“மேதகு” திரைப்படம் வரலாற்றுத்  திரிபா?

 

“மேதகு” திரைப்படத்தில் தவறானதும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் தாங்கிய படமாக குற்றம் சுமத்தப்படுகிறது.திரைப்படக்குழுவினர் இதற்கான தெளிவை வழங்கவேண்டும். காரணம் மேதகு திரைப்படக்குழுவினர் இரண்டு முதன்மைக் காரணிகளை முன்வைத்தே இப்படத்தை தயாரித்ததாக பல குற்றச்சாட்டுகள் பறை ஊடக குழுவினருக்கு கிடைத்திருக்கிறது.

1.பல கோடி பணவசூல்

2.தமிழ்த்தேசிய அரசியலை தமிழீழம் தமிழ்நாடு புலம்பெயர் தளத்தில் அழிப்பதோடு திராவிட அரசியலை மேன்மைப்படுத்துவது.

இதற்கான தெளிவை யூலை மாதம் 4ஆம் நாள் 2021 ஞாயிற்றுக்கிழமை தமிழீழ போராட்டமும் திரைக்களமும் என்ற தலைப்பில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் செயலி இணையவழியில் நடக்கும் கூட்டத்தில் வள்ளுவப்பண்பாட்டு நடுவத்தின் சார்பாக தினேசுகுமார் அசோகன்,திரைப்பட இயக்குநர் தனேசு கோபால்,திருக்குமரன்,சுமேசுகுமார்,குகன்குமார்,திரைப்பட இயக்குனர் ரஞ்சித் யோசெப்,திரைப்பட இயக்குனர் ஆனந்த் மூர்த்தி ஆகியோர் தெளிவாக்கவேண்டும். பலகேள்விகள் எமக்குக் கிடைத்திருக்கின்றன.

கேள்விகளை பொதுவாக வெளியிடுகிறோம்.

மேதகு திரைப்படக்குழுவினர் தமிழர்களா?வேற்றுமாநிலத்தவரா?

திரைப்படக் கதையை தந்தவர் யார்?

இப்படக்கதைக்கு யார் பொறுப்பேற்கிறார்?

தேசியத்தலைவரோடு தொடர்புடையவரா இக்கதையைத் தந்தவர்?

இப்படத்திற்கு நிதியுதவி வழங்கியது யார்?

இப்படத்தால் கிடைக்கும் பணத்தில் 50%பணத்தை மாவீரர் குடும்பங்களுக்கு வழங்குவீர்களா?

இப்படி பல கேள்விகள் உண்டு.

இணைபவர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டிய பொறுப்பு ஏற்பாட்டாளருக்குரியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *