“மேதகு “திரைப்படம் தமிழினவழிப்பாளர்களின் வெளியீடு

 

நாம் மேதகு திரைப்படத்தை பார்ப்பதானால் அங்கே தமிழ்த்தேசிய உணர்வு புரையோடவேண்டும். படம் எடுத்து முடிக்கும்வரை நாம் ஆதரித்தோம்.

ஆனால் கிட்டு எப்போது திராவிட திருவாளர்களோடு கூட்டுச்சேர்ந்தாரோ அன்றிலிருந்து மேதகு திரைப்படத்தை நாம் ஏற்கமுடியாது.

 

மேதகு திரைப்படம் மூலம் தமிழக மண்ணில் தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஆப்பு அடிக்கும் இழிபணியை கிட்டு செய்துள்ளார்.ஆகவே நாம் இப்படத்திற்கு ஆதரவு வழங்கினால் தொடர்ந்து தமிழ்த்தேசிய அரசியலை இழிவுபடுத்தும் பணியை திராவிடத் திருவாளர்கள் தொடர்வார்கள்.

 

துரோகிகளோடு பயணித்துக் கொண்டு தேசியத்தலைவரை படமாக எடுப்பது என்பது தமிழ்த்தேசிய அரசியலுக்கு இழிவாகும்.தமிழ்த்தேசியத்துரோகம்.தமிழினத்தை அழித்த திராவிட திருவாளர்களின் போலித்தனத்திற்கு நாம் பலியாகமுடியாது.மீண்டும் எம்மை பலிக்காடாக்கத் துடிக்கும் திராவிடத் திருடர்கள்.

 

வன்னியில் தமிழீழ அரசால் விடுதலை சார்ந்து பல படங்கள் வெளிவந்திருப்பது தமிழீழ தேசிய அரசியலில் ஊறிய உணர்வாளர்களுக்கு நன்கு தெரியும்.

 

தமிழீழ அரசு இருந்த காலத்திலும் சரி இன்றும் சரி தமிழக மண்ணில் விடுதலை உணர்வோடு தமிழ்த்தேசியத்தை வலுப்படுத்தக் கூடிய திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை.தமிழின உணர்வாளர்கள் தமிழ்த்தேசிய அரசியலை முன்னிறுத்தினால் மட்டுமே ஆதரவு வழங்க முடியும்.

 

மேதகு திரைப்படம் திராவிட துரோகிகளின் துணையோடு வெளிவந்திருக்கிறது.இத்திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் தமிழக தமிழீழ உலகத்தமிழர்களுக்கு காதில் பூ வைக்கும் பணியை மேதகு திரைப்படத்தோடு தொடங்கியிருக்கிறார்.

 

தமிழக மண்ணில் திராவிட ஆரிய நிழல்கள் படாத தமிழ்த்தேசிய உணர்வாளர்களால் தயாரிக்கப்படும் திரைப்படத்தை மட்டுமே நாம் ஏற்றுக் கொள்வோம்.

திராவிடத் திருடர்கள் நாம் தமிழர் கட்சியையும் தமிழ்த் தேசியப்போராளி சீமானுக்கும் எதிராக தமிழக அரசியலில் மேதகு திரைப்படத்தை கையாளுகிறார்கள்.நாம் மேதகு திரைப்படத்தை ஏற்க முடியாது.திராவிட திருடர்களின் கண்கள் பார்த்த மேதகு திரைப்படத்தை நாம் பார்க்கமுடியாது.

 

தமிழ்த்தேசியம் தடைகளை உடைத்து நொறுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *