ஈழத்தில்இனப்படுகொலையால் இறந்தவர்களின் கணக்கெடுப்புத் திட்டம்

ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை நடவடிக்கைகளில் 1948 இலிருந்து 2009 வரை கொலைசெய்யப்பட்டவர்களைக் பட்டியலிடுதல், அவர்களுக்கான நினைவுச் சின்னங்களை அமைத்தல், நடைபெற்றது இனப்படுகொலை என்பதை உறுதிப்படுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக, மனித உரிமைகள் தரவாய்வுக் குழு (HRDAG) மற்றும் அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான வேலைத்திட்டம் (ITJP) ஆகிய சர்வதேச அமைப்புகள் சிறிலங்காவிலும், வெளிநாடுகளிலும் வாழுபவர்களிடம் இருக்கக்கூடிய போர் மற்றம் ஏனைய காரணங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் சம்பந்தமான தரவுகளை தந்துதவும்படியும், புதிய தகவல்களைத் திரட்டித் தரும்படியும் கேட்டிருந்தன.

”இறந்துபோனவர்களின் பெயர்களைப் பதிவுசெய்வதாவது நாம் அவர்களுக்குக் உரிய மரியாதை செய்துகொள்ளலாம்” என்கிறார் ITJP அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யசுமின் சுக்கா தெரிவித்தார்.

“உயிரிழந்தவர்களின் பெயர்களைச் திரட்டி அவற்றை நிரற்படுத்துவதன் மூலம் இழப்பின் தொகையை சரியாக கணிக்கமுடியுமென்பதோடு இறந்தவர்களை மறக்காது என்றென்றும் சமூகத்தால் நினைவுகூர்வதற்கும் அது உதவியாயிருக்கும்” என யசுமின் சுக்கா மேலும் தெரிவிக்கிறார்.

போர் முடிந்து பதினெரு ஆண்டுமாகியும் சிறிலங்காவில் 2009ம் ஆண்டு வரை எத்தனை பேர் இறந்தார்கள் என்ற சரியான எண்ணிக்கையோ பட்டியலோ எவரிமும் இல்லை.

புள்ளிவிவர அணுகுமுறையில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்து ஒரு முடிபை எய்துவதே இவ் வேற்பாட்டின் நோக்கம். 2009 இறுதி போரின்போது சரணடைந்து பின்னர் காணாமற்போனவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட ITJP யும் HRDAG யும் இதே அணுகுமுறையைத்தான் கையாண்டிருந்தன.

உலகம் முழுவதுமுள்ள தமிழர்களிடம் நாம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், உங்கள் உறவினர்கள், நண்பர்கள், அயலவர்களிடம் பேசி அவர்களுக்குத் தெரிந்த மரணித்தவர்களின் பெயர்களைச் சேகரியுங்கள். இந்த தக்வல்களைச் சேகரித்துப் பதிவு செய்ய இலகுவாக நாங்கள் ஒரு படிவத்தைத் தயார் செய்துள்ளோம்.

பட்டியல்கள் ஆங்கிலத்தில் பதியப்படுவது விரும்பத்தக்கது. அல்லது தமிழிலும் பதியலாம்.

கீழ் உள்ள இணைப்பை அழுத்துவதன் மூலம் தகவல்களை இலகுவாக இணையவழியில் அனுப்பலாம்:

அல்லது

தகவல்களை HRDAG மற்றும் ITJP ஆகிய அமைப்புக்களுக்கு பின்வரும் மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்

itjpsl@gmail.com or info@hrdag.org

தகவல்களை அனுப்புபவரின் பிரத்தியேகம் பாதுகாக்கப்படும்

ஆங்கில, சிங்கள, தமிழ் படிவங்களைத் தரவிறக்க இங்கே here அழுத்தவும்.

https://sangam.org/wp-content/uploads/2019/01/Counting-the-Dead-ver4.0.docx

https://sangam.org/wp-content/uploads/2019/01/Counting-the-Dead-Tamil-Ver4.0.docx

மரணமடைந்த ஒருவரைப் பற்றிய என்னென்ன தகவல்கள் தேவை என்பதைப் இப் படிவங்கள் தருகின்றன. சந்தேகங்கள் இருப்பின் பின்வரும் கேள்வி பத்திகள் மூலம் சிலவற்றைத் தீர்த்துக் கொள்ளலாம்.

https://itjpsl.com/assets/Frequently-Asked-Questions-in-english.docx

இந்த திட்டம் பற்றிய ITJP யின் இணையத்தள முகவரி: http://www.itjpsl.com/reports/counting-the-dead

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *