கனடா நா.க.தமிழீழ அரசின் விரிசலையும் பிளவையும் உறுதியாக்கிய நேர்காணல்

ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு நன்றி..இச்செய்தியை வழங்கியமைக்கு மிக்கநன்றி.

2019 ஆம் ஆண்டு கனடா நா.க.தமிழீழ.அரசின் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் நிமால் விநாயகமூர்த்தியும்  மகாயெயம் மகாலிங்கமும் உள்ளடங்குவர்.இதில் நிமால் விநாயகமூர்த்தி தொடக்க காலத்தில்  இருந்து கனடா நா.க.தமிழீழ அரசின் உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் 2019 ஆம் ஆண்டுக்கு முதல் நா.க.தமிழீழ அரசின் நிதி அமைச்சராக இருந்தவர்.
நிமால் 2019 ஆம் ஆண்டு பிரதமர் பதவிக்கான தேர்தலில் களமிறங்கினார். இவர் உருத்திரகுமாருக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பல அவதூறுகள் பரப்பப்பட்டன.
1. நிதியமைச்சர்  பதவியில் இருக்கும் போது நிமால் விநாயகமூர்த்தி கணக்குகள் சரியானமுறையில் கையாளப்படவில்லை என குற்றம் சாட்டியவர்கள் பிரதமர் உருத்திரகுமாரனின் ஆதரவாளர்களான ஆறுமுகம் கோபாால் ,குமணன்.
2. 2019 ஆம் ஆண்டு புதிய நிதியமைச்சராக தமயந்தி லோகேசுவரனிடம் நிதிப்பொறுப்புக்கான ஆவணங்கள் கையளிக்கப்படவில்லை.
இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்தவர்கள்  கனடா நாடு கடந்த தமிழீழ அரசின் தற்போதைய உறுப்பினர்களான ஆறுமுகம் கோபால் ,குமணன்,வியிதரன் மற்றும் நாடு கடந்த அரசின் உறுப்பினர் இல்லாத
மாதகல் கண்ணன்.

இவர்கள் நா..க.தமிழீழ அரச பணிமனைக்கு வெளியே பிரதமர் பணிமனையை நிறுவி நிமாலோடு நிற்பவர்களின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதும் அச்செயற்பாடுகளைத் பிரதமர் மூலம் தடுத்து நிறுத்துவதுதான் இவர்களின்தமிழ்த்தேசியப்பணி. இதற்கு ஊக்கம் கொடுப்பவர் பிரதமர்.பிரதமர் அமெரிக்காவில் நா..க.தமிழீழ அரசின் பிரதமராக இருந்துகொண்டு தமிழ்த்தேசியப்பணிகளை முன்னெடுக்காமல் தடுப்பதும் குழப்புவதும்தான் சிங்களஅரசு கே..பி ஊடாக வழங்கப்பட்ட உத்தரவு.

ஆறுமுகம் கோபால் அவர்களும் மாதகல் கண்ணனும்உலகத்தமிழரில் இருந்தபோது வன்னித்தலைமையையும் கனடாவாழ்   தமிழர்களுக்கும் பிரதிநிதியாக இயங்கியவர்கள்.ஆறுமுகம் கோபாலும் மாதகல் கண்ணனும் தமிழ்த் தேசியத்தை மறைமுகமாக எதிர்ப்பவர்கள்.இவர்கள் இருவரும் 2010 ஆண்டு நா.க.தமிழீழ அரசு உருவாவதை உலகத்தமிழரோடு சேர்ந்து நின்று எதிர்த்தவர்கள்.இப்போதும் கனடா நாடுகடந்த தமிழீழ அரசுக்குள் விரிசலையையும்  பிளவையையும் வளர்த்து வருபவர்கள்.

இப்போது ஐபிசி தமிழ் தொலைக்காட்சியில் நிமால் விநாயகமூர்த்தி ஒரு குழுவினரில் ஒருவராகவும் மகாயெயம் மகாலிங்கம் மற்றக்குழுவினரில் ஒருவராகவும் தோன்றி நேர்காணல் வழங்கியிருந்தார்கள்.இவர்களின் அரசியல் திறனை அளவிட்டுக் காட்டிய நேர்காணல்.இவர்கள் தாம் தமிழ்த்தேசியத்திற்கு எதிராக இருக்கிறோம் என்பதை கனடா வாழ் தமிழருக்கு உறுதிப்படுத்தியுள்ளார்கள்.2பதிவுசெய்யப்பட்ட நிறுவனம், 2 வைப்பகக்கணக்கு ,2 அலுவலகங்கள், 2பிரிவிலிருந்து நிமாலும் மகாயெயமும் விரிசலையும் பிளவையும் மூடிமறைத்து தாம் ஒற்றுமையாக செயற்படுகிறோம் என்பது  உண்மைக்கு புறப்பானது என்பதை கனடா வாழ் தமிழ்மக்களுக்கு தெட்டத் தெளிவாக்கியவர்கள்.

கனடா நாடுகடந்த தமிழீழ அரசில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் கனடா மண்ணில் தமிழ்த்தேசிய அரசியல் செய்யமுடியாது.இதுவரை தமிழ்த்தேசிய அரசியலுக்கு எந்த ஆக்கபூர்வமான பணிகளும் இவர்களால் முன்னெடுக்கப்படவில்லை.கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசு சீரமைக்கப்படவேண்டும்.

கனடாவில் நாடுகடந்த தமிழீழ அரசு இளைய தலைமுறையினரிடம் கையளித்தால்மட்டுமே  நாடு கடந்த தமிழீழ அரசு கனடாவில் இயங்கமுடியும் என்பது இன உணர்வாளர்களின் முடிவு.

இக்கட்டுரை கனடா மற்றும் உலகம் தழுவி வாழும் மக்களுடைய தகவல்களையும் முறைப்பாடுகளையும் பறை ஊடகக் குழுமம் வெளியிடுகிறது..இதுபறை ஊடக குழுமத்தின் எண்ணப்பாடு அல்ல. இக்கட்டுரைக்கு பறை ஊடகக் குழுமம் பொறுப்பல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *