தமிழினத்துரோகி கொளத்தூர் மணி

முகமூடி அணிந்த திராவிட திருவாளர் அவர்கள்  கொளத்தூர் மணி அவர்களின் காணியில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி கொடுக்கும் போது போராளிகளின் உணவுக்கு எவ்வளவு செலவு என்று கேட்டிருந்தார்.இதற்கு பதில் வழங்கவேண்டிய பொறுப்பும் கடமையும் ஈழத்தமிழனாகிய எனக்குரியது.காரணம்தமிழினத்துரோகி கொளத்தூர் மணியின் வீட்டு மாட்டுக்கொட்டிலில் தமிழக மண்ணில் தமிழ்த்தேசியத்தை வீழ்த்துவதற்கு சில ஈழத்தமிழர்களுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

30,40 ஆண்டுக்கு முன் விடுதலைப்புலிகளின் பயிற்சிக்கு காணி கொடுத்த கொளத்தூர் மணி இன்றைக்கு அதே விடுதலைப்புலியில் இருந்ததாகச் சொல்லும் உறுப்பினரை வைத்து தமிழ்த்தேசியத்தை வீழ்த்த உழைக்கிறார்.இது தமிழினத்துரோகம்.கொளத்தூர் மணி ஈழத்தமிழர்களை ஏமாற்றியதே இன்றைய வரலாறு. கொளத்தூர் மணி ஈழத்தமிழர்களின் அரசியல் அதிகாரத்திற்கான எந்த அரசியலையும் தமிழ்நாட்டில் செய்யவில்லை.இவர் அன்றும் செய்ததில்லை.

இன்று தமிழக களத்தில் செந்தமிழன் தமிழ்த்தேசியப் போராளிகளின் தளபதி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் அவர் தம்பி தங்கைகள் தமிழ்நாட்டு மண்ணில் அறிவுக்கருவி கொண்டு தமிழ்த்தேசிய அரசியலை வீச்சோடும் விரியத்தோடும் முன்னெடுத்து களமாடுகிறார்கள்.தமிழினத்தை  அழித்த திராவிட திருவாளர்களை அரசியல் அதிகாரத்தில் இருந்து முற்றாக அகற்ற உலகம் தழுவிய தமிழர்களோடு  நாம் தமிழர் கட்சி களமாடுகிறது.

நாம் தமிழர் கட்சியையயும் சீமான் அவர்களின் முதுகையும் சொறிஞ்சு உங்கள் கைகளைப் புண்ணாக்குவதை நிறுத்தினால் அழகு, சிறப்பு, பண்பு. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *