எழுச்சியோடும் வீச்சோடும் வீரியத்தோடும்  சீமானிசம்

மதிப்புக்குரிய தோழர் தியாகு அவர்கள்  தமிழ்க்குமூகம் சார்ந்த வழிகளில் தமது பணிகளைச் செய்திருந்தாலும் கடந்த காலத்தில் தமிழீழ மக்களுக்கோ தமிழ்நாட்டு மக்களுக்கோ அரசியல் அதிகாரம் சார்ந்த எந்த விதமான அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்காத தமிழ் பேசும் தமிழ்நாட்டுக் குடிமகன்.

 மாநில, நடுவண் அரசுகளை வலியுறுத்தி

1.தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்கல்

2.இனப்படுகொலைக்கான நீதி

3.120ஈழத்தமிழர் சிறப்பு சித்திரவதை  முகாம் அகற்றல்

4.900 தமிழ் மீனவப்படுகொலைத்தடுப்பு

5.தமிழ்நாட்டில் பெண்களின் தாலிஅறுப்புக்கு எதிராகக்குரல்(மதுக்கடை திறப்பு)

6.தனியார் பள்ளிகளில் மாணவிகளை பாலியல் துன்புறுத்தல்

இப்படிப் பல நூறு சிக்கலுக்கு குரல் கொடுக்காத பெருந்தமிழர் தோழர் தியாகு.இவரின் எண்ணப்பாடுகள் கருத்துக்களை விட மிக வீரீயத்தோடும் வீச்சோடும் இன்றைய இளையவர்கள் சீமானின் ஒருங்கிணைப்பில் தமிழ்நாட்டுக் களத்தில் தமிழ்நாட்டுச் சிக்கல்களுக்காக களமாடுகிறார்கள்.தோழர் தியாகு அவர்களின் தமிழ்த்தேசியப் பார்வை உண்மைக்குப் புறம்பானது.தமிழீழ தமிழ்நாட்டு மற்றும் புலம்பெயர் தமிழர்களின் அறிவுக்கு  உகந்தல்ல.

இன்றைய தமிழ்த்தேசிய அரசியலைப் பற்றி இளையவர்கள் முன் பேசுவதற்குரிய ஆளுமை தோழர் தியாகுவிடம் இருக்கிறதா? இல்லை என்பதே உலகில் வாழும் தமிழர்களின் ஆணித்தரமாக எண்ணமாக இருக்கிறது. தோழர் தியாகு அவர்களின் வரலாற்றுப்படிப்பு என்பது திராவிட திருட்டுக் கும்பலின் தமிழ்நாட்டு சீரழிவுகளையும் டெல்லியில் மண்டியிடும் பண்பையும் வைத்துக்கொண்டு பேசுகிறார்.ஆனால் சீமானும் அவர் தம்பிகளும் புறநானூற்று வரலாற்றை படைத்த தலைவனை தமிழ்த்தேசியத் தலைவனாக ஏற்று களமாடுகிறார்கள்.தமிழீழ விடுதலை படைவலிமையை 19 நாடுகளின் படைவலிமைக்கு நிகராக ஈழமண்ணில் வலிமையையும் திறமையையும் ஆளுமையையும் நிறுவிய எம்உயிர்த் தலைவன் படைத்த வரலாற்றைப் படித்து தமிழ்நாட்டின் தமிழ்த்தேசியப்பரப்பில் களமாடுகிறார்கள்.

2010 ஆம் ஆண்டு செந்தமிழன் சீமானின் ஒருங்கமைப்பில் சி.ப.ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சியை முன்னிலைப்படுத்தி தமிழக மக்களுக்கான தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்தார்.2016,2019,2020 தமிழ்நாட்டு தேர்தலில் தனித்து களமாடிய தமிழ்த்தேசியப் போராளி செந்மிழன் சீமான்.செந்தமிழன் சீமான் 2020 ஆம் ஆண்டுத் தேர்தலில் 30இலக்கம் (30,000,00)தமிழ்த்தேசியபோராளிகளை ஒருங்கமைத்து வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

சீமானின் ஆளுமை தமிழ்நாட்டு மண்ணில் பயணிக்கின்ற எந்த அரசியல்வாதியிடமும் இல்லை. காரணம் தேசியத்தலைவரின் வரலாற்றைப்படித்து திராவிட ஆரிய இந்துத்துவ அரசியலை தமிழ்த்தேசியப் பரப்பில் சுக்குநூறாக்கிய தமிழ்த்தேசிய வரலாற்றைப் படைக்கின்ற பெருமை செந்தமிழன் சீமானுக்குரியது.

தோழர் தியாகு  தேவையற்றமுறையில் தமிழ்த்தேசியப் பணிக்குரிய மறைமுக எதிர்ப்பை முன்னெடுக்கும் போது தோழரின் அரசியல் அறிவை ஆளுமையை மிகவும் பலவீனப்பட்டதாக தமிழ்நாட்டு தமிழீழ புலம்பெயர் இளம்தமிழர்கள் அளவிட்டிருக்கிறார்கள்.தோழர் தியாகு அவர்கள் எந்தவிதமான அடிப்படை அரசியல் அறிவில்லாத தமிழ்நாட்டை திருட்டு திராவிட நாடாக மாற்றுவதற்கு தமிழை காட்டுமிராண்டிமொழி என்று சொன்ன வெங்காய இராமசாமியின் வழியில் வந்த திராவிட திருவாளர்களுக்கு முண்டு கொடுக்கிறார்.திராவிடரால் மாநில அரசை சுரண்டியும் மத்திய அரசுக்கு அடிமையாகவும் டெல்லியில் குறட்டை விட்டு படுத்துறங்கிய அரசியலைசெய்தவர்களை ஆதரிப்பதும் அவர்களின் அடிமைத்தனத்தை பட்டறிவாக முன்வைத்து ஒப்பிடுவது என்பது தமிழ்த்தேசியத்தையும் தேசியத்தலைவரையும் இழிவுபடுத்துவதாகும்.

தமிழ்நாட்டு மண்ணில் 2009 முன் தமிழ்த்தேசிய அரசியலை விரிவுபடுத்தத் தெரியாத பலரில் தோழர் தியாகு முதன்மையானவர்.

உலக அரங்கில் தமிழ்நாட்டுத் தேர்தலில் குவாட்டருக்கும் புரியாணிக்கும் பணம் கொடுத்து வாக்கை வாங்கிய திராவிடத்தை மெல்ல மெல்ல வீழ்த்திக்கொண்டிருப்பது தமிழ்த் தேசியம் மட்டுமே.உலக வரலாற்றில் 234தொகுதிகளிலும் இளம் கல்விமான்களையும் தமிழ்த்தேசிய வரலாற்றைப் படித்து தமிழ்நாட்டு அரசியலில் 117 பெண் தமிழ்த்தேசியப் போராளிகளையும் 117 ஆண் தமிழ்த்தேசியப்போராளிகளையும் தமிழ்நாட்டு அரசியலில் களமாட வைத்த தமிழ்த்தேசியப் போராளி செந்தமிழன் சீமான்.தமிழ்த்தேசியத் தலைவரின் சிந்தனைத்துளியான வரலாற்றைப்படி வரலாற்றைப்படை  வரலாறாகு என்ற கொள்கையோடு கடந்த 11 ஆண்டாக 3000000 தமிழ்த்தேசியப் போராளிகளை தமிழ்நாட்டில் களமாடத் திரட்டிய பெருமைக்குரியவர் செந்தமிழன் சீமான்.இன்றையநிலையில் தமிழ்த்தேசியம் எழுச்சி கொண்டதை உலகத்தமிழர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.தோழர் தியாகு ஐயாவின் கமிழ்த்தேசிய அரசியலில் முன்னோக்கிய அறிவோ ஆளுமையோ இல்லையென்பதை தமது வாய்மொழியால் வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.

உலகத்தமிழர்கள் தோழர் தியாகு அவர்களின் கடந்தகாலத்தில் தமிழ்த்தேசியஅரசியலுக்கு நன்றியோடு வாழ்த்துகிறோம்.

இன்றைய சூழலில் தோழர் தியாகு ஐயா அவர்கள் அரசியல் பேசுவதை நிறுத்தினால் மிகமிகப்பெரிய சிறப்பாகும். புலம்பெயர் மண்ணில் போலித்தமிழ்தேசியம் பேசும் சிலரின் இழிவான பணி மக்களுக்கு நல்ல தெளிவைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

உங்கள் போலித்தமிழ்த்தேசியத்தால் மக்கள் விழித்துக் கொள்கிறார்கள். தொடரட்டும் உங்கள் பணி. உங்கள் பணியால் நாம் தமிழரின் வெற்றியை உறுதி செய்கிறீர்கள். வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *