளவோ இல்லையென உண்மைக்கு மாறாக தமிழ்த்தேசிய வழியை உடைக்கும் பணியில் ஈழமுரசு களமிறங்கியிருக்கிறது.இவர்களையெல்லாம் மறைமுகமாக இருந்து இயக்குபவர்  நா..க.தமிழீழ அரசின் முதன்மை அமைச்சர் உருத்திரகுமாரன். 

மக்கள் விழிப்பாக இருங்கள்.வணிகர்கள் உங்கள் விளம்பரங்களுக்கு பணம் வழங்குவதை இடைநிறுத்துங்கள்.மக்கள் முற்றாக ஈழமுரசை புறக்கணிப்பதும் தமிழ்தேசியத்திற்கு எதிராக பரப்புரை செய்யும் ஈழமுரசையும் ஓரம் கட்டவேண்டிய பொறுப்பு தொழிலதிபர்களுக்கு உரியது.

2010 ஆம் ஆண்டு நா.க.தமிழீழ அரசு உருவாக்கப்பட்டபோது போர்க்கொடி தூக்கியவர்களில் ஈழமுரசுக்கும் பங்கு உண்டு. நா.க. தமிழீழ அரசிற்கு எதிராக தேசிய அவை உருவாக்கியவர்களுக்கு ஈழமுரசுஆதரவு வழங்கியது.பின்பு உலகத்தமிழரிடம் இருந்த மக்களின் பணத்தின் பங்காளிகளும் இவர்களே.இவர்கள் உலகத்தமிழரோடு இருந்தபோதும் சரி இப்போது நா.க.தமிழீழஅரசை சிதைப்பதிலும் சரி கொடுக்கு கட்டிக் கொண்டு பயணிப்பதாக தமிழ்த்தேசிய உணர்வாளர்களின் குற்றச்சாட்டு.

இக்கட்டுரை கனடா மற்றும் உலகம் தழுவி வாழும் மக்களுடைய குற்றச்சாட்டை பறை ஊடகம் வெளியிடுகிறது..இதுபறை ஊடகத்தின் எண்ணப்பாடு அல்ல. இக்கட்டுரைக்கு பறை ஊடகம் பொறுப்பல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *