இனப்படுகொலையா?  அட்டூழியக் குற்றங்களா?

இனப்படுகொலை என்பது ஒரு இனம் இன்னொரு இனத்தை அழிப்பது தான் இனப்படுகொலை.1949 ஆம் ஆண்டு முதல் சிங்கள அரசால் தொடர்ந்து முன்னெடுத்துக்கொண்டிருப்பது தான் தமிழிப்படுகொலை.இனப்படுகொலை மொழி இனம் மீது பல்வேறு வழிகளில் அந்த இனத்தின் இறைமையை அழிப்பது இனப்படுகொலை.

அட்டூழியக் குற்றங்கள் என்பது சிங்கள அரசு மக்கள் விடுதலை முண்ணணியில் இருந்த இளைஞர்களை கொலை செய்தது தான் அட்டூழியக் குற்றங்கள்.சிங்கள அரசு சிங்கள இளைஞர்களையும் மக்கள் விடுதலை முண்ணணிக்கு ஆதவாகவும் உள்ளவர்களை அடித்தும் வெட்டியும் சுட்டும் செய்யப்படும் குற்றம் அட்டூழியக்குற்றங்களாகும்.

ஊடக சந்திப்பு என்பது ஊடக உரிமைகளை மறுக்காமல் ஊடக சந்திப்பு நடத்தவது தான் தமிழ்த்தேசியப் பண்பாடு.

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பறிவு.

இன்றைய அரசியல் தொழில்நுட்பம் புரியாத பல வின்னர்கள் அரசியல் ராசந்திரம் சாணக்கியம் என்று சொல்லி கனடா வாழ் தமிழர்ளுக்கு முட்டாசுக் கடை காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

நீண்ட நடையில் ஒட்டோவாவில் ஒரு சாணாக்கியர் செங்கம்பளம் விரித்து 15நாட்களாகநடந்து போனவர்களை மட்டும் விழுந்து கும்பிட வைத்தார்.இது இவர்களின் சாணக்கியம். இன்னெரு இடத்தில் இன்னெரு கூட்ட   ஒழுங்கமைப்பு. நீயாபெரியவன்?நானாபெரியவன்? நீ பெரிது நான் பெரிது என்றால் இது இனத்தை சீரழிக்கும் பணி.கனடா நாடாளுமன்றத் தொகுதியில் வைத்து தமது விரிசல்களையும் பிளவுகளையும் வெளிச்சம் போட்ட ராசதந்திரிகள் என இறுதிநாளில் கலந்த மக்களால் பெருமையாகப் பேசப்பட்டவர்கள்.

உங்களால் எதுவும் செய்யும் திறன் ஆளுமை இல்லை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கனடாமக்களுக்கு உறுதிப்படுத்தியிருக்கிறீர்கள்.

ஒன்ராரியோ மாநில அவை உறுப்பினர் விசய் தணிகாசலம் அவர்களால் நிறைவேற்றப்பட்ட சட்டவரைபு 104 இனப்படுகொலை கல்வியூட்டல் கிழமை. சட்ட வரைபு 104 ஐமையப்படுத்திய அரசியல் நகர்வு நகர்த்தப்படவேண்டும்.

104 சட்டவரைபில் இளையோரின் ராச தந்திரம் அரசியல் சாணக்கியம் அரசியல் ஆளுமைகளை உலக அரங்கில் நிறுவப்பட்டடிருக்கிறது.104 சட்டவரைபை உடைப்பதற்கு போலித்தமிழ்த் தேசியம் பேசுபவர்களை சமரசமின்றி தோல் உரித்து உலகத்தமிழர்களின் அறிவுக்கு விருந்தாக்குவோம்.

இக்கட்டுரையில் உலகத்தமிழர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் உள்ளடங்கியுள்ளது. பறை ஊடக குழுமம் 100விழுக்காடு இக்கட்டுரைக்கு பொறுப்பானவர்கள் அல்ல.பறை ஊடகக் குழுமம் தமது கருத்தையோ எண்ணத்தையோ இக்கட்டுரையில் வெளியிடவில்லை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *