நாம் தமிழரையும் சீமானையும்  வீழ்த்த திராவிடத்தின் காவடி”மேதகு” 

TVI தொலைக்காட்சிக்கு நன்றி..

திருக்குமரன் மனம் திறந்து பேசுகிறார்.திராவிடர்கள் தேசியத்தலைவர் மீது சேறுபூசுவதாக அதை ஒரு மிக இலகுவாக சிரித்த முகத்துடன் திருக்குமரன் நேர்காணலில் சொல்வது என்பது வேதனை நிறைந்தது.திருக்குமரன் யார் திரைப்பட இயக்குனரா?நடிகரா?கதை ஆசிரியரா?மேதகு திரைப்படத்தைப்பற்றி விளக்கம் கொடுக்கும் தகுதி திருக்குமரனுக்கு இருக்கிறதா?இல்லை என்பதே பலரின்மிகப்பெரிய குற்றச்சாட்டு.

ஒரு எழுத்துப்பதிவோ வரலாற்றுப்பதிவோ ஆவணப்பதிவோ தவறாகப் பதியப்படக்கூடாது என்பது இந்த துறைசார்ந்த வல்லுனர்களின் குறி.திருக்குமரனுக்கு எழுத்துப்பதிவோ வரலாற்றுப்பதிவோ ஆவணப்பதிவோ தவறாக இருக்கலாம் என்ற நிலைப்பாட்டை நிறுவி ஈழத்தமிழர்கள் மீது தமது தமிழ்த்தேசிய காழ்ப்புணர்வைத் திணிக்கிறார்.காரணம் இவரின் உள்நோக்கம் தமிழ்த்தேசியத்தையும் தேசியத்தலைவரையும் மேதகு திரைப்படத்தில் தவறான செய்திகளைப் பதிவுசெய்து கடந்துவிட்டால் அடுத்த திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சியையும் செந்தமிழன் சீமானையும் தவறாக இழிவுபடுத்துவதற்கு இலகுவாக்குகின்றார். 

மேதகு திரைப்படத்தில் வரலாற்றை தவறாகக் காட்டி உலகத்தமிழர்களை ஏமாற்ற முற்படுவதுஇவர்களின் உண்மையான மனநிலை. தமிழினத்துரோகிகளான திராவிடத்திருவாளர்களையும் தமிழினத்துரோகி கருணாநிதியையும் தமிழர்களின் தலைவராகக் காட்ட முற்படுவதே மேதகு திரைப்படக்குழுவின் துரோகத்தனமான உள்நோக்கம்.

மேதகு திரைப்படத்தைப்பற்றி திருக்குமரன் பேசும் வரலாற்றுத்தவறை ஏற்கச்சொல்லி கேட்பது திருக்குமரனின் அறியாமையின் வெளிப்பபாடு.

தமிழக மண் பல தமிழரின் வரலாற்றை ஆவணங்களை காட்சிகளை திரிபுபடுத்தி திரைப்படமாகவும் பாடல்களாகவும் வெளிவந்த இழிவான திரைப்படத்துறை தான் தென்இந்திய திரைப்படத்துறை. பல ஆண்டுகளாக தமிழ்நாடு திரைப்படத்துறையாக மாற்றவிடாமல் வைத்திருப்பதும் இந்த திராவிடத் திருவாளர்களே.

மேதகு திரைப்பக்குழுவின் முதன்மைப்பணி தமிழ்நாடு அரசியலில் இருந்து தமிழ்த்தேசிய அரசியலை விரட்டுவதே ஒரே குறிக்கோள்.

உங்கள் முயற்சி திருவினையாக்க தமிழ்த்தேசியவாளர்களின் வாழ்த்துகள்.

தமிழ்த்தேசியமா?திராவிடதேசியமா? 

வரலாற்றின் பதில் சிறப்பைத்தரும்.

இக்கட்டுரையில் உலகத்தமிழர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் உள்ளடங்கியுள்ளது. பறை ஊடக குழுமம் 100விழுக்காடு இக்கட்டுரைக்கு பொறுப்பானவர்கள் அல்ல.பறை ஊடகக் குழுமம் தமது கருத்தையோ எண்ணத்தையோ இக்கட்டுரையில் வெளியிடவில்லை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *